1964 கால காதலுக்காக ‘மகாநடி’ படத்தயாரிப்பாளருடன் இணையும் துல்கர்

1964 கால காதலுக்காக ‘மகாநடி’ படத்தயாரிப்பாளருடன் இணையும் துல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dulquer salmaanபெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.

நடிகையர் திலகம் / மகாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும், ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர்.

இது தவிர நந்தினி ரெட்டியின் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது மற்றும் ஜதி ரத்னலுவின் படமும் முடியும் தருவாயில் உள்ளது.

அவர்களின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். “ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை” என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படம் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்ற நேர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது.

நடிகையர் திலகம்/மஹாநடி படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துல்கர் சல்மான் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதே தயாரிப்பாளர்களோட இன்னொரு படத்திலும் இணைகிறார். அவரது சமீபத்திய திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த புதிய படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.

துல்கர் சல்மானின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் கான்செப்ட் போஸ்டர் ஒரு அழகான டெலிகிராமை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள நிழற்படத்தில் துல்கர் ஒரு ராணுவ வீரனாக தோன்றுகிறார், அதில் இரண்டு கைகளும் ஒன்றாக இணைவது ஒரு காதல் பக்கத்தைக் குறிக்கிறது. போர்ப் பின்னணியில் ஒரு காதல் என்பதே படத்தின் மிகவும் ஈர்க்கத்தக்க அம்சமாக உள்ளது. இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

வைஜெயந்தி மூவீஸ் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமாஸ் சார்பாக பிரியங்கா தத், ஸ்வப்னா தயாரிக்கிறார்கள்.

கொரோனா மருந்து விவரங்களை வெளியிட்ட நடிகர் விஷால்

கொரோனா மருந்து விவரங்களை வெளியிட்ட நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalஎவராக இருந்தாலும் என் முன்னால் எல்லாமே ஒன்றுதான் என பலரையும் தாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

இதனால் ஒரு சிலர் உயிரிழந்தாலும் பலர் இந்த நோயிலிருந்து மீண்டு வருகின்றனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் நடிகர் விஷாலும், அவரது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் விஷாலின் உதவியாளர் ஹரி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர்.

அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிலர் கேட்டுக் கொண்டதற்காக.. தாங்கள் பயன்படுத்திய மருந்தின் விவரங்களை வெளியிட்டுள்ளார் விஷால்.

மேலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்தகங்களில் இந்த மருந்து கிடைக்கும் எனவும் விஷால் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கில் தடை மீறி பயணம்.; விமல்-சூரி மீது போலீசார் வழக்கு

ஊரடங்கில் தடை மீறி பயணம்.; விமல்-சூரி மீது போலீசார் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vimal sooriதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இ-பாஸ் இல்லாமல் சில தினங்களுக்கு முன் நடிகர்கள் விமல் சூரி சென்றுள்ளனர்.

அங்கு தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரி வனப்பகுதிக்குள் சென்று அவர்கள் மீன் பிடித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் விமல் மற்றும் சூரி ஆகிய இருவருக்கும் அபாராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் வனத்துறை காவலர்கள் இருவரும் சூழல் காவலர் ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் சூரி மற்றும் விமல் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ஊரடங்கை மீறியது, தொற்று பரவ காரணமாக இருந்ததாக உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்ணாத்த ஆட்டம் அவ்வளவுதான்..; ஆன்மிக அரசியல் ஆரம்பம்..

அண்ணாத்த ஆட்டம் அவ்வளவுதான்..; ஆன்மிக அரசியல் ஆரம்பம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaatthe movieரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ்க்காக சிவா இயக்கி வருகிறார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பார் என கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் இமான் இசையமைத்து வருகிறார். அண்ணாத்த டைட்டில் ட்ராக் ரஜினி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் 2020 தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

எனவே அண்ணாத்த படம் 2021 பொங்கல் பண்டிகைக்காக ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஆனாலும் தற்போது உள்ள சூழ்நிலையால் சூட்டிங் இன்னும் தாமதம் ஆகிறது.

மேலும் கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிந்தால் தான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவேன் என ரஜினி தரப்பு தெரிவித்துள்ளதாம்.

