சிம்பு கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர்கள் ராம் & மிஷ்கின்..?

சிம்பு கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர்கள் ராம் & மிஷ்கின்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் ‘மாநாடு’ ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து ‘பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் படம், மிஷ்கினுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வருகின்றன.

மேலும் சிம்புக்காக கே வி ஆனந்த் கதை ஒன்று எழுதி வைத்திருந்தாராம்.

ஆனந்த் மரணம் அடைந்துவிட்டதால் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறதாம்.

Directors Ram and Mysskin to work with STR

விக்ரம் கீர்த்தி ஐஸ்வர்யா நடித்த ‘சாமி 2’ ஹிந்தியில் சாதனை

விக்ரம் கீர்த்தி ஐஸ்வர்யா நடித்த ‘சாமி 2’ ஹிந்தியில் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கிய போலீஸ் ஸ்டோரி படங்கள் எப்போதுமே பெரும் ஹிட்டடித்து வருகின்றன.

சாமி, சிங்கம் 1 2 3 ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் சாமி 2 படம் சரியாக போகவில்லை.

விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் 2018ல் ரிலீசானது.

தமிழில் இப்படம் படு தோல்வி் அடைந்தாலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூபில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது 110 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறதாம்.

Saamy Square hindi version creates records

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி தீர்மானம்

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி தீர்மானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதில் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருவதாகவும் மோடி அரசின் மக்கள் நல திட்டம் சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ‘ ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021 ‘க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

BJP Youth wing condemns Actor Suriya

‘கைதி’ கதை திருடப்பட்டதா.? 2வது பாகத்திற்கு கேரள அரசு தடை.? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

‘கைதி’ கதை திருடப்பட்டதா.? 2வது பாகத்திற்கு கேரள அரசு தடை.? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடித்து வெளியான படம் ‘கைதி’.

இப்படம் அந்தாண்டு தீபாவளிக்கு வந்த விஜய் படத்துடன் மோதியது. வசூலில் சக்கை போடு போட்டது.

ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டதாக சில மலையாள ஊடகங்கள் & தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியானது.

(கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ல் புழல் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொன்னதாகவும்
அவர் அப்போதே ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு கதை கை மாறியதாக கூறப்படுகிறது. )

நம் தளத்தில் இப்படியொரு செய்தி வெளியாகவில்லை.

இது குறித்து டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் தன் ட்விட்டரில்….

“எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இது சம்பந்தமாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது.

அதே சமயம் ‘கைதி’ சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!” என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kaithi movie Controversy Clarification Statement from Producer SR Prabhu

ரஜினிக்கு OFF MODE.. விஜய்க்கு BEAST MODE..; குஷ்பூ-மீனா செஞ்சத கூட கீர்த்தி செய்யலையே

ரஜினிக்கு OFF MODE.. விஜய்க்கு BEAST MODE..; குஷ்பூ-மீனா செஞ்சத கூட கீர்த்தி செய்யலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshதமிழ் சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் கீர்த்தி சுரேஷ்.

இளம் வயதிலேயே ‘மகாநடி’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் நடித்து இந்தியா முழுக்க பிரபலமானார்.

தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவர்களுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா ஆகிய பிரபல நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் (ஜூன் 22) நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் பட போஸ்டரை தன் ட்விட்டரில் பதிவிட்டு விஜய்யை வாழ்த்தியிருந்தார் கீர்த்தி. (இந்த படத்தில் கீர்த்தி நடிக்கவில்லை)

மேலும் விஜய்யின் பாடலான ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆட்டம் போட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் ‘அண்ணாத்த’ பட போஸ்டரை அப்பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

தலைவர் தீபாவளி…அண்ணாத்த தீபாவளி என அனைவரும் வாழ்த்தி வரவேற்றனர்.

இப்பட கலைஞர்கள் மற்றும் குஷ்பூவும் தன் ட்விட்டரில் அண்ணாத்த போஸ்டரை பதிவிட்டு இருந்தார்.

மீனா தன் இன்ஸ்டா பக்கத்தில் அண்ணாத்த அப்டேட் கொடுத்திருந்தார். நயன்தாரா என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் கூட அண்ணாத்த போஸ்டர் பதிவானது.

ஆனால் இதில் நடிக்கும் கீர்த்தி இதுவரை அண்ணாத்த போஸ்டரை பதிவிடவில்லை.

டாப் ஹீரோயின்களே ரஜினி போஸ்டரை பதிவிடும் போது இந்த கீர்த்திக்கு என்னாச்சு என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

பீஸ்ட் படத்தில் நடிக்காத கீர்த்தி அப்பட போஸ்டரை பதிவிட்டு இருக்கிறார்.

ஆனால் அண்ணாத்த பட போஸ்டரை பதிவிட மனம் இல்லையா? என ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Rajini fans critisize Actress Keerthy Suresh

அர்ஜுன் கட்டிய கோயிலில் உலகில் முதன்முறையாக 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை

அர்ஜுன் கட்டிய கோயிலில் உலகில் முதன்முறையாக 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjunஅனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார்.

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் அர்ஜூன் கூறுகையில்…

“ இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.

தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது.

இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியது என்பது தான் உண்மை.

ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.

பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவி திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கபடவுள்ளது.

கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை” என்று என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான அர்ஜூன் கூறினார்.

Action King Arjun built Anjaneyar temple in chennai

More Articles
Follows