குடிச்சு சாவாதீங்கடா… குறும்படத்தால் கவர்ந்த இளசுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“ஐயோ வவுத்துக்குள்ள போக வேண்டிய அம்புட்டு சரக்கும், இப்படி வேஸ்ட்டா பூமிக்குப் போகுதே. பின்னே ஏண்டா பூமி சுத்தாது…?” என்று குடிகாரர்கள் நாக்கில் ஜலம் வழிய அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒரே ஒரு காட்சியைதான்.

அது? நாடெங்கிலும் பெண்களே கிளர்ந்தெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கும் அற்புதமான காட்சி.

ஒவ்வொரு வீடுமே குடியின் விஷத்தன்மை பற்றி நன்கு அறிந்திருக்கிறது. காரணம்… அவரவர் வீட்டு செல்லங்கள்தான்! கணவன் குடித்தால் கூட கண்ணீருடன் மன்னித்துவிடலாம்.

ஸ்கூலுக்கு போற பசங்கள்லாம் குடிக்குதே என்கிற ஆத்திரம்தான் இந்த ஆவேச டாஸ்மாக் தாக்குதலுக்கு காரணம். மக்கள் விழித்துக் கொண்ட இந்த அருமையான நேரத்தில், குடியின் தீவிரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது ஒரு ஷார்ட் பிலிம்.

சுமார் 30 நிமிடங்கள் ஓடும் இந்தப்படத்தின் பெயர் ‘இன்பம் என்ற போதையாலே’.

அப்சல் ஹமீது குடிகார இளைஞனாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல பையன் எப்படி கூடா நட்பின் காரணமாக குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். அதன் விளைவாக என்னென்ன நடக்கிறது என்பதை அப்படியே நேரில் பார்ப்பது போல விவரிக்கிறது ‘இன்பம் என்ற போதையாலே’ குறும்படம்.

குறுகிய நேர படமாக இருந்தாலும் அதை பிரச்சார படம் போல எடுக்காமல், படு சுவாரஸ்யமாகவும், திடுக்கிடும் ட்விஸ்ட்டுகளுடனும் இயக்கியிருக்கிறார் அப்துல் கரீம். திரைக்கதை, வசனத்தில் அப்துல் கரீமுக்கு உதவியும் இருக்கிறார் இப்படத்தின் ஹீரோ அப்சல் ஹமீது.

ஷார்ட் பிலிம் மூலம் சினிமாவின் கதவுகளை துணிச்சலாக தட்டிப் பார்க்கும் இளைஞர்கள் கூட்டத்தில் தனியாக கவர்கிறார்கள் இப்படத்தில் பங்குபெற்ற ஒவ்வொருவரும். குறிப்பாக இசை. சாந்தன் என்ற இளைஞர் அமைத்திருக்கும் பின்னணி இசை, படத்தை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.

Drinking awareness short film Inbam endra Bodhaiyaalae

Production banner
PSR FILMS, MAN MADE PICTURES

Starring
Afsal Hameed, Vekkey Simbu, Abdul Karim, Selwyn Tintoo, Ravi Shankar, Jenny Bharathi, Inbasagar, Julliyan, Sandy Senthil, Gopal, Maabu Baasha, Balaji, Pattu, Azar, Thameem, Veera.

Crew.

Producer – Pavithra
Co-producer Ravi Shankar and Varshini sekar.
Director – Abdul Karim.
Story Afsal Hameed.
Screenplay & Dialogues – Abdul Karim and Afsal Hameed. Cinematography – Ameen Associate Cinematographer – Vithagan Suryan
Music Santhan Anebajagane. Sound mixing – Sudharsan Lingam. Editing – Amuthan.
DI – Prakash.
Sfx – Iqbal.
Stills and designs – Gopal.
Subtitles – Sadhana Sruthikeerthi. Production supervisor – Ashik.

சூப்பர் ஸ்டார தெரியும்; பப்ளிக் ஸ்டார தெரியுமா? தப்பாட்டம் பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தப்பாட்டம்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக்கொள்ளும் நாயகியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

இப்படத்திற்கு இசை – பழநி பாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா.

விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Public Star Durai Sudhakar starring Thappattam

‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’… புதிய படம் தயாராகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மானேஜராக இருந்தவர் சங்கர்ராமன்.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கோயில் அலுவலகத்திலே வைத்து கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அதன்பின்னர் அவர்கள் நிரபராதிகள் என விடுதலை ஆகிவிட்டார்கள்.

அப்படி என்றால் அந்த சங்கர்ராமனை யார் கொலை செய்தார்கள்? என்ற விடை யாருக்குமே தெரியாது. (இதுதான் இந்திய சட்டத்தின் நிலை..)

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ’ஆச்சார்யா அரெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது.

இத்ற்கு துணைத் தலைப்பாக அதாங்க டேக் லைனாக, ‘ஒவ்வொரு இந்துவுக்கும் அவமானம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.

கன்னட இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்க, சங்கராச்சாரியராக அனுபம் கெர் நடிக்கிறாராம்.

மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்திலும் மன்மோகன் சிங்காக அனுபம் கெர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sankararaman murder case movie news Anupam Kher in Shankaracharya character

தனி ஒருவன் இந்தி ரீமேக்; யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அர்விந்த் சாமி இணைந்து நடித்த ‘தனி ஒருவன்’ கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது.

இப்படம் மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ராம் சரண், ராகுல் பிரீத், அர்விந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாம்.

சித்தார்த் மல்ஹோத்ரா ஜெயம் ரவி வேடத்தில் நடிக்க, அர்ஜுன் கபூர்அரவிந்த் சாமி வேடத்தில் நடிக்கிறார்.
சபீர் கான் இயக்கவிருக்கிறார்.

இதெல்லாம் இருக்கட்டும். நயன்தாரா கேரக்டரில் யார் நடிக்கிறார்? என்றுதானே கேட்கிறீர்கள்.

கொஞ்ச நாள் பொறு தலைவா

Arjun Kapoor and Sidharth Malhotra to star in Thani Oruvan Hindi remake

விக்ரம்-சூர்யா-சிம்பு பாணியில் அசத்தும் கன்னட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் சுபாஷ் சந்திரபோஸ்.

விரைவில் இவரது வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸ் படமாக உருவாகவுள்ளது.

இதில் சுபாஷ் சந்திர போஸ் ஆக நடிக்கிறார் ராஜ்குமார் ராவ்.

இந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை அதிகரித்துள்ளார்.

தற்போது அப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இதை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கமல், விக்ரம், சூர்யா, சிம்பு உள்ளிட்ட ஒரு சில நடிகர்களே தங்கள் உடம்மை சினிமாவுக்காக இப்படி மாற்றி அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதுபோன்ற பல வகையான முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்வாராம்.

கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்….

Kannada actor Rajkumar rao transformation

தனுஷ்-அஜித்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் அக்‌ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷமிதாப் என்ற இந்திப் படத்தில் அமிதாப் மற்றும் தனுஷுடன் நடித்து தன் சினிமாவை பயணத்தை ஆரம்பித்தார் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராஹாசன்.

தற்போது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை கன்னடத்தில் தொடங்கவிருக்கிறார்.

நாகசேகர் இயக்கும் கன்னட படத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் எனும் அறிமுக ஹீரோவுடன் நடிக்கிறார்.

இவர் கன்னட சினிமாவின் கிரேஸி ஸ்டார் என்றழைக்கப்படும் ரவிச்சந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Aksharahassan joins with Vikram after Ajith

More Articles
Follows