சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் தாம்பத்திய நல்லுறவு கருத்தரங்கம்

சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் தாம்பத்திய நல்லுறவு கருத்தரங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dr Narayana Reddy conducting Sexual Health Conference for Quality of lifeவளமான தாம்பத்திய நல்லுறவு தலைப்பில், ஆகஸ்ட் 17, 19, 19 தேதிகளில் சென்னை ஹையட் ரேஜன்ஸி ஹொட்டெலில் மேற் குறிப்பிட்டுள்ள தலைப்பில் 3- நாள் கருத்தரங்கம் நடக்க உள்ளது.

இல்லற சுகம் வழங்க விழையும் தாம்பத்திய உறவு, மனித குலத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்தை WHO நிறுவனம் 2002-ஆம் ஆண்டிலேயே அங்கீகரித்தது.

இது ஒரு குறைபாடோ உடல் உபாதையோ அல்ல! அரசாங்க ரீதியாகவும் பொதுநல உடல் பேணுதல் பற்றிய ஒரு விஷயமாக இதை கருத வேண்டும்!

தாம்பாத்திய உறவு மற்றும் அது தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் தற்கால வளர்ச்சி பரிமாணங்களை இந்த கருத்தரங்கம் அலசி ஆராயும்!

இந்த துறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் விற்பன்னர்கள் பலரும் இதில் கலந்து கொண்டு கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள்!

இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெறும். கலை ரீதியாக இந்த விஷயங்களை அலசி ஆராயும் நிகழ்வுகளும் உண்டு!

‘ 11 நாடுகளில் இருந்து 250 பிரதிநிதிகள் பாங்குப்பெறுகிறார்கள். இந்த கருத்தரங்கத்தின் மூலமாக இந்த துறையின் இன்நாளாயே நிகழ்வுகள் பற்றியும் பரஸ்பரம் கருத்து பரிமாற்றங்கள் நடைபெறும்!’ என்கிறார், Dr. நாராயண ரெட்டி, இந்த நிகழ்வின் தலைவர்.

பல்வேறு தலைப்புகளிலும் பல கோணங்களிலும் கருத்தரங்கில் விவாதங்கள் நடைபெறும்.

பலரும் பயன் பெற வழி வகுக்கும் விதத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது

Dr Narayana Reddy conducting Sexual Health Conference for Quality of life

ஆடியன்சுக்கு பிடிக்கும்ன்னா அடுத்த செகண்ட்டே ஓகேதான்… – பவன்

ஆடியன்சுக்கு பிடிக்கும்ன்னா அடுத்த செகண்ட்டே ஓகேதான்… – பவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Pawan shares his Cinema carrier experienceவார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களின் ட்ரெண்டிங் வார்த்தை இது.

ஷோஸியல் மீடியா இல்லாத காலகட்டத்திலும் அந்த காமெடி அத்தனை பேர் மனசிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமெடி.

பவன் எண்ணிக்கையில் இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என 90 படங்களில் நடித்திருக்கிறார். இதில் “செங்காத்து பூமியிலே”, “காலகட்டம்”, “விலாசம்” மூன்று படங்கள் ஹீரோவாக நடித்த படங்கள்.

சில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற மாசிலாமணி, இங்கிலீஷ்காரன், கலாபக்காதலன், திமிரு, பீமா, சூரியன் சட்டக் கல்லூரி, பொல்லாதவன், கதகளி, வீரம் என பவன் நடித்த மேக்ஸிமம் படங்கள் ஹிட் லிஸ்டில் தனித்த இடம் பிடித்த படங்கள்.

தற்போது தமிழில் தம்பி ராமையாவின் “மணியார் குடும்பம்” படத்தில் காமெடி கலந்த வில்லன் கேரக்டரிலும், “அழகுமகன்” படத்தில் மெயின் வில்லனாகவும், சமுத்திரகனியின் “நாடோடிகள் 2”, வெற்றி மாறனின் “வடசென்னை” என அடுத்தடுத்து ரிலீஸ்க்கு ரெடியாக நான்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

சமீபத்தில் பவன் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்த “யுத்தம் சரணம்” ஆந்திராவில் வசூலை அள்ளியது.

பொல்லாதவன் படத்தில் அவுட்டு கேரக்டர் தனித்து அப்போது பேசப்பட்டது, அதுபோல வடசென்னை படத்தில் வேலு என்னும் கேங்ஸ்டர் ரோல்.

இதுவரை பார்த்த பவனின் வேறு ஒரு பரிணாமம் வேலு கேரக்டர் நிச்சயம் பேசப்படும் ரோல் அது.

