தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா’ படத்துக்குப் பின் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தொடங்கினார் கெளதம் மேனன்.
இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
இப்படத்தின் நடுவே விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தையும் தொடங்கினார் கவுதம்.
இந்நிலையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் பாடலை வெளிட்ட கவுதம் இசையமைப்பாளர் யார்? என்பதை சொல்லவில்லை.
அதற்கு பதிலாக மிஸ்டர்.எக்ஸ் என்று கூறிவந்தனர்.
‘மறுவார்த்தை பேசாதே’ மற்றும் ‘நான் பிழைப்பேனோ’ என்ற இருபாடல்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், மிஸ்டர்.எக்ஸ் என்ற புதிருக்கு தீபாவளியன்று (நாளை அக். 18) விடை தெரியும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மேலும் ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலின் மற்றொரு வெர்ஷன் தீபாவளி அன்றே வெளியாகும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Enai Noki Paayum Thota movie music composer updates