உதவி வேண்டாம்.; ரஜினி அங்கிளை பார்க்கனும்…; நேர்மை சிறுவனின் ஆசை

Erode boy 6 years Yaasin handed 50000 rupees wants to meet Rajinikanthஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யாசின், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த வாரம், பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனது கண்களில் தென்பட்டது ஒரு பை. சாலையோரத்தில் நாதியற்று கிடக்கும் அந்தப் பையை திறந்து பார்த்த சிறுவன் திகைத்து நிற்கும்படி கத்தை கத்தையாக பணம்.

மொத்த பணத்தையும் ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார்.

பணத்தைப் பார்த்து சிறுவனுக்கு வராத ஆசையைக் கண்டு வியந்த போலீசார், அவன் நேர்மைக்கு ஒரு சல்யூட் அடித்தனர்.

யாசினின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துகளும் கூறினார்.

மேலும் பலரும் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தபோது யாசினின் பெற்றோர்கள் அதனை மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்ய தயாராக உள்ளதாகக் கூறினார்கள்.

“உதவிகள் எதுவும் வேண்டாம். ஆனால் ரஜினி ஆங்கிளை நேரில் பார்க்கணும், நான் அவருடைய ரசிகன். எனக்கு அவரை பார்க்கணும் ரொம்ப நாள் ஆசை” என்று கூறியுள்ளான்.

நேர்மையாக வாழ நினைக்கும் இந்தச் சிறுவனின் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம், ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடுகள் செய்வோம் என்று மக்கள் மன்றத்தினர் உறுதி அளித்துள்ளனர்.

Overall Rating : Not available

Latest Post