மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது

மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DVM Seva Paalam announces 2018 awards Big recognition for Kabilan Vairamuthus Yenthiru Anjali Yenthiruமருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

கடந்த 20 வருடங்களாக பல்வேறு சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு பணிகளை ஆற்றிவரும் DVM சேவா பாலம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வெறு துறைகளில் சிறந்த பங்களிப்புக்கான விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

எளிய மக்களுக்கான மருத்துவ சேவைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனையின் முதன்மையர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், சிறந்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ரமாதேவி, மகளிர்க்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையின் சிலை தடுப்புப் பிரிவு ஆய்வாளர் காஞ்சனா ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன் வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர் அய்யாசாமி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள்.

இதற்கான விழா வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி R.ஹேமலதா தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

அயர்லாந்து தூதர் ராஜீவ் மேச்சேரி மேச்சேரி, மனித நேயர் வரதராஜன், ஊடகவியலாளர் சுமந்த்.சி.ராமன், போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பத்திரிகை உலகில் பாலம் என்ற மலரும் வெளியிடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை DVM சேவா பால நிறுவனர் இருளப்பன் மற்றும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

DVM Seva Paalam announces 2018 awards Big recognition for Kabilan Vairamuthus Yenthiru Anjali Yenthiru

ராதிகா உள்ளிட்ட 12 சாதனையாளர்களுக்கு மகளிர் ஆளுமை விருதுகள் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்

ராதிகா உள்ளிட்ட 12 சாதனையாளர்களுக்கு மகளிர் ஆளுமை விருதுகள் வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vels university Panache Events & Branding The Womens Empowerment Award 2018வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக அகடமிக் துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், “2018 மகளிர் ஆளுமை விருதுகள் நமது பயணத்தில் ஒரு மைல்கல்.

ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இன்று மாநில கவர்னராக உயர்ந்திருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் இன்றைய இளம் தலைமுறை மகளிருக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்து வந்திருக்கிறார், அவர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது எங்களுக்கு பெருமை.

பல்வேறு துறை சார்ந்த 12 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தேர்வு செய்த நடுவர் குழுவுக்கும் நன்றி என்றார்.

1992ல் 36 மாணவர்களுடன் துவங்கப்பட்ட எங்கள் வேல்ஸ் கல்வி நிறுவனம் இன்று 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5000 ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது.

அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், அப்படி அவர்களின் ஆளுமையை சிறப்பிக்க இந்த விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம், ஜார்க்கண்ட் மாநில மேதகு ஆளுனர் திரௌபதி முர்மு கலந்து கொள்வது மிகச்சிறப்பான விஷயம் என்றார் வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ்.

விருது பெற்றுவர்கள் சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “மகளிர் ஆளுமை விருதுகளை எங்களுக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. பெண்களாகிய நம்மை யாரும் இயக்க முடியாது, சர்வமும் நமக்கு நாமே. பல்வேறு துறைகளில் இருந்து நாங்கள் விருதுகளை பெற்றிருக்கிறோம்.

நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.

தமிழில் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த சிறப்பு விருந்தினர் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் மேதகு திரௌபதி முர்மு, “இந்த நவீன சமூகத்தில் இந்தியா மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. இந்தியா நமது சாதனையார்களை கண்டு பெருமை கொள்கிறது.

சின்னபிள்ளை அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைமிகு பெண்மணி. சமூக விரோத சக்திகளை ஒழிக்க, சமூக நிர்வாகம் தேவை.

கல்வி நிறுவனங்கள் சமூகத்தில் எல்லோரையும் ஊக்குவிக்கின்றன.

