காரியத்திற்காக தமிழச்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்களா..? திரையுலகத்திற்கு புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புகள் கடிதம்

காரியத்திற்காக தமிழச்சிகள் எந்த எல்லைக்கும் செல்வார்களா..? திரையுலகத்திற்கு புலம்பெயர் ஈழத்தமிழ் அமைப்புகள் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

family-man-2உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்த கடிதம்…

‘தி பேமிலி மேன் 2’ திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான பார்வையை முன்வைத்திருப்பதை கண்டிக்கவும் இனிமேல் இது போல் தொடராமல் இருக்கவும் நாங்கள் எடுக்கும் முயற்சியை உங்கள் முன் வைத்து அதன் மூலமாக மக்களுக்கு எங்களின் நிலைப்பாட்டை பதிவு செய்ய விரும்புகிறோம்.

முதல் கட்டமாக பேமிலிமேன் 2 இணைய தொடரை உருவாக்கிய அமேசானின் தலைமை அலுவலங்களுக்கு எங்களின் ஆட்சேபனையை தெரிவித்து வருகின்றோம்.

அத்துடன் புலம்பெயர் வாழ் நாடுகளில் தன்னெழுச்சியாக தமிழ் மக்கள் அடையாள ஆர்ப்பாட்டங்களை கோவிட் விதிமுறைகளுக்கமைய ஒழுங்கு செய்து வருகின்றனர்.

இதன் முதல் கட்டமாக நேற்று இலண்டனில் அமேசான் காரியாலத்தின் முன் ஓர் அமைதிவழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இது போன்ற தொடர்கள் நம் தமிழக மண்ணில் நம்மோடு தாய் உறவுகளாக வாழும் எங்கள் சொந்தங்களையே பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வருத்தமளிக்கிறது.

அதாவது இந்த தொடரில் நடித்தவர்கள், எழுதியவர்கள் என தமிழக மண்ணில் இருந்து சிலரால் இப்படி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் அறியாமையாக விளக்கிட நினைத்தாலும் இவை எம் மனதை மிகவும் காயப்படுத்தி வலியை அதிகரிக்கிறது.

எனவே வருங்காலத்தில் இது போல் ஒரு படைப்பில் நம் கலைஞர்களோ எழுத்தாளர்களோ இயக்குனர்களோ இணைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உலகம் முழுதும் வாழும் தமிழர் அமைப்புகள் மூலமாக இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம்.

Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Irish Tamils Forum (ITF), La Maison du Tamil Eelam (MTE), Norwegian Council of Eelam Tamils (NCET), National Council of Canadian Tamils (NCCT), Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa) மற்றும் United States Tamil Action Group (USTAG) ஆகிய அமைப்புகள் இது தொடர்பாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறோம்.

‘தி ஃபேமிலி மேன் 2’ வலைத் தொடர் “ஒரு கற்பனையான படைப்பு” என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், ‘ஈழத் தமிழர்கள்’, ‘பருத்தித்துறை’, ‘ஈழம்’ மற்றும் ‘வட இலங்கை’ ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழம் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகின்றது.

“ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது.

மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டு சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன “.

விடுதலைக்காக போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது.

தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். “திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர்.

ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்,” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படிக்கு

புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் அமைப்புகள்

உடனடித் தொடர்புகளுக்கு 00447814486087 அல்லது [email protected] பயன்படுத்தலாம்.

Contact details:

Australian Tamil Congress (ATC) – T: +61 300 660 629, Email: [email protected]

British Tamils Forum (BTF) – T: +44 (0) 7814 486087, Email: [email protected]

Irish Tamils Forum (ITF) – T: 00353 899592707, Email: [email protected]

La Maison du Tamil Eelam (MTE) – T: +33 652725867, Email: [email protected]

Norwegian Council of Eelam Tamils (NCET) – T: +47 90 64 16 99, Email: [email protected]

National Council of Canadian Tamils (NCCT) – T: +1.416.830.7703, Email: [email protected]

Solidarity Group for Peace and Justice (SGPJ – South Africa) – Email: [email protected]

United States Tamil Action Group (USTAG) – T: +1(202) 595 3123, Email: [email protected]

On behalf of the Eelam Tamil diaspora organisations around the world we write this letter to seek your support for our campaign against the web series Family man 2.