ஹீரோ, காமெடியன், வில்லன், குணசித்திர நடிகர் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை பாத்திரமாக மாற்றும் வல்லமை பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ரகுவரன், பிரகாஷ் ராஜ், பவன் என சிலருக்கு மட்டுமே அது சாத்தியப்பட்டது.

சின்ன கேரக்டர் என்றாலும், அது ஆடியன்ஸ் மனசில் நிற்கும் கேரக்டர் என தெரிந்தால் அடுத்த செகண்ட் அந்தப் படத்தில் நடிப்பேன் என கூறுகிறார் பவன்.

Actor Pawan shares his Cinema carrier experience

பெண்களே உங்க இஷ்டப்படி வாழுங்க..; ஜோதிகாவின் 10 கட்டளைகள்

பெண்களே உங்க இஷ்டப்படி வாழுங்க..; ஜோதிகாவின் 10 கட்டளைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ten Commandments For Women From Jyotikas Kaatrin Mozhi Unleashedராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள காற்றின் மொழி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஜோதிகா.

அவர் பேசியதாவது…

காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன்.

பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.

அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது.

அதில் குறிப்பிட்டு இருந்த பெண்களுக்கான பத்து கட்டளைகள்..

1.உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.

2.நீ விரும்புவதை செய்வாயாக.

3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டாதிருப்பாயாக.

4.பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.

5.குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.

6.வீட்டு பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.

7.நீ சபதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.

8.உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக

9.ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.

10.மனதில் பட்டத்தை சொல்வாயாக .

Ten Commandments For Women From Jyotikas Kaatrin Mozhi Unleashed

1. You can dress as you wish.
2. Do not show other your side of cheek when your husband slaps
3. Do as you wish
4. Eat if you’re starving. Don’t wait for your husband
5. If you feel happy being fat, be so
6. Involve your husband in all house chores
7. Spend as  your wish from what you earn
8. Don’t do what your heart refuses.
9. Be aware that men and women are equal
10. Speak what your heart tells.

Jyothika 10 COMMANDMENTS Kaatrin Mozhi

அரசியல்வாதி ஏற்படுத்தும் குழப்பமே *அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா*

அரசியல்வாதி ஏற்படுத்தும் குழப்பமே *அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arasiyalla Idhellam Saadharnamappa will be 100 percent Laughter Riotஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நடிகர் வீரா இது பற்றி கூறும்போது,

“ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்.

மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்” என்றார்.

இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் தனது பங்கிற்கு கூறும்போது, “நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம்.

அங்கு தான் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாவின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி” என்றார்.

படத்தின் அடிப்படை கருப்பொருள் பற்றி அவர் மேலும் கூறும்போது, “இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது” என்றார்.

ஆரா சினிமாஸ் தயாரிப்பாளர் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது…

“30 திரைப்படங்களை விநியோகித்த அனுபவத்தில் இது தான் திரைப்பட தயாரிப்பில் இறங்க சரியான நேரம் என நான் உணர்கிறேன். உண்மையில், இது பார்வையாளர்களின் நாடித் துடிப்புகளைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல கற்றல் அனுபவம்.

நான் என் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய போது, பொழுதுபோக்கு மற்றும் நல்ல உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது.

உலகளாவிய பார்வையாளர்களுக்கு அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இது பார்வையாளர்களை பற்றி மட்டுமல்ல, என் முதல் தயாரிப்பை கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிடுகிறார் என்பதில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Arasiyalla Idhellam Saadharnamappa will be 100 percent Laughter Riot

*நெஞ்சமெல்லாம் பல வண்ணம்* படத்தில் கடைக்குட்டி சிங்கமான மகேஷ்பாபு

*நெஞ்சமெல்லாம் பல வண்ணம்* படத்தில் கடைக்குட்டி சிங்கமான மகேஷ்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samantha and mahesh babuமொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட் ) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் “ நெஞ்சமெல்லாம் பல வண்ணம் “

தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு ” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. இந்த படத்தில் மகேஷ்பாபு , வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – மிக்கி ஜே.மேயர்

பாடல்கள் – அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர்.

எடிட்டிங் – நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம்.

இயக்கம் – ஸ்ரீகாந்த். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “ கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் A.R.K.ராஜராஜா

தயாரிப்பு – ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா

படம் பற்றி A.R.K.ராஜராஜாவிடம் கேட்டோம் …

இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.

முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

யாரும் தொடாத கதையாக *செய்கை ஒரு பாடமாகட்டும்* இசை ஆல்பம் !!

