‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலிக்கு இணையாக சங்கமித்ரா படத்தை எடுக்க தயாரானார் இயக்குனர் சுந்தர் சி.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

திரு ஒளிப்பதிவு செய்ய கலை இயக்குநராக சாபுசிரில் பணிபுரிகிறார்.

உலகப்புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் இதற்கான பர்ஸ்ட் லுக் அறிமுகவிழாவும் நடைபெற்றது.

இதன்பின்னர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஸ்ருதிஹாசன்.

எனவே ஸ்ருதிக்கு பதிலாக ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் நடித்த திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம்.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள், ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ் பாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’ படம் நாளை மறுநாள் செப். 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் ‘பாரத் அனே நேனு’ படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு.

இதன்பின்னர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை முடித்துவிட்டு 2018-ம் ஆண்டு இறுதியில் ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை மகேஷ்பாபுவும் ‘ஸ்பைடர்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய்யுடன் மோத 2; சூர்யாவுடன் மோத 1; விஷால் போட்ட ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2017 தீபாவளி மற்றும் 2018 பொங்கல் தினங்களில் நிறைய படங்கள் வெளியாகவுள்ளன.

தற்போது தீபாவளி நெருங்குவதால் ஒவ்வொன்றாக அறிவிக்க தொடங்கிவிட்டனர்.

வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று விஜய் நடித்துள்ள மெர்சல் படம் கேரளா, ஆந்திரா மற்றும் உலகமெங்கும் ரிலீஸாகிறது.

அன்றைய தினம் விஷாலின் இரண்டு படங்கள் இந்த படத்துடன் மோதவுள்ளன.

துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு பதிப்பு டிடெக்டிவ் என்ற பெயரில் வெளியாகிறது.

மேலும் மோகன்லால் உடன் விஷால் இணைந்துள்ள வில்லன் என்ற மலையாள படம் கேரளாவில் வெளியாகிறது.

மேலும் 2018 பொங்கல் தினத்தில் (ஜனவரி 12) சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படமும் விஷால் நடித்துள்ள இரும்பு திரை என்ற படமும் மோதவுள்ளன.

பேய் இல்லை என்பதை நிரூபிக்க ராம்கி எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ், படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத்.

இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் கூறியதாவது…

இத்திரைப்படத்திற்கு இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.

இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார்.

அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட ,அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்கிறார்.

எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது.

அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம்.

இப்படம் ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும்.

இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். படத்தில் சிங்கம் புலி பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார் அவர் வரும் காட்சிகள் முழுவதும் பயங்கற அலப்பறையாக இருக்கும் என்றும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றும் கூறினார்.

Actor Ramki new movie titled English Padam releasing on Oct 6th 2017

இந்தாண்டு இறுதியில் கமல் கட்சி; சினிமாவை விட்டு விலகுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருகிறார்? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் கமலின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது.

இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் அரசியலுக்கு வருவேன். தேவைப்பட்டால் முதல்வராகுவேன் என பகிரங்கமாக தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்க்மாக அறிவித்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“இதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தேன்.

நான் கட்சி தொடங்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என 30 நாளா, 60 நாளா, 100 நாட்களா என கேட்டார்கள்.
அப்போது எனக்கான ஒரு கால அவகாசத்தைதான் நான் தெரிவித்தேன்.

ரஜினியும், நானும் ஏற்கெனவே அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்து உள்ளோம்.

தற்போது நிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தாண்டு இறுதியில் அதாவது 2018 புத்தாண்டு தொடக்கத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

அதன்பின்னர் கமல் சினிமாவில் நடிக்கமாட்டார் என கூறப்படுகிறது.

Kamalhassan quitting film industry as he entering into politics

கடையை திறந்து வைத்து பொதுமேடையில் ஆட்டம் போட்ட ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் இன்று சரவணா ஸ்டோர்ஸின் புதிய கடையை நடிகை ஓவியா திறந்து வைத்தார்.

இதற்கான விளம்பரங்கள் பல நாட்களாக டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வந்தது.

இதனையறிந்த ரசிகர்கள இன்று ஓவியாவை வருகையொட்டி கடை முன் குவிந்தனர்.

கடை திறப்பு விழாவிற்கு வந்த ஓவியா, வெளியில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் தோன்றினார்.

அப்போது ’கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட…’ என்று பாட்டு பாடி நடனமாடினார் ஓவியா.

Oviya dance in public at Saravana Store opening ceremony

More Articles
Follows