இதனால் 2021 ஏப்ரல் கோடை விடுமுறைக்கு தான் அண்ணாத்த ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் அண்ணாத்த படம் ட்ராப். தர்பார் தான் ரஜினியின் கடைசி படம். இனி அவர் நடிக்க மாட்டார். அண்ணாத்த பட சம்பளத்தை அவர் திருப்பி தரப்போகிறார்.

2021ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் அரசியலில் ரஜினி கவனம் செலுத்த போகிறார் எனவும் தகவல்கள் பரவியது.

ஆனால் அண்ணாத்த தொடர்பான தற்போதைய தகவல்கள் எதுவுமே உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ரஜினியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவர் வந்த உடனே சூட்டிங் தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

ரஜினி படம் என்றாலே ஏதாவது வதந்தி ஒன்றை கிளப்பி விடுவதே சிலரின் வேண்டாத வேலையாக இருக்கிறது என்கிறது அண்ணாத்த தரப்பு.

அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு ஆன்மிக அரசியலில் கவனம் செலுத்துவார் ரஜினி என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ரகிட ரகிட… தனுஷ் பிறந்தநாளுக்கு கர்ணன் & ஜகமே தந்திரம் ஸ்பெஷல்

ரகிட ரகிட… தனுஷ் பிறந்தநாளுக்கு கர்ணன் & ஜகமே தந்திரம் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

அவரது ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷின் மற்றொரு படமான கர்ணன் பட டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வாளை பல கைகள் இணைந்து தூக்கி பிடித்துள்ளனர்.

“நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என கர்ணன் பட டைரக்டர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, யோகி பாபு, நட்டி என்கிற நடராஜன், லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

இன்று மாலை இப்படத்தின் மேக்கிங் வீடியோவம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜோதிகா சூர்யா கார்த்தி படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து கொள்ளட்டும் – ரோகினி தியேட்டர் பன்னீர் செல்வம் பேட்டி

ஜோதிகா சூர்யா கார்த்தி படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து கொள்ளட்டும் – ரோகினி தியேட்டர் பன்னீர் செல்வம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panneer selvamவிமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் ‘ரோகினி’ ஆர்.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார் .அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வது என்று தான் இருக்க வேண்டும்.

இது போல் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதில் அல்ல.எங்களுக்கும் பெரியார் கொள்கைகள் உடன்பாடில்லை என்றாலும் நாங்கள் அது பற்றிப் பேசுவதில்லை .விமர்சிப்பதில்லை. உங்களுக்குக் கொள்கை எதுவாகவும் இருக்கலாம்.

ஆனால் அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படி பேச யாருக்கும் உரிமை கிடையாது. சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கும் விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது.அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனம். வேலு பிரபாகரனுக்கு எதிராக நாங்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.

இதுபோன்று சுமார் 200 இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படிச் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வேலுபிரபாகரனைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவருக்குத் தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

அவரிடம் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது .

அப்போது பேசும்போது,

“கொரோனா லாக்டவுன் தொடங்கி 140 நாட்கள் ஆகிவிட்டன .திரையரங்கு உரிமையாளர்கள் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமமான நிலையில் உள்ளனர்.
அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையாக இருக்கிறது.

இதன் மூலம் 1500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கும் 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் படத்தயாரிப்புகள் இல்லாமல் சினிமா சார்பான இழப்பு என்றால் 3000 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

திரையரங்குகளை எப்போது திறப்பார்கள் என்று அரசு தரப்பில் இருந்து பதில் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் .இப்போது விமானங்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்து விட்டன.

விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து தான் பயணம் செய்கிறார்கள். விமானத்தில் வராத கொரோனா திரையரங்குகளில் மட்டும் எப்படி வரும்?திரையரங்கத்தில் ஏதாவது மாற்றம் செய்யச் சொன்னால் நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

விமானத்தில் அவ்வளவு நெருக்கமாகப் பயணம் செய்யும் போது வராத கொரோனா திரையரங்கில் மட்டும் எப்படி வந்து விடும் என்று நினைக்கிறார்கள்? அரசு திரையரங்கங்களில் ஏதாவது மாற்றங்கள் செய்யச் சொன்னாலும் அதை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

விரைவில் திரையரங்குகள் திறப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழகஅரசைக் கேட்டுக் கொள்கிறோம் .அதற்கான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். “என்றார்.