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

விழாவில்…

1. திருமதி ராதிகா சரத்குமார் – கலை மற்றும் பண்பாடு
2. திருமதி எஸ்.மலர்விழி – கல்வி
3. திருமதி சி.மகேஸ்வரி ஐபிஎஸ் – பொதுச்சேவை
4. டாக்டர் ரெஜினா ஜே முரளி – கல்வி
5. திருமதி ரூபி பியூட்டி – உடல் பயிற்சி.
6. திருமதி விஜயலக்‌ஷ்மி தேவராஜன் – சமூக சேவை
7. டாக்டர் கே.பிரேம் சாந்தா – கல்வி
8. திருமதி ஷீபா பிரின்ஸ் – தொழில்முனைவோர்
9. டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் – கல்வி
10. திருமதி விமலா பிரிட்டோ – சமூக சேவை
11. திருமதி இந்திரா ராஜேந்திரன் – கல்வி
12. திருமதி சித்ரா லட்சுமி – தொழில்முனைவோர்

ஆகிய 12 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

கல்லூரியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. வேல்ஸ் பல்கலைக்கழக துணை தலைவர் ஜோதிமுருகன், ரெஜிஸ்ட்ரர் வீரமணி, சேவியர் பிரிட்டோ, கிரோத் குமார் ஜேனா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Vels university Panache Events & Branding The Womens Empowerment Award 2018

Vels university Panache Events & Branding The Womens Empowerment Award 2018

விஷால் என்ற நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார்.. கீர்த்தி சுரேஷ் பெருமிதம்

விஷால் என்ற நண்பர் எனக்கு கிடைத்திருக்கிறார்.. கீர்த்தி சுரேஷ் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and keerthy sureshவிஷால் தயாரித்து நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

அக்டோபர் 18ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு மிகப்பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக பிரஸ்மீட்டில் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அதில் கீர்த்தி சுரேஷ் பேசியது :-

லிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன் மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று. அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது அந்த கதாப்பாத்திரம் கேட்ட பின் அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.

மகாநதி படபிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஷாக இருந்தது. விஷால்,லிங்குசாமி அவர்களுடன் படபிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது. மகாநதிக்கு பின் நான் விருப்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான். பிருந்தா சார் ஒவ்வொரு வசத்தையும் அதற்கெற்றவாரு எனக்கு சொல்லிகொடுத்தார்.

படத்தில் பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி. யுவன் அவர்களுடைய இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது. யுவனுக்கு நன்றி. பிரவீன் சாருக்கு நன்றி. விஷால் எனக்கு இந்த படத்தின் மூலம் நண்பர் கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி. சக்தி அனைவரையும் அழகாக காட்டியுள்ளார். நன்றி. – கீர்த்தி சுரேஷ்

விஜய்-சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை சண்டக்கோழி…: விஷால்

விஜய்-சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதை சண்டக்கோழி…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and suriyaவிஷால் நடித்து தயாரித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன் கே. எல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

விஷால் பேசியது :-

25படங்களில் என்னோடு பணியாற்றிய அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சண்டக்கோழி பாகம் ஒன்னு எனக்காக எழுதப்பட்ட கதை அல்ல. அது விஜய் மற்றும் சூர்யாவுக்காக எழுதப்பட்டது. கதை பற்றி கேள்வி பட்டதும் லிங்குசாமி எனக்கு இருபது வருட நண்பர் அந்த உரிமையில் அந்த படத்தை நான் நடிக்கின்றேன் என்று கூறினேன் அப்போது செல்லமே படம் வெளிவரவில்லை.

சண்டக்கோழியில் என்னை ஆக்ஷன் ஹீரோவாக நிறுத்திவிட்டார். அங்க தொடங்கியதுதான் என் வாழ்கை. கனல் கண்ணன் மாஸ்டர் அந்த படத்தில் கொடுத்த தைரியம் ஆக்ஷன் ஹீரோவாக என்னை வெளிப்படுத்தியது. தாவணி போட்ட தீபாவளி பாடல் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது.

பிறமாநிலத்திலும் பந்தைய கோழி என்று வெளியிட்டார்கள். லிங்கு சாமி நினைத்திருந்தால் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்திருக்கலாம். என் அப்பா நினைத்திருந்தால் அப்படத்தை காப்பி ரைட்சுக்கு பல கோடிக்கு விற்பனை செய்திருக்கலாம். ஆனால் என் அப்பா என்னை தெலுங்கிலும் ஹீரோவாக நிறுத்த நினைத்தார் அங்கு இரண்டு வாரத்திற்கு கூட்டம் இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து அலை மோத ஆரம்பித்தனர்.

