டாக்டர் திவ்யா சத்யராஜின் புதிய இயக்கம்..; இது ஆரோக்கிய கட்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர் உலகின்‌ மிக பெரிய மதிய உணவுத்‌ திட்டமான அக்ஷய பாத்ராவின்‌ விளம்பரத்‌ தூதுவர் ஆவார்‌.

சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைக்கேடுகளை பற்றியும்‌ நீட் தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைத்தளங்களில்‌ வைரலானது.

அரசு மருத்துவமனைக்கு வரும்‌ கர்பிணிப்‌ பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும்‌ என்று சுகாதார அமைச்சரிடம்‌ கோரிக்கையும் விடுத்திருந்தார்‌.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்‌ இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று திவ்யா சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

திவ்யா சத்யராஜ்‌ ஊட்டச்சத்து துறையில்‌ செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ அவருக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. டாக்டா்‌ பட்டம்‌ பெற்றவர்களை கெளரவிக்க அமெரிக்காவில்‌ நடைபெறவிருந்த விழா கோவிட்‌ 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமார்‌ அவர்களுக்கு என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌.

ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌” என்று திவ்யா சொல்கிறார்‌.

2021ல் பாத்துக்கலாம்… ரஜினியை அடுத்து அஜித்-சூர்யா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொடிய வைரஸ் கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் கிட்டதட்ட 3 மாதங்களாக அமலில் உள்ளது.

சினிமா சூட்டிங்குகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

கமலின் இந்தியன்2, ரஜினிகாந்த்தின் அண்ணாத்த’, அஜீத்தின் ’வலிமை’ உள்ளிட்ட பல படங்கள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின்’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவில் இருக்கிறாராம் ரஜினி.

அண்ணாத்த படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது.

அதுபோல தான் அஜித்தும் முடிவில் இருக்கிறாராம்.

இவர்களை அடுத்து சூர்யாவும் ’அருவா’ பட சூட்டிங்கை ஜனவரியில் தொடங்க நினைக்கிறாராம்.

படக்குழுவினர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என இந்த ஹீரோக்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அடுத்த லாக்டவுன் வேண்டாம்ன்னா வீட்டிலேயே இருங்க.. முதல்வர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொடிய வைரசான கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.

இந்த வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் பல்வேறு மரண செய்திகளை கேட்டு வருகிறோம்.

இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளது.

அதுபோல் கர்நாடகாவிலும் தற்போது அதிகரித்து வருகிறது.

முக்கியமாக பெங்களுருவில் இந்த வைரஸ் பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.

எனவே ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அண்மையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீடிக்க வேண்டாம் என்றால் மக்களை வீட்டிலேயே பாதுக்காப்பாக இருக்க வலியுறுத்துங்கள் என தெரிவித்திருந்தாராம்.

ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் என அறிவித்த மாநிலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளதால் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவே மேற்கு வங்க முதல்வர் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துவிட்டார்.

இந்த மாநிலங்களை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொது முடக்கத்தை நீடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சுஷாந்த் சிங் நினைவு இல்லம் & ட்ரஸ்ட் தொடங்க குடும்பத்தினர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியின் வாழ்க்கை படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டியவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

34 வயதான இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது இந்திய சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்த் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் ‘குட்பை சுஷாந்த்’ என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா, அறிவியல், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இளம் திறமைசாலிகளுக்கு ஆதரவாக சுஷாந்த் சிங் ராஜ்புட் அறக்கட்டளை ஒன்றை நிறுவ உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிறு வயதில் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் அவர் வளர்ந்த வீட்டை நினைவில்லமாகவும் மாற்ற உள்ளார்களாம். அதில் சுஷாந்த் நினைவாக அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அவருடைய டெலஸ்கோப், பிளைட் சிமுலேட்டர் உள்ளிட்டவற்றை அவருடைய ரசிகர்களுக்காகவும், ஆர்வலர்களுக்காகவும் வைக்க உள்ளனர்.

மேலும் சுஷாந்த உயிரோடு இருக்கும்போது பயன்படுத்திய இன்ஸ்டாகிராம், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய கணக்குகளை அவருடைய நினைவாக தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரின் ஆன்மாவுக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.

போலீஸை தாக்கும்போது கண்டித்த ரஜினி… கொலை செய்த போலீசாரை கண்டிக்கலையே.. ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கில் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் தாக்குதலால் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணமடைந்தனர்.

இந்த செய்தி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் அவர்களை தாக்கிய போலீசை சஸ்பெண்ட் செய்தும் ஆயுதப்படைக்கும் மாற்றி உள்ளது காவல்துறை.

மேலும் தமிழக அரசு அந்த குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்துள்ளது.

ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இறப்புக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவுசெய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது-

#JusticeForJayarajAndFenix என்கிற ஹேஷ்டேகில் கோலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி என உச்ச நட்சத்திரங்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

நீங்கள் எப்போது மெளனத்தைக் கலைக்கப்போகிறீர்கள்” என இவர்களின் ரசிகர்களே கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து மற்றொரு புகாரும் எழுந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு காவிரி பிரச்சினையின் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்ற போராட்டங்கள் நடைபெற்றது.

அப்போது போலீஸை ஒரு ஜிம் பாய் தாக்கிய வீடியோ வெளியானது.

அதை ரஜினி கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதில், ”வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த்.

தற்போது போலீஸின் கொடூரமான தாக்குதலால் இரண்டு உயிர்கள் போய்விட்டது.

போலீசை தாக்கியவர்களை கண்டித்த ரஜினி, இரு அப்பாவிகள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்யவில்லையே என கேட்டு வருகின்றனர்.

More Articles
Follows