‘துணிவு’ படத்தை பார்க்க வரும்முன் இதை செய்ங்க.. – வினோத் வேண்டுகோள்

‘துணிவு’ படத்தை பார்க்க வரும்முன் இதை செய்ங்க.. – வினோத் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார் வினோத்.

இந்த படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை முன்னிட்டு தற்போது படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளில் படக்கூழுவினர் விறுவிறுப்பாக உள்ளனர்.

இந்த நிலையில் வினோத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது..

‘துணிவு’ படம் குறித்து பலவிதமான யூகங்கள் வலம் வருகின்றன.. அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் பேங்க் கொள்ளை சம்பவம் என பல கற்பனைகள் வருகின்றன. ஆனால் அது உண்மை இல்லை. அதை பற்றி சொல்லவும் முடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லுவேன். ‘துணிவு’ படத்திற்கு படத்தை பார்க்க வருவதற்கு முன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்து விட்டு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்

செய்வீர்களா.?? செய்வீர்களா.?

ஏற்றி விட்ட ஏணிக்காக வலியவந்து மாட்டும் ஹீரோக்கள்.; ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக இவரா?

ஏற்றி விட்ட ஏணிக்காக வலியவந்து மாட்டும் ஹீரோக்கள்.; ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவுக்குள் ஒரு மகா நடிகன் ஒளிந்திருக்கிறார் என்பதை வெளி உலகக் அறியச் செய்தவர் இயக்குனர் பாலா.

இவர் இயக்கிய நந்தா மற்றும் பிதா மகனில் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்த ‘வணங்கான்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன் சூர்யா இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டிருந்தார் பாலா.

இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்செட் ஆகினர். ஆனாலும் ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும் என அறிவித்திருந்தார் பாலா.

னவே வணங்கான் படத்தில் யார் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் அதர்வா அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல விக்ரம் ஆர்யா விஷால் சூர்யா வரலட்சுமி ஆர் கே சுரேஷ் ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் நல்லதொரு நடிப்பு பரிமாணத்தை காட்டியவர் பாலா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

டபுள் ஹீரோ – ஹீரோயின்ஸ் கூட்டணியில் சைக்கோ கிரைம் திரில்லர் ‘தீங்கிரை’

டபுள் ஹீரோ – ஹீரோயின்ஸ் கூட்டணியில் சைக்கோ கிரைம் திரில்லர் ‘தீங்கிரை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் தீங்கிரை.

மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீங்கிரை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சைக்கோ கிரைம் திரில்லர் ஜான்ராவில் உருவாகி இருக்கும் தீங்கிரை படத்தின் டிரைலரை பார்த்தவர்கள், வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

மேலும் சித் ஸ்ரீராம் பாடிய அவிழாத காலை என்னும் ரொமான்டிக் பாடல் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு 10 லட்ச பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

தீங்கிரை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பிரகாஷ் நிக்கி பாடலில், ஹரிஷ் அர்ஜுன் பின்னனி இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவராஜ் மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்குனராக என்.கே. ராகுல் அவர்களும், படத்தொகுப்பாளராக C.S பிரேம் குமார் அவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரகாஷ் ராகவதாஸ் இயக்கியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஹார்ட் டிஸ்கை திருடி புதிய படம்.; யோகிபாபு படத்திற்கு கோர்ட் தடை

இதெல்லாம் ஒரு பொழப்பா.? ஹார்ட் டிஸ்கை திருடி புதிய படம்.; யோகிபாபு படத்திற்கு கோர்ட் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மணி’ என்ற பெயரில் ஒரு திரைப்பட உருவானதாகவும் அந்த படத்தின் முழு காப்பியை கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது அதை ஒரு நபர் திருடி ‘மணி’ என்ற படத்தை ‘தாதா’ என்ற பெயரில் மாற்றி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதை திருட்டு விவகாரம் தான் பெரிதாக பேசப்பட்டது.

தற்போது ஒரு படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில் அந்த ஹார்ட் டிஸ்கை திருடி மற்றொரு பெயரில் திரையிட நினைப்பதெல்லாம் என்ன வகையான ——– என்று சொல்ல முடியும்.?

ஓரின தினங்களுக்கு முன் ‘தாதா’ என்ற பெயரில் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்த படத்தின் நாயகன் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை. இந்தப் படத்தில் நடித்த லொள்ளுசபா மானோகர் கலந்து கொண்டார்.

அப்போது அவர் யோகி பாபு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து யோகி பாபு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது… “நான் ‘மணி’ என்ற படத்தில் தான் நடித்தேன். ‘தாதா’ படத்தில் நடிக்கவில்லை.

4 காட்சிகள் மட்டும்தான் படத்தில் வருவேன். என்னை நம்பி யாரும் படத்தை வாங்க வேண்டாம் என்று யோகி பாபு சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘மணி’ திரைப்படத்தின் COMPUTER HARD DISK’யினை திருடிய வழக்கு சென்னை சைதாப்பேட்டை 23 வது நீதிமன்றம் CC 2214/2019 மற்றும் உயர்நீதிமன்ற CC NO 362 OF 2016 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

எனவே, ‘தாதா’ என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்து வெளியிட திட்டமிட்ட கிஷோர் குமாருக்கு *தாதா* திரைப்படத்தை திரையிட வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஜய்சேதுபதி உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த ஜான்வி கபூர்…!

விஜய்சேதுபதி உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்த ஜான்வி கபூர்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடித்து 2015 ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தை ஜான்வி கபூர் 100 முறை பார்த்துள்ளாராம்.

ஒரு அறிக்கையின்படி, நடிகை கோலிவுட்டில் குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.

ஜான்வி கபூர் விஜய்சேதுபதிக்கு போன் செய்ததாகவும், அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

ஜான்வி கபூர் சமீபத்திய ஊடக உரையாடலில் விஜய் சேதுபதியுடன் தனது உரையாடலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகை ஜான்விகபூர் விரைவில் கோலிவுட்டில் அடியெடுத்து வைப்பதை நாம் பார்க்கலாம்.

Janhvi Kapoor expressed interest in acting with Vijay Sethupathi

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் இவரா?

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் பிக்பாஸின் ஆறாவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளர் இந்த வாரம் வீட்டிற்குள் நுழைவார் என்று தெரிகிறது .

யூடியூப் சேனலின் விஜே பார்வதி வைல்டு கார்டு போட்டியாளராக இருக்கலாம் என சொல்லப்படுகிறது .

முதல் சீசனின் போட்டியாளர் வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் நுழைவார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.

More Articles
Follows