10 & 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் ALL PASS..?..; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

sengottaiyanஈரோடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது…

“தமிழகத்தில் தற்போது 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. 94% மாணவர்கள் வருகிறார்கள்.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர வாரத்தில் 6 நாட்கள் (திங்கள் முதல் சனி) பள்ளிகள் நடைபெறும்.

பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெறும்.

தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்.

பள்ளி வேலை நாட்களை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்விற்கான அட்டவணை உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.

10, 12ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும்.? மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்ட போது ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

Education Minister Sengottaiyan talks about school reopen for Primary students

Overall Rating : Not available

Latest Post