தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
வெற்றி ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்து வருகிறார்.
இதன் முதற்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தாலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கவில்லை.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிக்கட்சி அறிவிப்பு & மாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.
இதனால் சினிமாவில் நடிப்பாரா? அல்லது அதையும் ஒத்தி வைப்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி எல்.ரூபனிடம் ‘அண்ணாத்த’ பட அப்டேட் கேட்டுள்ளார் ஒரு ரசிகர்.
அதற்கு பதிலளிக்கையில்… “விரைவில் அப்டேட் வரும். நானும் காத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.
Editor Ruben about Rajinikanth’s Annaatthe update