அன்று முதல் 24படம் முடித்து 25வது படத்திற்காக உங்கள் முன்னால் நிற்கின்றேன். அதுவும் சண்டை கோழியே 25வது படமாக அமைந்தது தான் எனக்கு சாதனையாக தோன்றுகிறது.

கீர்த்தி அவர்களுடைய மற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன். அவர்களுடைய மகாநதி பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறினேன். அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் எழுத்தாளர். நான் படம் இயக்குவேனோ இல்லையோ கட்டாயம் கீர்த்தி சுரேஷ் இயக்குநராக வலம் வருவார்.

வீட்டில் எங்க அப்பாவை எப்படி பார்த்தேனோ அதே போல் செட்டில் ராஜ்கிரன் சாரை பார்த்தேன். லிங்குசாமி என்னிடம் கேட்டார் இரண்டாம் பாகத்தில் சக்தி தான் கேமரா மேன் சரியா என்று கேட்டார். உனக்கு யாரை தோனுகிறதோ அவர்களை வைத்துக்கொள் என்றேன்.

சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை அதைவிட இரண்டு மடங்கு வேலை செய்துள்ளார். இந்த படத்தை முதலில் என்னிடம் சொன்னது தயாரிப்பாளர் பிரவீன் தான். நான் இயக்குநராக வரவேண்டும் என நினைத்தேன் என்னை ஹீரோவாக மாற்றிய அனைவருக்கும் நன்றி.

பிரபு சாருடனோ,ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே கிள்ளி பார்ப்பேன். சண்டக்கோழி -2, பந்தையகோழி-2 இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது.

அதுவும் ஆயுத பூஜை அன்று. பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும். பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி.

அனல் அரசு மாஸ்டர் மூலியமாக உடலில் 100 தையல் வந்து விட்டது.

இயக்குநர் லிங்குசாமி பேசியது :-

நேற்று விஷால் இந்த படத்தை பார்த்து இதில் நடித்தவர்கள் எல்லாரும் அப்படியே உள்ளனர் பதிமூன்று வருடம் ஆனது போல் தெரியவில்லை என்றார். எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

போன படத்தின் பேஜ் ஒர்க்குக்காக கூப்பிட்டாலும் வந்துவிடுவார் எவ்வளவு வேலை,இரண்டு சங்கத்திலும் தலைமை பொருப்பு அதையும் தாண்டி இப்படி மெய்ண்டன் பண்ணுவது மிக பெரிய விஷியம்.

அது அவர்கள் அப்பாவிடம் இருந்து வந்தது அவரும் எப்போதும் சரியாக இருப்பார். எனக்கு முதலில் இருந்தே ஜி. கே பேக்டரி இருக்கும் போதே,நான் முதல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதே தெரியும். அவரை தம்பி,முதலாளி,நண்பன் என எப்படி வேண்டுமானாலும் அழைப்பேன்.

சண்டக்கோழி முதல் பாகம் நடித்த விஷாலை இரண்டாம் பாகத்திலும் உணர்ந்தேன். அவர் அந்த இடத்தில் நடிக்க கூடியவர். மற்ற இயக்குநர்கள் எப்படி என எனக்கு தெரியாது ஆனால் நான் உணர்ந்தேன்.

முதல் பாகத்தில் அதிகமாக மெனக்கிடல் செய்தேன். இரண்டாம் பாகத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளார். நான் சூர்யா,மாதவன்,அஜித் சாருடன் வேலை செய்துள்ளேன். அதன் பின் இவருடன் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவர் வருவதை உணர்ந்தேன்.

இனி கதை மட்டுமே அவருக்கு சரியான முறையில் அமையும். எனக்கும் விஷாலும் இது அருமையான படமாக அமையும் அப்படியொரு குழு அமைந்தது அவ்வளவு உழைப்பை போட்டுள்ளோம்.

நான் கேட்டதை அனைத்தும் செய்து கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. ஒரு வார்த்தையில் கவிதை சொல்ல வேண்டும் என்றால் கீர்த்தி. கீர்த்தி சுரேஷுடன் வேலை பார்த்தது சாவித்திரியுடன் வேலை பார்த்தது போல இருந்தது. மீரா ஜாஸ்மீன் அவர் இடம்,ஹீரோ அவர் இடம்,வில்லன் இடம் இது அனைத்தும் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன்.