Eelam Tamil diaspora organisations against the web series Family man 2

மரண விளிம்பிலிருக்கும் கனடா ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய கமல்

மரண விளிம்பிலிருக்கும் கனடா ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanஉலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் சாகேத்.

இந்த ரசிகர் மூளைப் புற்றுநோயால் (மூன்றாம் கட்ட பாதிப்பு) பாதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு தன் அபிமான ஹீரோ கமல்ஹாசனிடம் பேசவேண்டும் என்பது வாழ்நாள் ஆசையாம்.

இதுகுறித்து அவரும் தனது உறவினர் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்

இந்த தகவல் கமல்ஹாசனை சென்றடைந்துள்ளது.

இதனையறிந்த கமல்ஹாசன், சாகேத்துடன் வீடியோ காலில் பேச முடிவெடுத்து, சாகேத்தை அழைத்துப் பேசியுள்ளார்.

10 நிமிடங்களுக்கும் மேலாக நீண்ட உரையாடலில், அவருடனும் அவர் குடும்பத்துடனும் பேசிய கமல்ஹாசன், அவர் விரைவில் குணமடைய நம்பிக்கை வார்த்தைகளை அளித்தார்.

சாகேத், தனது மகனின் செல்லப்பெயர் விருமாண்டி என்பதை பேசும்போது தெரிவித்தார்.

மேலும், கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேச ஆசை என்று அவர் சொல்ல நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று பதிலளித்தார் கமல்.

கமல்ஹாசனின் கனிவான இந்த செயலைப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Mr. Kamal Haasan connected via zoom call to surprise his fan Mr. Saketh who has been diagnosed with terminal brain cancer (stage 3).

He interacted with him and his family for more than 10 minutes and gave him words of encouragement to help him fight his illness.

விஜய் பெயரை தன் பெயருடன் இணைத்து பெயரை மாற்றிக் கொண்ட அபி சரவணன்

விஜய் பெயரை தன் பெயருடன் இணைத்து பெயரை மாற்றிக் கொண்ட அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Vishwaகேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன்.

இதில் ‘மாயநதி’ படத்தில் அபி சரவணன் & வெண்பா ஜோடியாக நடித்திருந்தனர்.

இதில் எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் கேரக்டரை செய்திருந்தார் அபி் சரவணன்.

தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது பெயரை *’விஜய் விஷ்வா’ ( Vijay Vishwa )* என்று மாற்றி கொண்டுள்ளார்.

இன்று முதல் அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.

*VIJAY VISHWA – SOCIAL MEIDA PAGES*

https://www.instagram.com/vijayvishwaofficial/

https://www.facebook.com/VijayVishwaOfficial

https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg

VIJAY VISHWA – SOCIAL MEIDA PAGES

https://www.instagram.com/vijayvishwaofficial/

https://www.facebook.com/VijayVishwaOfficial

https://www.youtube.com/channel/UCvrEcAu214Rl4FK7tGMnpsg

Actor Abi Saravanan changed his name

உலகையே மிரள வைத்த கேரக்டரை விஜய்க்காக டிசைன் செய்த மிஷ்கின்

உலகையே மிரள வைத்த கேரக்டரை விஜய்க்காக டிசைன் செய்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mysskin vijayஜேம்ஸ் பாண்ட் என்றால் நம் நினைவில் வருவது… கோட் சூட், துப்பாக்கி, கூலிங் கிளாஸ்.. கம்பீரமான ஒரு உருவம்.

இதற்கான இலக்கணத்தை வகுத்தவர் தான் ஷான் கானரி.

7 பாண்ட் படங்களின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் சிலர் நடித்தாலும் ஷான் கானரிதான் இதுவரை பெஸ்ட் என ரசிகர்களே சொல்கின்றனர்.

