Dr ராஜசேகர்-தனஞ்செயன் இணையும் படம் அக்டோபரில் தொடக்கம்

Dr ராஜசேகர்-தனஞ்செயன் இணையும் படம் அக்டோபரில் தொடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dr Rajasekhar Producer Dhananjayans new movie shooting updatesஇதுதான்டா போலீஸ், எவனாயிருந்தா எனக்கென்ன உள்ளிட்ட அதிரடியான டைட்டில்களில் தெலுங்கு படங்களை தமிழுக்கு கொண்டு வந்தவர் நடிகர் டாக்டர் ராஜசேகர்.

இவர் நீண்ட வெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சிபிராஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், நாசர், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை சைத்தான், சிபிராஜ் நடித்த சத்யா ஆகிய படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளார்.

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பாக தனஞ்செயன் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கிறார்.

இதன் சூட்டிங் அடுத்த மாதம் அக்டோபரில் தொடங்குகிறது.

Dr Rajasekhar Producer Dhananjayans new movie shooting updates

டைரக்டர் ஆகிறார் பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

டைரக்டர் ஆகிறார் பைஃட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fight Master Peter Hein going to direct Telugu movieஒரு படம் படமாகும் போது பைட் சீன்களை பைட் மாஸ்டர்களே இயக்குவார்கள்.

ஆங்கிள் எங்கு வைப்பது முதல் ஆக்சன் எப்படி வர வேண்டும் என அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன், கனல் கண்ணன் உள்ளிட்ட பல சண்டை இயக்குனர்கள், முழு படத்தையும் இயக்கியுள்ளனர். அதாவது இயக்குனர்களாகி இருக்கிறார்கள்.

இவர்களின் வரிசையில் புலிமுருகன் படத்திற்காக சிறந்த சண்டை இயக்குனர் என தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெய்ன் அவர்கள் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இது தெலுங்கு படமாக உருவாகவுள்ளது. ஹீரோ யார்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Fight Master Peter Hein going to direct Telugu movie

எம்ஜிஆர் படத்தலைப்பில் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

எம்ஜிஆர் படத்தலைப்பில் தனுஷை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Karthik Subbaraj movie titled Ulagam Sutrum Valibanதனுஷ் நடிப்பில் வளர்ந்துள்ள ‘அசுரன்’ படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதற்காக லண்டனுக்கு சென்றுள்ளார் தனுஷ்.

இப்பட நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் வில்லனாக நடிக்கிறார்.

லண்டனில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு, இந்தியா திரும்ப உள்ளது படக்குழு.

இந்த நிலையில் இப்படத்துக்கு எம்.ஜி.ஆர் பட தலைப்புகளில் ஒன்றான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்று டைட்டில் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Dhanush Karthik Subbaraj movie titled Ulagam Sutrum Valiban

சூர்யாவுக்காக ஒட்டு மொத்த வித்தையை இறக்கும் பாலா

சூர்யாவுக்காக ஒட்டு மொத்த வித்தையை இறக்கும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Bala going to direct Suriya for new movieநாச்சியார் படத்திற்கு பிறகு பாலா இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை நாயகனாக அறிமுகமாக்க ‛வர்மா’ படத்தை இயக்கினார்.

ஆனால் படமே திருப்தியாக இல்லை என்று சொல்லி படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என தயாரிப்பாளர் பாலாவை ஒதுக்கினார்.

தேசிய விருது படங்களை இயக்கிய பாலாவுக்கு இது பெரிய அவமானமாக இருந்தது. ஆனால் இதுபற்றி ஒரு வார்த்தை கூட பாலா பேசவில்லை.

தற்போது துருவ்வை வைத்து ‛ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் படத்தையும் அதே நிறுவனம் தயாரித்துவிட்டது.

இந்த நிலையில் ஒரு பக்காவான திரைக்கதை எழுதி அதை சூர்யாவிடம் சொல்லி தன் படத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

சுதா இயக்கும் சூரரைப் போற்று படத்தை முடித்துவிட்டு விஸ்வாசம் சிவா இயக்கும் படத்தில் நடித்து விட்டு பாலா படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜாவை இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தான் கற்றுக் கொண்ட ஒட்டு மொத்த வித்தையையும் இப்படத்திற்காக இறக்கவுள்ளாராம் பாலா.
வாங்க பாலா.. அடுத்து ஒரு நேஷ்னல் அவார்ட்டை அள்ளுங்க..

Again Bala going to direct Suriya for new movie

ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகன் அம்ரிஷ்

ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகன் அம்ரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள முன்னணி நாயகர்களுடனும், இளம் கதாநாயகர்களுடனும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘100 காதல்’ ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்திருக்கிறார். மேலும், ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் தன் மகன் இசையமைப்பாளர் அம்ரிஷ் உடனும் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘புதிய ராகம்’ என்ற படத்திற்கு தானே வசனம் எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார்.