எனக்கு சவாலாக அமைந்தது மீராஜாஸ்மீன் கதாபாத்திரம் தான் சரியாக அமைய வேண்டும் என நினைத்தேன். கீர்த்தி தான் சரியாக இருப்பார் என தோன்றியது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இசையமைத்த இருப்பு திரையும் அவர் தயாரித்த படமும் பெரிய வெற்றியை தந்தது. மதன் கார்கி எழுதிய பாடலுக்கு மூன்று நிமிடத்தில் இசையமைத்து கொடுத்தார்.

பாடல் அருமையாக வந்துள்ளது. முத்துக்குமார் அவர் இப்போது இல்லை அவருக்கு நிகராக அருண்பாரதி,ஏகாதசி உள்ளனர்.

பிருந்தாசாரதி சூரியரும் சூரியனும் என்ற பாடலை எழுதியுள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவருடன் முதல் முறையாக பணியாற்றுகிறேன். அவர் தான் படம் விரைவில் வெளிவர முக்கிய காரணமானவர். தென்னவன் சார், சண்முகம் சார் இன்னும் நாலு பாகம் எடுத்தாலும் உடன் இருப்பார்கள்.

சக்தி ரன் படத்தில் ஜீவா சாரின் கடைசி அசிஸ்டன்ட். இந்த படத்தின் வளர்ச்சி அவரை சேரும். 800 பேர் கூட்டத்திலேயே படம் எடுக்கும் விதமாக இருந்தது.

பையா எப்படி காருக்குள்ளையே ஒரு படமோ அதே போல் இது ஒரு திருவிழாக்குள்ளேயே ஒரு படம். ராஜ் கிரன் சார் அருமையாக நடித்துள்ளார். முதல் பாக தயாரிப்பாளர் விக்கிக்கும் நான் நன்றி சொல்ல கடமை கொண்டுள்ளேன். நன்றி -லிங்குசாமி.

விமர்சனம் செய்யும் ஆன்லைன் மீடியாக்களை விளாசிய விஷால்

விமர்சனம் செய்யும் ஆன்லைன் மீடியாக்களை விளாசிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalசண்டக்கோழி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இது விஷாலின் 25வது படம் என்பதால் பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இதற்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் நாயகன் விஷால் பேசும்போது…

“சினிமா விமர்சனங்கள் ஒரு திரைப்படத்துக்கு முக்கியம். ஆனால், ஆன்லைன் மீடியாவில் படம் குறித்து விமர்சனம் செய்பவர்கள், அந்தப் படம் வெளியாகி மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரவர் விமர்சனங்களைப் பதிவு செய்தால், நன்றாக இருக்கும்.

ஒரு சில ஆன்லைன் மீடியாக்களுக்கு இதை என்னுடைய கோரிக்கையாகவே முன்வைக்கிறேன். இதை ஏற்றுக்கொண்டால், நன்றாகயிருக்கும்.

முதல் மூன்று நாட்கள் படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் முக்கியம்.

மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய,பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்” என்றார் விஷால்.

*பரியேறும் பெருமாள்* படத்தை கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ஒளிப்பதிவாளர்

*பரியேறும் பெருமாள்* படத்தை கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

paiyerum perumalபா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு ,
லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் .செப்டம்பர் 28 படம் வெளியாகிறது .

இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.

படப்பிடிப்பை பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்..

பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி பரிச்சயம் இல்லை எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்கசொல்கிறது.

எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரிசெல்வராஜ் .

பரியேறும் பெருமாள் கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பகுதிகள் .

அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள் , தெருக்கள் ,வெயில்
மனிதர்கள் ,விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்கவேணும் கூடவே ஒரு அழகியலும் இருக்கவேண்டும் என்கிற ஆசை.

கதைக்களம் , அதன் வேகம் இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.

40கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும் படம் பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

பட்ட சிரமத்திற்கு பலன்கிடைத்திருக்கிறது. கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும் , தயாரிப்பாளர்
பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாக இருந்தது.

எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது.

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது , திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும் , அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர் பார்க்கலாம்.

More Articles
Follows