‘டாக்டர் நோ’ படத்தில் ஷான் கானரி பேசிய அந்த ‘பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்’ வசனம் உலகம் முழுக்க பிரபலமானது.

ஷான் கானரி தனது 90வது வயதில் கடந்த 2020ல் காலமானார்.

இவர் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்க மறுத்த பிறகு டேனியல் க்ரெய்க் உள்ளிட்டவர்கள் நடித்தனர்.

இதுவரை 4 ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ படங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்துள்ளார் டேனியல் க்ரெய்க்.

உலகையே மிரள வைத்த பேச வைத்த இந்த ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரை தற்போது நடிகர் விஜய்க்காக உருவாக்கி வைத்திருக்கிறாராம் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின் நேற்று ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்

அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில்.. தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு *ஜேம்ஸ் பாண்ட்* என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின்

மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு இயக்குனர் மிஷ்கின் *பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரீயா தேசிய விருதை வாங்குவார்* என்றார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார்.

Mysskin talks about working with Vijay

இந்தியாவில் ‘அட்ரஸ்’ தொலைத்த ஊரில் அதர்வா..; உண்மையை உடைக்கும் ‘கு பூ கொ பு’ டைரடக்டர்

இந்தியாவில் ‘அட்ரஸ்’ தொலைத்த ஊரில் அதர்வா..; உண்மையை உடைக்கும் ‘கு பூ கொ பு’ டைரடக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaa in addressதனது முதல் பட டைரக்‌ஷனான “குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்” படத்தில் அனைவரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றவர் இயக்குனர் இராஜமோகன். இதை அடுத்து “வானவராயன் வல்லவராயன்” படத்தை இயக்கினார்.

இதை தொடர்ந்து “அட்ரஸ்” என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவருகிறார் இராஜமோகன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வாமுரளி நட்புக்காக நடித்து கொடுத்து அசத்தியுள்ளார்.

உண்மை சம்பவத்தில்.. முக்கிய கேரக்டரான இதை கேட்டவுடன் நடித்துக் கொடுத்துள்ளார், அதர்வாமுரளி.

இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு ஸ்டண்ட் காட்சியும், புரட்சிகரமான பல காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும். இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா,
தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்:சினேகன்,மோகன் ராஜன், ‘கானா’ ஹரி, எடிட்டிங்:தியாகு,
ஸ்டில்ஸ்: குமார், சண்டைப்பயிற்சி:சில்வா,
மக்கள் தொடர்பு: ஜான்சன்

இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது.

கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் & டீசர் இன்று பரபரப்பாக வெளியாகியது.

youtu.be/zK4ClPU7GOg

Atharvaa’s next film is titled as Address

தமிழை தவிர்க்கும் தளபதி.; BEAST டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

தமிழை தவிர்க்கும் தளபதி.; BEAST டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் அவரின் ‘தளபதி 65’வது திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார்.

இன்று விஜய்யின் பிறந்த நாள் (ஜூன் 22ஆம் தேதி) ரசிகர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு நேற்று 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தளபதி 65 பட டைட்டில் & பர்ஸ்ட் லுக் ரிலீசானது.

தளபதி 65 படத்திற்கு BEAST என தலைப்பு வைத்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.

இந்த இரண்டு போஸ்டர்களிலும் ஆங்கில எழுத்துக்களே இருந்தன. தமிழே காணவில்லை.

சமீபகாலமாக விஜய் தன் படங்களுக்கு மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் என வேற்று மொழி பெயர்களையே வைத்தார்.

இப்போதும் தன் படத்திற்கு ‘பீஸ்ட்’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தன் ட்விட்டர் பதிவில்…

“நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய் மொழியான
#தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? Master, Bigil, படங்களை தொடர்ந்து #Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?
@actorvijay https://t.co/VoqtagIqDY

என விஜய்யிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

VCK party condemns Vijay’s new movie title Beast

More Articles
Follows