ராகவா லாரன்ஸிற்கு டாக்டர் பட்டம்.; யார்.? கொடுத்தார்கள் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

ராகவா லாரன்ஸிற்கு டாக்டர் பட்டம்.; யார்.? கொடுத்தார்கள் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் திரை உலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராகவா லாரன்ஸ்.

திரையுலகில் நடனக் குழுவில் பயணித்து படிப்படியாக உயர்ந்த நடன இயக்குனரானார் ராகவா லாரன்ஸ்.

பார்த்தேன் ரசித்தேன் மற்றும் அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

கே பாலச்சந்தர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் சில படங்களில் நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறி முனி படத்தை எடுத்து அதில் நாயகனாக நடித்து தமிழக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் எடுத்தார் லாரன்ஸ்.

அதன் பின்னர் காஞ்சனா 1 காஞ்சனா 2 என அதிரடியான பேய் படங்களை கொடுத்து பேய் பட இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.

அதிலும் 100 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தார்.

மேலும் ஹிந்தியிலும் படங்களை இயக்கினார்.

தற்போது ‘ருத்ரன்’, ‘அதிகாரம்’ மற்றும் ‘சந்திரமுகி 2’ ஆகிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இத்துடன் ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தையும் நடத்தி, அதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கிறார்.

கல்வி மற்றும் மருத்துவமனை செலவுகள் உள்ளிட்ட பல நல உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், ராகவா லாரன்ஸிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி இன்று கௌரவித்துள்ளது.

இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்…

“சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலுக்கு மனமார்ந்த நன்றி.

எனது சார்பாக என் அம்மா இந்த விருதினை பெற்றது சிறப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும்
லாரன்ஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Doctorate to Raghava Lawrence.; Who? Do you know what they gave? Interesting information

40000 தியேட்டர்களில் ‘பொண்ணு’ பார்க்கலாம்.; ராம் கோபால் வர்மாவின் கனவை நிஜமாக்கிய புரூஸ்லீ

40000 தியேட்டர்களில் ‘பொண்ணு’ பார்க்கலாம்.; ராம் கோபால் வர்மாவின் கனவை நிஜமாக்கிய புரூஸ்லீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் Ladki. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் பொண்ணு என்ற பெயரில் வெளியாகிறது.

மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

ராம் கோபால் வர்மா பேசியதாவது..

“இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன்.

ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர் ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன்.

அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.

பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம்.

ஹைதராபாத்தில் புரூஸ் லியின் எண்டர் தி டிராகன் திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இது என கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம்.” என்றார்.

நடிகை பூஜா பலேகர் பேசியதாவது..

“நான் இந்த படத்திற்காக இங்கு வந்ததில் சந்தோசமடைகிறேன். போன முறை நான் சென்னை வந்த போது தற்காப்பு கலை வீரராக வந்தேன். இன்று நடிகையாக இங்கு வந்துள்ளேன். ராம் கோபால் வர்மா சார் உடைய படத்தில் நான் நடித்தது, எனக்கு கனவு போல் உள்ளது. நான் ராம் கோபால் வர்மா சாரின் ரசிகை.

இன்று அவரது இயக்கத்தில் ஒரு தற்காப்பு கலை படத்தில் நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்காக நான் அழைக்கப்பட்ட போது, எனது சண்டை முறைகள் அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் சில பயிற்சிகளை செய்தேன். அதன் பிறகு படபிடிப்பு துவங்கியது. எனக்கு நடிப்பில் முன் அனுபவம் எதுவும் இல்லை. இயக்குனர் ராம் கோபால் சர்மா சார் தான், எனக்கு எல்லா உணர்வுகளையும் வெளியே கொண்டு வர உதவினார். நான் புரூஸ்லி உடைய ரசிகை, படத்திலும் அப்படியொரு கதாபத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். தியேட்டரில் வந்து படம் பாருங்கள். ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

Guruparan International நிறுவனம் இத்திரைப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

தொழில் நுட்ப குழு
இயக்கம் – ராம் கோபால் வர்மா
ஒளிப்பதிவு – ரமேஷ்
இசை – பால் பிரவீன் குமார்
எடிட்டிங் – கமல்
கலை இயக்கம் – மதுகர் தேவார
சண்டை பயிற்சி – பூஜா & ராம் கோபால் வர்மா
மக்கள் தொடர்பு – தியாகராஜன்
தயாரிப்பு – ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION
தமிழக வெளியீடு – Guruparan International

