மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா.; ஸ்டாலின் நலம் விசாரிப்பு

stalin thangamaniகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

தற்போது அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அம்மன் அர்ஜுனன், பா.வளர்மதி ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டரில்…

“கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்புகொண்டு விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.

பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர்.

Overall Rating : Not available

Latest Post