தமிழகத்தில் 6வது முறை திமுக ஆட்சி..; முதன்முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்.; தேசிய தலைவர்கள் வாழ்த்து. ஸ்டாலின் அறிக்கை முழு விவரம்!

தமிழகத்தில் 6வது முறை திமுக ஆட்சி..; முதன்முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்.; தேசிய தலைவர்கள் வாழ்த்து. ஸ்டாலின் அறிக்கை முழு விவரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

எனவே தமிழகத்தில் 6வது முறையாக திமுக ஆட்சி அமைக்கிறது.

தற்போது முதன்முறையாக முதல்வராகிறார் ஸ்டாலின்.

அவருக்கு ராகுல்காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முக ஸ்டாலின் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்….

” ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்! ‘ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்’ என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!தமிழ்மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் – ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

எத்தனை சோதனைகள் – எத்தனை வேதனைகள் – எத்தனை பழிச்சொற்கள் – எத்தனை அவதூறுகள் – என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!

உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்.

இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது! – அதைத் தமிழகம் இன்று சொன்னது! இனித் தமிழகம் வெல்லும்! – அதை நாளைய தமிழகம் சொல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

DMK Leader MK Stalin thanks letter to peoples for winning in Election

JUST IN எம்எல்ஏ ஆனார் நடிகர் உதயநிதி.; எய்ம்ஸ் செங்கல்லை கொடுத்து ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்

JUST IN எம்எல்ஏ ஆனார் நடிகர் உதயநிதி.; எய்ம்ஸ் செங்கல்லை கொடுத்து ஸ்டாலினிடம் ஆசி பெற்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

உதயநிதி ஸ்டாலினுக்கு திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இவர் முதன்முறையாக போட்டியிட்டார்.

சென்னையில் இருக்கும் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் உதயநிதி.

தேர்தல் பிரசாரத்தின் போது.. ” 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். (கிண்டலடித்தார்) உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலோடு சென்றார் உதயநிதி.

(இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை திருடியதாக பாஜகவினர் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது வேறு கதை.)

தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக உள்ள நிலையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை திமுக தலைவரிடம் வழங்கினார் உதயநிதி.

அத்துடன் தமிழகம் திமுகவுடன் இருப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.

Udhayanidhi became first time MLA He won in Chepauk Thiruvallikeni Constituency

JUST IN : ELECTION LEADING : தமிழகம் புதுச்சேரி கேரளா அசாம் & மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல் நிலவரம்

JUST IN : ELECTION LEADING : தமிழகம் புதுச்சேரி கேரளா அசாம் & மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல் நிலவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமி

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள்..

தமிழக சட்டமன்றத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை; காலை 12 மணி நிலவரம்!
திமுக 140 தொகுதிகளில் முன்னிலை
அதிமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை.. கமல் கட்சி – 1

புதுச்சேரி : காலை 12 மணி நிலவரப்படி என்.ஆர்.காங் + பிஜேபி கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை… காங்கிரஸ் + திமுக கூட்டணி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை.

கேரள தேர்தல் முடிவுகள் : கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் 16 தனித் தொகுதிகளாகும்… சிபிஎம் இடது சாரி தொடர்ந்து முன்னிலை..94 தொகுதிகளில் முன்னிலை.. மீண்டும் பினராயி விஜயன் ஆட்சி.

மேற்குவங்க தேர்தல் முடிவுகள் : திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை.. ஆனால் மம்தா பின்னடைவு.

அசாம் தேர்தல் 12 மணி : பாஜக தொடர்ந்து 80 தொகுதிகளில் முன்னிலை.
——————————————–

புதுக்கோட்டை தொகுதியில் தபால் வாக்குப்படிவத்தில் குளறுபடி இருப்பதாக புகார்.. திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.

சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை.

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் பின்னடைவு… தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியே அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது..

ராயபுரத்தில் ஜெயக்குமார், மதுரவாயலில் பெஞ்சமின், ஆவடியில் மாஃபா பாண்டியராஜன், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன், விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம், ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

புதுச்சேரி ஏனாம் தொகுதியில் ரங்கசாமிக்கு பின்னடைவு.
காங்கிரஸ் கூட்டணி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் 700 வாக்குகள் முன்னிலை..