யாரும் தொடாத கதையாக *செய்கை ஒரு பாடமாகட்டும்* இசை ஆல்பம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seigai stillsஉலகில் உலகமயமாக்கல் ,முன்னேற்றம், மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயர்களில் எத்தனையோ கொடுமைகள் மனிதனுக்கு இழைக்கப்பட்டு வருகின்றன. மனிதனை ஒரு ஆராய்ச்சிப் பிராணியைப் போல நடத்தும் மிகக் கொடிய அமைப்பே Asylum என்பது. இதை 1959 – லேயே பல நாடுகள் தடை செய்து விட்டன. இருந்தும் சில நாடுகளில் தொடரவே செய்கின்றனர். மனநோய் மருத்துவமனையில் நுழைந்தால் நோய் சரியாகி மீண்டு வர முடியும். ஆனால் புகலிடம் , சரணாலயம் என்கிற பெயரில் நடக்கும் ‘அசைலமி’ல் ஒரு முறை நுழைந்தால் வெளியே வர வே முடியாது. ராணுவம் கேள்வி கேட்டால் கூட பதில் தர மாட்டார்கள். அங்கு நுழையும் மனிதர்களைப் பிராணிகளைப் போல ஹைட்ரோதெரபி , மெக்கானிக்கல் ஸ்லாப் போன்று பல வித ஆராய்ச்சிக்குட்படுத்தி கொடுமைப் படுத்துவார்கள். காஸ்மெடிக்ஸ் , பேர்னஸ்க்ரீம்கள் , பாடி ஸ்ப்ரே , அலங்காரப் பூச்சுகள் போன்றவை பற்றிய ஆராய்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ரசாயனம் செலுத்தப்பட்டு அவர்கள் படும் பாடு சொல்ல முடியாது. சில நேரம் இறக்கவும் நேரிடும் . இந்தக் கொடுமையை உலகெங்கும் கொண்டு செல்லும் விதத்தில் உருவாவதுதான் “செய்கை ஒரு பாடமாகட்டும் ” ஹிப்ஹாப் இசை ஆல்பம்.

பாடல் வரிகள், இசை ,இயக்கம் , தயாரிப்பு வடிவமைப்பு என்று பங்களித்து இதை உருவாக்கி வருபவர் தமிழ் ஆப்தன் (தினேஷ் ) இவர் ஏற்கெனவே இந்தியா முழுக்க சுற்றி துப்பறிவு என்றொரு இசை ஆல்பம். எடுத்திருந்தார் . அது தூய்மை இந்தியா திட்ட முழக்கத்தை முன்னிறுத்தியதால் இந்திய அரசே தன் ஸ்வாச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா இயக்கத்துக்கான படைப்பாக ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது. துப்பறிவின் பாடலைத் தமிழிலும் இந்தியிலும் தூய்மை இந்தியா செயலியில் சேர்த்துப் பெருமை சேர்த்தது அரசு.

அப்படிப்பட்ட சமூகப் பொறுப்புமிக்க கலைஞரான தமிழ் ஆப்தன் இயக்கும் இரண்டாவது படைப்பே “செய்கை ஒரு பாடமாகட்டும் “ஆல்பம். இளைஞர்களுக்கு பேச்சு , எழுத்து சுதந்திர உணர்வை அளிக்கும் விதத்தில் இது இருக்குமாம்.

ஆச்சி கிழவி திருக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிக்கிறார். . சொழிந்தியம் மீடியா ஒர்க்ஸ் இதற்குத் துணை நிற்கிறது.

இந்த ஆல்பத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள’ ஈழம் பாய்ஸ் பாரிஸ் ‘குழுவிலுள்ள தமிழ்க் கலைஞர்கள் தமிழின் பெருமை கூறும் பாடலைப் பாடியுள்ளனர். இதில் பல சுதந்திர இசைக் கலைஞர்கள் பாடியுள்ளதுடன் தோன்றியும் இருக்கிறார்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்தில் ‘வந்தனம் வந்தனம் ‘நாட்டுப்புறப் பாடல் பாடிய கவிதா கோபியை மேற்கத்திய இசையில் பாட வைத்துள்ளனர் என்பது ஒரு சாம்பிள்.
இப் படைப்புக்கு ஒளிப்பதிவு அசோக் பன்னீர்செல்வம் ,படத் தொகுப்பு G.P.அருண் பிரபாகரன் , கலை இயக்கம் சதீஷ்குமார் , நடனம் செல்வி. ஒப்பனை சசிகுமார், ஆடை வடிவமைப்பாளர் திவ்யா,

சுதந்திர இசைக் கலைஞர்கள் திரைக் கலைஞர்கள் என்று இரு வகையினரும் இணைந்து இதை உருவாக்கி வருகிறார்கள்.

More Articles
Follows