Film maker Ram Gopal Varma’s directorial “Ponnu” Press Meet

அன்றே சொன்னது FILMISTREET : பாலா சூர்யா கீர்த்தி ஜீவி்.பிரகாஷ் இணையும் பட டைட்டில் ரிலீஸ்

அன்றே சொன்னது FILMISTREET : பாலா சூர்யா கீர்த்தி ஜீவி்.பிரகாஷ் இணையும் பட டைட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இது சூர்யா 41வது படமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் பாலா சூர்யா இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் .

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

தற்போது இந்த படத்திற்கு வணங்கான்’ என டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இது மீனவர் நலன் மற்றும் பிரச்சினை குறித்த படம் என்பதாலும் அநீதிக்கு பயந்து எவரையும் வணங்கான் (வணங்காதவன்) என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சரியாக 40 நாட்களுக்கு முன்னரே ஜூன் 1ல் நம். FILMISTREET தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

அந்த லிங்க் இதோ…

சூர்யா படத்திற்கு 2 மாஸ் டைட்டில்களை ரெடியாக வைத்திருக்கும் பாலா

சூர்யா படத்திற்கு 2 மாஸ் டைட்டில்களை ரெடியாக வைத்திருக்கும் பாலா

இந்த படத்திற்கு ‘கடலாடி’ அல்லது ‘வணங்கான்’ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது மீனவர் நலன் மற்றும் பிரச்சினை குறித்த படம் என்பதால் ‘கடலாடி’ (நாடோடி பணி) என்ற தலைப்பும் அநீதிக்கு பயந்து எவரையும் வணங்கான் (வணங்காதவன்) என்ற தலைப்பும் வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எனவே படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

இன்று ஜூலை 11… இயக்குனர் பாலாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya 41 title announced as Vanangaan

இன்றைய சூழ்நிலைக்கு தேவையான படம்.; ‘பேட்டரி’-க்கு சார்ஜ் ஏற்றிய வெற்றிமாறன் சூரி சரண் வசந்தபாலன்

இன்றைய சூழ்நிலைக்கு தேவையான படம்.; ‘பேட்டரி’-க்கு சார்ஜ் ஏற்றிய வெற்றிமாறன் சூரி சரண் வசந்தபாலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சூரி பேசும்போது,

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர். மணிபாரதி அண்ணன் அழைக்கும்போது நான் இந்த படத்திலும் நடிக்கவில்லை, இப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் என்ன பேசுவது என்று கேட்டேன்.

இப்படத்தின் கதையை இயக்குனர் மணிபாரதி கூறும்போது, இதுமாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன்.

ஒரு உயிருக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சனை என்றால் தவித்துவிடுவோம். ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானால் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை.அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம்.

இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாயிக்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குனர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குனர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்.

எவ்வளவு வசனங்கள் கொடுத்தாலும் போதாது என்று கூறும் மனிதர் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல், அனைவருடைய வசனங்களையும் இவரே பேசிவிடுவார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஸ்டூடியோவிற்கு வரும்போது கண்களில் படுவது, கைகளில் கிடைப்பது என்று எல்லாவற்றையும் எடுத்து வந்து இசையமைக்கும் வல்லமைப் படைத்தவர்.

இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகை அம்மு அபிராமி பேசியதாவது…

அசுரன் படத்தால் தான் இப்பட வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், முதலில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. என்னைப் பாராட்டி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி. குலுமணாலியில் புடவை கட்டி நடனமாட வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நனவானது.

மணிபாரதி சாரிடம் அனைவரிடமும் அன்பாகவும், அனுசரித்து போக வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக் கொண்டேன்.

இப்படம் சொல்ல வேண்டிய கதை என்றார்.

கவிஞர் சினேகன் பேசும்போது…

சினிமாவில் முக்கியமான மூலதனம், காத்திருப்பும், நம்பிக்கையும். அது இயக்குனர் மணிபாரதியிடம் இருக்கிறது. இந்த மாதிரி படங்கள் வெற்றிபடங்கள் வெற்றியாகும் போது தான் சிறிய படங்கள் எடுப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும்.

