தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
செப்டம்பர் 30ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் முறை ரத்து என தமிழக அரசு அறிவிப்பு.
செப். 1ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்.
தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும்
வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.
கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் உண்டு
75 பணியாளர்களுடன் சினிமா சூட்டிங் நடத்த அனுமதி. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்.
தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும்.
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. ஆனால் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி கிடையாது.
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி
ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.. இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்.
மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதி.
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் முறை ரத்து.
செப்டம்பர் 30ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.
ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.
மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் அனுமதி. மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட செப்.15 வரை அனுமதி கிடையாது.
டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணிவரையிலும் இயங்க அனுமதி.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி.
திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு வெளியூர் சுற்றுலாத்தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற வேண்டும்.
E Pass Cancel Shooting Start TN Govt extends lockdown till Sept 2020