ஒட்டியில் திரைப்படம் வெளியாவது பற்றிக் கேட்டபோது,

“மக்கள் திரையரங்கம் சென்று படம் பார்க்கத்தான் விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்குத் திருப்தி அளிக்கும். திரையரங்கத்தில் படம் பார்க்கும்போது வரும் திருப்தி வேறு எந்த தளத்திலும் கிடைக்காது .வேறு வழியில்லாமல் இப்போது ஓடிடியில் பார்க்கலாம்.

ஆனால் அதுவே ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல .திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் இரண்டாவது முறை வேண்டுமானாலும் ஓடிடியில் பார்க்கலாம். இதில் ஒரு முழு திருப்தி கிடைக்காது. ஓடிடியில் தமிழில் வெளியிடப்பட்ட இரண்டு படங்களும் தோல்வி அடைந்துள்ளன .

நெட்ப்ளிக்ஸில் வெளியான படங்களும் படுதோல்வி .தமிழில் மட்டுமல்ல இப்படி இந்தியில் வெளியான படங்களும் படுதோல்வி அடைந்து இருக்கின்றன .

திரையரங்கங்கள்தான் சினிமாவிற்கான ஒரே தளம் என்பது எல்லாருக்கும் தெரியும். மக்கள் ஓடிடியை ஆதரிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.” என்றார்.

திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஓடிடி ஒரு வாய்ப்பாக இருக்கிறது என்று ஒரு பேச்சு இருக்கிறதே என்று கேட்டபோது ,

“சிறு படங்களுக்குத் திரையரங்கங்கள் கிடைப்பதில்லை என்று சொல்வது தவறான கருத்து. பல நாட்களாக இந்தப் பொய்யைச் சொல்லி வருகிறார்கள் .

இது மிகவும் தவறான கருத்து . சென்ற ஆண்டு வெளியான 240 படங்களில் 200 படங்கள் சிறு படங்கள்தான். தமிழ்நாட்டில் 1070 திரையரங்குகள்தான் உள்ளன.சென்ற ஆண்டு 240 தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன.

நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்குப் படங்கள் , நேரடி ஆங்கிலப் படங்கள், ஆங்கில டப்பிங் படங்கள், மலையாள, இந்திப் படங்கள் என்று வெளியாகி உள்ளன. இப்படியிருக்கும்போது திரையரங்கம் கிடைக்கவில்லை என்பது பொருத்தமில்லாத வாதம் தானே?

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக திரையரங்குகளை அதிகரிக்க வேண்டும். பெரிய திரையரங்குகளை இரண்டாகவோ மூன்றாகவோ மாற்றி அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சில ஆண்டுகளாகக் காத்திருக்கிறோம்.

ஓடிடியில் வெளியிட்ட சிவகுமார் குடும்பத்துப் படங்களை வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்ததாக பேசப்படுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற போது,

” ஓடிடியில் அவர்கள் படம் வெளியிட முடிவு எடுத்தபோது,எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் இப்படிச் செய்யும்போது நாங்கள் அதிலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும் என்று தான் சொன்னனோம்.

அப்போது அவர்களுக்கு நாங்கள் திரையரங்குகள் கொடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை.

சிவகுமார் குடும்பத்துப் படங்களை அந்த பிளாட்பாரத்திலேயே வெளியிட்டுக் கொள்ளட்டும். இதுதான் எங்கள் நிலை” என்று கூறினார்.

ரோகினி ஆர் .பன்னீர்செல்வம் தமிழ்நாடு வாணியர் சங்கம் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தமிழ்நாடு வாணியர் பேரவை நிர்வாகிகள் ஜி.மோகனசுந்தரம், யூரோ சரவணன், கல்யாணசேகரன், கே. ஞானசேகரன், பி. ஆனந்தன் , எம். சரவணகுமார் , வி.சோபன்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

More Articles
Follows