இதுபோல நிறைய படங்கள் வரவேண்டும் என்றார்.

நடிகர் மாரிமுத்து பேசும்போது…

எனக்கும் மணிபாரதிக்கும் 34 வருட நட்பு. என் தம்பி அம்பத்தூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் மணிபாரதியும் வேலை பார்த்தார். அவர் பெயர் நாகை பொன்னி. அன்று முதல் இன்றுவரை போராடிக் கொண்டு தான் இருக்கிறார். சிறுகதை எழுதி கொண்டு இயங்கிக் கொண்டே இருக்கிறார். எனக்கு தெரிந்து மணிபாரதிக்கு இது நான்காவது படம் என்று நினைக்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது,

இப்படம் வெளியாகி எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த அரங்கம் உணர்த்துகிறது. பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் அவர்களின் ரசிகர் மணிபாரதி. இன்றும் அவர்களின் மூன்றாம் பிறை மற்றும் அரங்கேற்றம் படங்களைப் பார்த்துவிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் எப்போதும் நன்றி மறக்காதவர், அன்பானவர். குடும்பத்திற்கு வருமானம் கொடுக்க வேண்டிய காலகட்டத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறோம். என்றாவது ஒருநாள் இயக்குனராகும் போது ஒரே நாளில் வாழ்க்கையே பெரிதாக மாறிவிடும். ஆனால், அதே இயக்குனர் தோல்வியடைந்து விட்டால், உதவி இயக்குனரைவிட மிகவும் மோசமான நிலைக்குச் செல்ல நேரிடும். ஆனால், மணிபாரதி துவழாமல் சின்னத்திரை, வார பத்திரிகை என்று ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

மணிபாரதியை நம்பி இப்படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. சரண் சார் கூறியதுபோல, இப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். செங்குட்டுவனுக்கு இப்படம் வெற்றி படமாக இருக்கும்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது…

மணிபாரதி சாரைப் பற்றி கூறவேண்டுமானால், நாங்கள் சாலையில் சந்தித்து பேசுவோம், அடிக்கடி போன் செய்து கதை கூறுவார். ஒருநாள் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களுக்கு சிறந்த கதாபாத்திரம் இருக்கிறது. கண்டிப்பாக அழைக்கிறேன் என்றார். அதன்படி அழைத்தார். நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் பேசும்போது…

மணிபாரதி சாரும், சம்பத் சாரும், பேட்டரி படத்தைப் பற்றி கூறி, வாய்ப்புக் கொடுத்தார்கள். மணிபாரதி சாருடன் பணியாற்றும் போது மிகவும் ஆர்வமாக இருக்கும். இதயப்பூர்வமாக பணியாற்றும் அனுபவம் கிடைக்கும். அம்மு அபிராமி சிறப்பாக நடித்திருக்கிறார்” என்றார்.

இயக்குனர் வசந்தபாலன் பேசும்போது…

தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது தான் சினிமாவின் விதி. புட் அண்ட் டிட் வார்த்தைகள் ஓடிடி யில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. மீண்டும் வெற்றிபெறுவது என்பது பெரிய விஷயம். ஆனால், மணிபாரதி திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்ததில் இருந்தே அவர் மீண்டும் வெற்றிபெறுவார் என்று தெரிகிறது. அவருக்கு தன்னைப் பற்றிய சரியான புரிதல்தான் இதற்கு காரணம்.

ஒரு படத்திற்கு திரைக்கதைத் தான் முக்கியம். திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அருமை, வேற லெவல் என்ற.. வார்த்தைகள் 2 கிட்ஸ்களின் தரக மந்திரமாக உள்ளது.

A necessary picture for today’s situation.; Soori Charan Vasanthapalan charged the ‘battery’

அஜித் வரிசையில் அடுத்து உதயநிதி.; போனிகபூர் போடும் நெக்ஸ்ட் ப்ளான்

அஜித் வரிசையில் அடுத்து உதயநிதி.; போனிகபூர் போடும் நெக்ஸ்ட் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை & தற்போது உருவாகி வரும் AK 61 ஆகிய படங்களை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

இந்த நிலையில் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை தொடர்ந்து மீண்டும் உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு…

தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.

சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 வது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார்.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் போனிகபூர் பேசியதாவது…,

“இந்த படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவனத்தில் வலுவான கதைகள் நிறைந்த படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

தமிழில் நிறைய படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் இப்பொழுது பல படங்கள் செய்துவருகிறோம். தொடர்ந்து இன்னும் பல நல்ல படங்களை கொடுக்க உள்ளோம். உதயநிதியுடன் இணைந்து அடுத்து ஒரு படம் உருவாக்க உள்ளோம்.

தமிழில் முக்கியமான நடிகர்களுடன் இணைந்து இயங்கி கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.“

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசியதாவது..,

“இந்த படம் சில மனிதர்களுக்கான, அறிவுரையை கூறும் படமாக அமைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எனது இரண்டாவது திரைப்படம், அதன் 50 வது நாளில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் தலைப்பு எங்களுக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

என்னுடன் இதுவரை உடன் பயணித்து வரும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்லி கொள்கிறேன். படத்தை உருவாக்க பெரும் துணையாக இருந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், படத்தின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சமூக நீதிக்கான படத்தை நாங்கள் இணைந்து உருவாக்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் அனைவருக்கும் நன்றி”

நடிகர் ஆரி பேசியதாவது..,

“எனது திரைப்பயணத்தில் முதல் அங்கீகாரம் உதயநிதி அவர்களால் தான் கிடைத்தது. நெடுஞ்சாலை படத்தின் வெற்றி ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தால் சாத்தியமானது.

இப்போது அவருடன் ஒரு நேர்மையான படத்திற்கான வெற்றிவிழாவில் இருப்பது மகிழ்ச்சி. முதல் முறையாக நான் நடித்த படத்திற்கான 50 ஆவது நாளில் இருக்கிறேன்.

இந்த படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த படத்தை பெரிய வெகுமதியாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் உதயநிதி அவர்களுக்கு நன்றி. “

ஷிவானி ராஜசேகர் கூறியதாவது…

“இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி சார் ஆகியோருக்கு நன்றி. படம் வெளியாகி 50 நாட்கள் ஓடி, ஓடிடியிலும் வரவேற்பை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். “

நடிகை தான்யா ரவிசந்திரன் பேசியதாவது..

இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த போனி கபூர், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர் உதயநிதி சார் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருக்கும் நன்றி.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது…

நானும், அருண்ராஜாவும் அடுத்து ஒரு படம் இணைந்து பணியாற்ற உள்ளோம். அருண் உடன் பணியாற்றுவது பெரிய அனுபவமாக இருக்கிறது. இந்த படத்தில் நடிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது. பின்னர் அருண் இந்த படத்திற்கு கடின உழைப்பை கொடுத்தார். அது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்காக பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் ராகுல் தான் இந்த படம் இந்தளவு வெற்றி பெற காரணம். நல்ல படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எப்பொழுதும் நல்ல படத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

Nenjuku Needhi 50th Day Success Meet high lights

‘கட்டில்’ உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது

‘கட்டில்’ உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழக விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து அதற்கான விழா நேற்று- (ஜூலை 10 ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றது.

நீதியரசர் S.K.கிருஷ்ணன் விருதை வழங்கினார்

ரவிதமிழ்வாணன், SP.பெருமாள்ஜி முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது.

இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்டில் திரைப்பட உருவாக்கத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நூலாக வெளியிட்டு பலராலும் பாராட்டு பெற்று வருகிறார்.

திரைப்படம் பற்றிய இப்படி ஒரு நூல் எங்கும் வெளிவராத நிலையில் புனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூலை பார்த்த பிரபல திரைப்பட பேராசிரியர் சமர் நாட்டக்கே அவர்கள் மூலம் இந்த நூல் உலகின் பல்வேறு திரைப்பட கல்லூரிகளுக்கு சென்று சேர்ந்திருக்கிறது.

விரைவில் கட்டில் திரைப்படத்திற்கான ஆடியோ ரிலீசும், தியேட்டர் ரிலீசும் நடைபெற உள்ள சூழலில் இந்த விருது கவனம் ஈர்க்கத்தக்கதாக உள்ளது.

American University Award for Kattil movie

More Articles
Follows