உங்க ஹீரோஸ் சம்பளத்தை குறைப்பார்களா..? வலுக்கும் எதிர்ப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் தயாரிக்கப்படும் படங்களில் பாதி பட்ஜெட் ஹீரோவின் சம்பளத்திற்கே ஒதுக்கப்படுவதாக வெகுநாட்களாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என மதுரை-ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இதன் சங்கத் தலைவர் செல்வின்ராஜ் தலைமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

  • சமீபகாலமாக வெளியாகும் பெரிய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை தரவில்லை.
  • எங்களை போன்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம். எனவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் அவர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.
  •  ரூ.50 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை, தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். படம் வெற்றியடைந்து லாபம் கிடைத்தால் அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
  • ஒருவேளை நஷ்டமடைந்தால், அந்த பணத்தை விநியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரஜினிக்கு பயந்த சிவகார்த்திகேயன், விஜய்க்கு பின்னால் வருகிறார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லுங்கி கட்டிகிட்டு குனிஞ்சி நிற்கிற கபாலின்னு என்னை நினைச்சியா…? நான் கபாலிடா… என்று டீசரில் ரஜினி பன்ச் பேசியிருந்தார்.

அவர் அப்படி கூறியதாலோ என்னவோ? அப்படத்தின் இசை வெளியீட்டு தினத்தில் கூட மற்ற படங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட தயங்கி வருகின்றனர்.

ஜூன் 9ஆம் தேதி அன்று கபாலி பாடல்கள் வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயனின் ரெமோ பர்ஸ்ட் லுக் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ரெமோ ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24AM Studios தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் அன்றைய தினத்தில் அனிருத் இசையமைத்துள்ள தீம் மியூசிக்கும் வெளியாகவுள்ளதாம்.

ஜூன் 22ஆம் விஜய்யின் பிறந்த நாள் என்பதால், மறுநாள் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறைவி சொல்லிட்டு இப்படி செய்யலாமா..? ராதாரவிக்கு நிஷா கேள்வி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் இறைவி. இப்படம் நாளை வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை தொகுப்பாளினி நிஷா தொகுத்து வழங்கினார்.

இப்படத்தில் நடித்துள்ள ராதாரவி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

படத்தின் கலைஞர்களை பற்றி கூறும்போது நிஷா இவரது பெயரை கூறவில்லை என்பதால், 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள தன்னை யாரோ ஒருவர் போல நிஷா அழைத்து விட்டார்.

தொகுப்பாளினிக்கு அழகும் வேண்டும் கூடவே அறிவும் வேண்டும்” என்று நிஷாவை மேடையிலேயே திட்டினார்.

ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு பலத்த தைட்டலும் கிடைத்தது.

இந்நிலையில் இதுகுறித்து நிஷா கூறியதாவது… ”அந்த விழாவில் நான் தொகுப்பாளினி மட்டுமே. படக்குழு கொடுத்த ஸ்கிரிப்ட்டில் ராதாரவியின் பெயர் இல்லை. எனவே நானும் சொல்லவில்லை.

அவர்களின் இறைவி படத்தில் பெண்களை மதிப்பதாக கூறியுள்ளனர். ஆனால் பொது மேடையில் ஒரு பெண்னை இப்படி ஒரு ஆண் திட்டியுள்ளார்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தனுஷின் நன்றிக் கடன்… இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் ஒரு யதார்த்த நாயகனாக வலம் வந்த தனுஷை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல் ராய்.

இவரது இயக்கத்தில் ராஞ்சனா படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களையும் தன் நடிப்பால் கவர்ந்தார் தனுஷ்.

இதனையடுத்து அமிதாப்புடன் ஷமிதாப் படத்திலும் நடித்தார். விரைவில் ஹாலிவுட்டிலும் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இந்நிலையில் நிம்மோ என்ற படத்தில் வரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க தனுஷிடம் கேட்டுள்ளார் இதன் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

தன்னை பாலிவுட்டுக்கு அழைத்து சென்றவர் ஆச்சே. மறுக்கமுடியுமா? என சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுத்துள்ளார் தனுஷ்.

இதனால் ஆனந்த மழையில் நனைந்த வண்ணம் இருக்கிறாராம் ஆனந்த் எல்.ராய்.

‘கடவுள் காட்டிய இந்த நாளுக்காக காத்திருந்தேன்…’ சிம்பு மகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல எதிர்ப்புகளுக்கும் இடையிலும் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையிலும் சிம்பு நடித்த இது நம்ம ஆளு வெளியானது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான் இப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ஆண்டரியா, சூரி, சந்தானம், ஜெயப்பிரகாஷ், தீபா ராமானுஜம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வெற்றிக் குறித்து சிம்பு கூறியதாவது…

“ரசிகர்கள் என் படத்தை வெற்றிப்படமாக்கியதற்கு மகிழ்ச்சி. என்னுடைய கஷ்டமான காலத்திலும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை.

தற்போது எல்லாம் நன்றாக நடந்துள்ளது. இது நடக்கும். இந்த நாள் வரும் என காத்திருந்தேன். கடவுள் அவரது சக்தியை காட்டிவிட்டார். எல்லாருக்கும் நன்றி” என கூறினார்.

காந்தி, பாரதியார், தெரசா, அப்துல்கலாமுடன் செல்ஃபி எடுக்கனுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த மாதம் ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் இந்தியாவின் முதல் தந்திரகலை அருங்காட்சியகம் துவங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தற்போது 39வது சென்னை புத்தகக் காட்சியில் இந்தியாவின் 2வது தந்திரகலை அருங்காட்சியகத்தை அமைத்துள்ளார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இதனை ஒளிப்பதிவாளர் P.C. ஸ்ரீராம் இன்று துவக்கி வைத்து பேசியதாவது…

“ஸ்ரீதர் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய அனைத்து பயணத்திலும், நான் இருந்திருக்கிறேன்.

தந்திரகலை அருங்காட்சியகம் சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது. அதனை இந்தியாவுக்கு என் நண்பர் ஸ்ரீதர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதில் உள்ள ஓவியங்களுடன் நாம் செல்ஃபி எடுத்து கொள்வது போன்று அழகாக வடிவமைத்துள்ளார். இது அனைவரையும் கவரும்“ என்றார்

இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஓவியங்கள் சில…

  •  காந்தியடிகள் ராட்டினத்தை கொடுப்பார்.
  • திருவள்ளுவர் திருக்குறள் அறிச்சுவடியை கொடுப்பார்
  • அன்னை தெரசவிடம் ஆசி பெறலாம்.
  • பாரதியாருடன் செல்ஃபி எடுக்கலாம்.
  • அப்துல்கலாம் பூந்தொட்டி கொடுப்பார்.
  • சேகுவேராவுடன் செல்ஃபி எடுக்கலாம்.

இந்த தந்திரகலை அருங்காட்சியகம் இன்று 01.06.2016 முதல் 13.06.2016 வரை தீவுத்திடலில் அமைந்திருக்கும்.

மூன்றாவது தந்திரகலை அருங்காட்சியகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எக்ஸ்ப்ரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது.

More Articles
Follows