திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ 89 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ரூ 89 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jagathrakshakan mpதமிழகத்தில் பிரபல கட்சியான திமுக வைச் சேர்ந்த எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் சந்தீப் ஆனந்த் இருவரும் RBI அனுமதி வாங்காமல் சிங்கப்பூரை சேர்ந்த சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

அதாவது விதிகளுக்கு புறம்பாக சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

மேலும் அவர்களது தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு மற்றும் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சொந்த மதிப்பு ரூ.89.19 கோடி மதிப்பாகும்.

ED seizes Rs 89-cr properties of DMK MP S Jagathrakshakan and his family

ஏன் NEET Exam வேண்டாம்னு பசங்கள பயமுறுத்துறீங்க..? கோச்சிங் கொடுப்போம்.. – ஆர்த்தி அட்வைஸ்

ஏன் NEET Exam வேண்டாம்னு பசங்கள பயமுறுத்துறீங்க..? கோச்சிங் கொடுப்போம்.. – ஆர்த்தி அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress harathiமத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். ஒரு வாரத்தில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து நடிகை ஆர்த்தி தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

எனதன்பு மாணவ உறவுகளே…உங்களுடைய சக்தி ஆளப்பெரியது எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.நீட் தேர்வு நீங்கள் மனம் வைத்தால் தைரியத்துடன் எதிர்கொன்டாள் நிச்சயம் வெற்றி பெறும் முழுஆண்டு தேர்வு போல என்று முதலில் மனதில் பதியவையுங்கள்.. சுலபமாகும்..இனி #Suicide வேண்டாம் pls #RIPJodhidhurga

ஏன் #NEETExam வேண்டாம்னு சொல்லி படிக்கிறபசங்களை பயமுறுத்தி சரியா படிக்கவிடாம பண்றீங்க?? அதுக்கு பதிலா இருக்கப்பட்டவங்க எல்லாம் சேர்ந்து எல்லா studentsக்கும் நல்ல couching கொடுப்போம். உற்சாகபடுத்துவோம்!!students exam வேண்டாம்னு சொல்லல பயப்படறாங்க அந்த பயம் தான் போக்கனும்..

Free Coaching centers nadathanum…all India one education system for students will work out… let’s motivate them not discourage nor degrade our students..

என பல பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

actress harathi tweet on neet exam

NEET பயம்: படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்பதை சொல்லி கொடுங்கள். – சேரன்

NEET பயம்: படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்பதை சொல்லி கொடுங்கள். – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director cheranமத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகின்றனர்.

இது குறித்து நடிகர் & இயக்குனர் சேரன் கூறியுள்ளதாவது…

படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு இந்த குழந்தைகளுக்கு எந்த பள்ளியில் சொல்லிக்கொடுப்பது.. இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. முதலில் மாணவர்களுக்கு தேவை படிப்பே இல்லையென்றாலும் பிழைக்கலாம் என்ற பயிற்சி. மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள்…

@CMOTamilNadu உயிர்கள் இழக்கப்படாமலிருக்க உடனே நீட்டை ரத்து செய்ய உங்கள்அம்மா எடுத்த முடிவை கையிலெடுத்து போராடுங்கள். எதிர்கட்சிகள் தங்கள் குரலை வலுவாக பதிவுசெய்து இனிஒரு உயிர் இழக்காமல் தடுக்கவும்.@draramadoss @mkstalin @thirumaofficial @maiamofficial @PMOIndia @NaamTamilarOrg

கூறியும் செவிகொடுக்காத மத்திய அரசை தேர்தல் களத்தில் வீழ்த்தி அதற்கான பலம் கொண்ட கட்சி ஆட்சிக்கு வந்து அதிகாரத்தின் துணையோடு தான் எதிர்கொள்ள முடியும். நீட் தேர்வு அவசியமற்றதுதான்.. போராடுவது நம் உரிமைதான். ஆனால் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது என் கடமை. அதை செய்தேன். #BanNEET

தங்கை அனிதாவின் மரணத்தின் போதே நான் எழுதிய கவிதை. வாக்காளன் குரல் என்ற எனது டுவிட்டர் ஐடியில். இங்கே யாரும் நீட்டை ஆதரித்து கொடி பிடிக்கவில்லை. இது தெரியாத மகான்களுக்கு பதில் சொல்ல அவசியமில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என முதல்வராய் இருந்த ஜெயலலிதா அவர்களே #BanNEET https://t.co/TU6zMTPwWG

Tamil director Cheran about students suicide in tn

விரும்பினாலும் விரும்பா விட்டாலும் திணிப்பு.; நீட் தேர்வை எதிர்கொள்ள அமீர் அட்வைஸ்

விரும்பினாலும் விரும்பா விட்டாலும் திணிப்பு.; நீட் தேர்வை எதிர்கொள்ள அமீர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாளை 2020 செப்டம்பர் 13 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அமீர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில்..

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நம் மீது வழியே திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது.

நீட் தேர்வுக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கூட, இந்த தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் நமக்கு இருக்கிறது. உங்களால் நிச்சயம் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.

உங்களால் முடியும் என்ற நம்பிக்கையோடும், உங்களது பெற்றோர்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, நீட் தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயமாக சூழ்ச்சிகளில் நாம் தோற்றுவிட கூடாது என்ற காரணத்திற்காகவும், எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். வெற்றி உங்கள் பக்கம். வாழ்த்துகள். என்று கூறியிருக்கிறார்.

Director Ameer requests students who appear neet exam

நீட் தேர்வு பயம்.; மாணவர்கள் தற்கொலை.. ; கமல் & வைரமுத்து வருத்தம்

நீட் தேர்வு பயம்.; மாணவர்கள் தற்கொலை.. ; கமல் & வைரமுத்து வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan vairamuthuமத்திய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு மாணவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன் அரியலூரில் நீட் அச்சம் காரணமாக விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தால் என்ன செய்வது? என்ற காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர் தற்கொலைகள் மாணவர்கள் & பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் மநீம தலைவர் கமல்ஹாசன்…

“மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே #NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன?” என்றார்.

மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.

நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை..” என தெரிவித்துள்ளார்.

வைரமுத்து கூறியுள்ளதாவது…

ஓ!
மாணவ மகன்களே! மகள்களே!

நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.

பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.

அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.

நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.

நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.
#NEET #BanNEET

kamal haasan and vairamuthu tweets on NEET

இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்ல..; அண்ணாத்த ஆர்டர் போட்டும் அடங்காத ரசிகர்கள்

இப்ப இல்லேன்னா எப்பவுமே இல்ல..; அண்ணாத்த ஆர்டர் போட்டும் அடங்காத ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை.

எனவே நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்க வேண்டும் சின்னத்தை அறிவிக்க வேண்டும் என தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி வந்தனர்.

இதனையடுத்து இனி யாரும் ரஜினி தொடர்பாக போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டது ரஜினி தலைமை மக்கள் மன்றம்.

ஆனாலும் இதனை மீறி ரஜினி ரசிகர்கள் திண்டுக்கல் & கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில்…
“நாச்சிக்குப்பத்தின் மன்னன் ஆட்சி மலரட்டும்”, “திராவிட அரசியல் இனி போதும்”…

“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்; இப்போ இல்லைன்னா இனி எப்பவும் இல்லை” என்ற வாசகங்கள் உள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

rajini fans posters

Rajini Fans put up posters in many districts urging him to take political plunge

More Articles
Follows