TN Kerala Puducherry Assam West Bengal Election Result updates

டபுள் மாஸ்க் போட சொல்லி திரை பிரபலங்கள் விழிப்புணர்வு கொடுங்க..; முதல்வர் வேண்டுகோள்

டபுள் மாஸ்க் போட சொல்லி திரை பிரபலங்கள் விழிப்புணர்வு கொடுங்க..; முதல்வர் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினம் அதிகரித்து செல்கிறது.

தற்போது கொரோனா 2வது அலையிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அந்த மாநில கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில்…

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும்.

பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும்.

சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள், திரையுலக பிரபலங்கள் இது குறித்த விழிப்புணர்வில் பங்கேற்க வேண்டும்.”

இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Kerala CM Vijayan requests people to use double masks to protect from Corona

என் அன்பை வாங்கிக்கோங்க..; யோகி பாபுவுக்கு பிரியா பவானி சங்கர் கோரிக்கை

என் அன்பை வாங்கிக்கோங்க..; யோகி பாபுவுக்கு பிரியா பவானி சங்கர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு ஷீலா சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘மண்டேலா’.

இப்படத்தை மடோன் அஷ்வின் என்பவர் இயக்க தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து இருந்தார்.

இவர் எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. அதே போல் ‘மண்டேலா’ படத்தையும் விஜய் டிவியில் நேரடியாக ரிலீஸ் செய்து ஒளிப்பரப்பினர்.

இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

எனவே தமிழக புதுச்சேரி சட்டன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முன்பே ஒளிப்பரப்பினர்.

இந்த நிலையில் இந்த படத்தை இப்போது பார்த்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இது குறித்து அவர் கூறியதாவது…

“யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் #Mandela @madonneashwin @vidhu_ayyanna @yogibabu_offl ணா! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்.

Priya Bhavani Shankar request to Actor Yogi Babu

தேர்தல் முடிவுகள் வர தாமதமாகும்.; புதுச்சேரி் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

தேர்தல் முடிவுகள் வர தாமதமாகும்.; புதுச்சேரி் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநலத்திலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அங்குள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நாளை நடைபெற உள்ளது.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் நடைபெறுகிறது.

காரைக்காலின் 5 தொகுதிகளுக்கு காரைக்கால் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்க அறையில் செய்தியாளர்களை பூர்வா கார்க் சந்தித்தார்.

“மத்திய அரசின் கொரோனா விதிமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவை வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அல்லது 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அந்த நபர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினுள் அனுமதி வழங்கப்படும்.

அவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு வர வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைவரும் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அங்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்படும்.

பிபிஇ கிட் வேண்டுமாலும் வாங்கிக் கொள்ளலாம்.

வெற்றி வேட்பாளர் சான்றிதழ் பெற வரும்போது 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வெற்றி ஊர்வலம் நடத்தக்கூடாது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே கூட்டம் கூடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு அறைக்கு 7 டேபிள்கள் போடப்பட்டது. தற்போது கொரோனா விதிகளை பின்பற்றப்படுவதால் ஒரு அறைக்கு 5 டேபிள்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் முடிவுகள் வர சற்று காலதாமதம் ஆகலாம்.

புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில் காலை 8 மணிக்கு, முதல் 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

முன்னணி நிலவரம் 10 மணிக்கு தெரியவரும். இதன் முடிவு 12.30 மணி வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக 1 மணிக்கு 8 தொகுதிகள் எண்ணப்படுகிறது. அதன் முடிவுகள் தெரிய 6 மணி வரை ஆகலாம்.

இறுதியாக மாலை 6 மணிக்கு 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இதன் முடிவு தெரிய நள்ளிரவு வரை ஆகலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 5 சுற்றுவரை செல்ல வாய்ப்புகள் உள்ளது.

நாளை ஞாயிறு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Puducherry Election Result will be delay says District Collector Purva Garg

More Articles
Follows