நல்ல பிள்ளைகள் அமைவது வரம். அது நடிகை ஜெயசித்ராவுக்கு அமைந்திருக்கிறது. 2010-ம் ஆண்டு ‘நானே என்னுள் இல்லை’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அம்ரீஷ். அதனைத் தொடர்ந்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘பொட்டு’, ‘சத்ரு’ போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது, ‘கர்ஜனை’, ‘யங் மங் சங்’, ‘வீரமாதேவி’, ‘பரமபத விளையாட்டு’, ‘கா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளுக்கு அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் திரையுலக நட்சத்திரங்கள், மக்கள் தொடர்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் அழைத்து பிரம்மாண்டமாகக் கொண்டாடி அம்மா ஜெயசித்ராவை ஆச்சரியப்படுத்தினார். விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:-

நடிகர் சிவகுமார் பேசும்போது:-

என்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். ‘சொல்லத் தான் நினைக்கிறேன்’ மறக்கமுடியாத படம். அதேபோல், ‘வெள்ளிக்கிழமை விரதம்’ படமும் மறக்க முடியாத படம். பாம்பை ஜெயசித்ராவின் அருகில் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்தக் காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா. சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றிபெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா. நான் ஜெயசித்ராவை விட மூத்தவன் என்ற முறையில் அவர் சிரஞ்சீவியாக வாழ வாழ்த்துகிறேன்.

நம் முன்னோர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. ஆனால், ஜெயசித்ராவுக்கும், அவரது மகன் மற்றும் பேரப் பிள்ளைகளுக்கும், 16 செல்வங்களும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது:-

என்னைப் பொருத்தவரையில் அன்று ‘தண்ணி கருத்துருச்சி தவள சத்தம் கேட்டிருச்சி’ பாட்டில் பார்த்த அதே ஜெயசித்ராவாகத்தான் இன்றும் பார்க்கிறேன். அவருடைய முக வசீகரம் 1 சதவீதம் கூட மாறாமல் இன்றளவும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அதற்கு காரணம் அவருடைய மனம் தான்.

பாசம்கொண்ட பிள்ளைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இதற்கு முன் வாழ்த்திச் சென்ற நடிகர் சிவாகுமாருக்கு அருமையான இரண்டு பிள்ளைகள் வாய்த்திருக்கிறார்கள். அதேபோல், ஜெயசித்ராவுக்கும் அதிக அன்பு மிகுந்த மகன் கிடைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஜெயசித்ரா கதாநாயகி தான். அவர் வாழ்க்கையில் அவரது மகன் அம்ரீஷ் கொண்டாடும் பிறந்த நாள் விழா தான் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். இன்று போல் என்றைக்கும் அம்மாவை இதே அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு கோரிக்கை வைத்தார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

நடிகை ஜெயசித்ரா பேசும்போது:-

என் பிறந்த நாளை என் மகன் அம்ரீஷ் வெகு விமரிசையாகக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் வெளியூர் படப்பிடிப்பிற்கு செல்லும் போது அவனை விட்டு செல்வதில் மிகுந்த மனவேதனை அடைவேன். என்னுடைய ஏக்கம் வராமல் இருக்க அவ்வப்போது தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுவேன். இதன்மூலம் அவனருகில் நான் இருப்பதாக எண்ணத்தை அவனுக்குக் கொடுப்பேன். படபிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அவனுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி வருவேன். ஒருமுறை அமெரிக்கா செல்லும் சமயத்தில் என் கணவர் பிள்ளையை அழைத்துச் சென்றால் படப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாது என்று அனுப்ப மறுத்துவிட்டார். விமானத்தில் நீண்ட நேரம் அவனது நினைவு நீங்கவே இல்லை. பிறகு இந்தியா திரும்பும்போது அவனுக்கு பிடித்த பெரிய கார் பொம்மையை வாங்கி வந்தேன். இதுவரை அவனை நான் திட்டியதோ, அடித்ததோ கிடையாது. எத்தனையோ பிறந்த நாள் இதற்கு முன் கொண்டாடியிருந்தாலும் இந்த பிறந்த நாளை என்னால் மறக்கமுடியாது. எனது பிறந்த நாளைக்கு மறக்க முடியாத பரிசை என் மகன் எனக்கு கொடுத்திருக்கிறான் என்று நெகிழ்த்ததோடு அல்லாமல், எனது பிறந்தநாள் விழாவிற்கு வருகைதந்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றார்.

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாள் விழாவில், ஆர்.வி.உதயகுமார், நடிகர் சிவகுமார், சௌகார் ஜானகி, சினேகன், நமீதா மற்றும் அவரது கணவர், இயக்குநர் சாய்ராம், லக்ஷ்மன் ஸ்ருதி, நேக் ஸ்டுடியோவின் கல்யாண், பாடகர் சிவா போன்ற திரையுலகைச் சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

45,000 ரூபாயில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’..!

45,000 ரூபாயில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள திரைப்படம் “Surveillance Zone”. இந்த திரைப்படம் 1 hour 40 mins நீளம் கொண்ட, ₹45,000 இல் எடுக்கப்பட்ட Independent தமிழ்ப் படம். இந்தப் படம் Canon 550D மற்றும் Gopro-வில் எடுக்கப்பத்தது.

தற்போது அகஸ்ட் 16ம் தேதி Toronto வில் நடந்த International Indian Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டது. இது வரை Italy, Berlin, Israel, Miami, Calcutta போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட சர்வ தேச திரைப்பட விழாக்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல வரவேற்புகளும் கிடைத்துள்ளது. டில்லி யில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival இல் விருதும் கிடைத்துள்ளது.

ஒரு கதையை CCTV Footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் Surveillance Zone படமும் இருக்கும். படத்தில் இசை இல்லை. CCTVஇல் பதிவு செய்த ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் ஒலி அமைப்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஆடியோ இருக்காது.

ஒரு பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் இஃபால், குணா, ரகுராம் இரவிச்சந்திரன் ஆகியோர் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர்.

More Articles
Follows