ஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

ஆசியாவின் சிறந்த திரைப்படமாக இயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaranjaniyum innum sila pengalumஇயக்குனர் வஸந்தின் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்படவிழா, பூனே சர்வதேச திரைப்படவிழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்படவிழாவில் தேர்வுசெய்யப்பட்டு வெளியாகியுள்ளது
சர்வதேச பெங்களூர் திரைப்பட விழாவில் வெளியாகி ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கபட்டுள்ளது. இன்னும் பல சர்வதேச திரைப்படவிழாவிலும் தேர்வு செய்யபடுள்ளது.

இந்திரைப்படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி , காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ”மயக்கம் என்ன“ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது குறிப்பிடதக்கது.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையாக்கி இயக்குனர் வஸந்த் எஸ் சாய் இத்திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இயக்குநரான காமெடி நடிகர் சிட்டிசன் மணி !!

இயக்குநரான காமெடி நடிகர் சிட்டிசன் மணி !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

citizen maniபல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பெருநாளி’ என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் சிட்டிசன் மணி, சுமார் 100
க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருப்பவர், வடிவேலுவுடன் ஏராளமான
படங்களில் நடித்து தனது காமெடி நடிப்பால் பாராட்டு பெற்றிருக்கிறார்.

தற்போதும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் சிட்டிசன் மணி, முதல் முறையாக கதை,
திரைக்கதை, வசனம் எழுதி படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க,
ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்க,
இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும்
நடிக்கிறார்கள்.

படம் குறித்து சிட்டிசன் மணியிடம் கேட்டதற்கு, “மாமா – மருமகள் செண்டிமெண்ட் தான் கதை. தனது அக்கா இறந்த
பிறகு அவரது மூன்று மகள்களை கஷ்ட்டப்பட்டு வளர்க்கும் தாய்மாமன், அவர்களுக்காக வாழ்வதோடு, அவர்களுக்கு
வரும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது தான் படத்தின்
கதை. தனது மருமகள்களுக்காக காதல், கல்யாணம் ஆகியவற்றை உதரித்தள்ளும் தாய்மாமனின் பாசப் போராட்டம்
பெரிதும் ரசிக்கும்படி இருக்கும்.” என்றார்.

தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, தீப்பொறி
நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா பற்றிய
பாடலாகும். படத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் இடத்தில் வரும் இப்பாடல், புரட்சித்தலைவியின்
பிறந்தநாளை கொண்டாடுபவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையிலும், அதிமுக-வின் பிரச்சார பாடலாகவும்
ஒலிக்கும் வகையில் சிறப்பாக வந்திருப்பதாக கூறிய சிட்டிசன் மணி, விரைவில் இப்பாடலை பிரம்மாண்டமான
முறையில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டு வரும் சிட்டிசன் மணியின் ‘பெருநாளி’
விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது.

’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

’சாதனை பயணம்’ மூலம் கோடம்பாக்கத்தில் உதயமான புதிய நட்சத்திரம் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parameshwarவிஜியாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘சாதனை பயணம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய
நட்சத்திரமாக உதயமாகிறார் கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தையும்
தயாரிக்கும் பரமேஸ்வரர், ‘காதல் டாட்காம்’, ‘த்ரி ரோசஸ்’, ‘மேடை’, ‘பீஸ்மர்’ உள்ளிட்ட சுமார் 15 க்கும்
மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா மீது உள்ள ஆர்வத்தால் 13 வயதிலேயே சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர், சினிமாவில் பல
பணிகளை செய்து வந்த நிலையில், தற்போது ‘சாதனை பயணம்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக
அறிமுகமாகிறார். இவருடன் அழகு, எஸ்.கே.எம்.பாண்டியன், தமிழடியான், முகேஷ், லிபாலி பரமேஸ்காந்த்,
கருப்பு ராஜா, சக்திவேல், வாண்யா, ஜெய்கோபி, குமார், சங்கீதா, ஹரிப்பிரியா, விகாசினி உள்ளிட்ட பலர்
நடிக்கிறார்கள்.

இசையரசர் தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வராஜ் எடிட்டிங்
செய்ய, அக்‌ஷய் ஆனந்த், கூல் ஜெயந்த், பவர் சிவா ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். கவிஞர் முத்துலிங்கம்,
முனைவர் சி.வீரமணி, சொ.சிவக்குமார், கலை வேந்தன், சுதந்திரதாஸ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். சாய்
மணி ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சின்னமணி கவனிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மாதேஷ்வரா, படம் குறித்து கூறுகையில், ”மனிதர்களின்
வாழ்க்கையே ஒரு சாதனை பயணம் தான். அந்த வகையில், சாதாரண விவசாயி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும்
பிரச்சினைகளை சமாளித்து தனது வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார், என்பது தான் படத்தின் கதை. இதில்,
பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோர்களை கைவிட்டு விடுவது பற்றியும், பேசியிருக்கிறோம். வானத்தை போல, சேது
போன்ற படங்களின் வரிசையில் உணர்வுப்பூர்வமான படமாக சாதனை பயணம் உருவாகியுள்ளது.

இப்படத்தை பார்க்கும் பிள்ளைகள் தங்களது பெற்றோர்கள் மீது அதிகமான அன்பும், அக்கறையும் காட்டுவார்கள்
என்பது உறுதி.” என்றார்.

ஹீரோ பரமேஸ்வரருக்கு ஹீரோவாக இது தான் முதல் படம் என்றாலும், இப்படத்தின் சண்டைக் காட்சிகளில்
ஒரிஜினலாக நடித்திருக்கிறார். மெத்தை, ரோப் என்று எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்,
சண்டைக்காட்சிகளில் இவர் நடித்ததை பார்த்து ஒட்டு மொத்த படக்குழுவும் பாராட்டு தெரிவித்தது. அப்படி ஒரு
சண்டைக்காட்சியில் முழுக்க முழுக்க தண்ணீரில் இருந்தபடியே சண்டை போடும் போது, அவரது கைவிரல் உடைத்து
போனாலும், அந்த வலியையும் தாங்கிக் கொண்டு பரமேஸ்வரர் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

இப்படத்திற்காக தஷி இசையமைத்திருக்கும் 6 பாடல்களும் மிக சிறப்பாக வந்திருப்பதோடு, பின்னணி இசையும்
படத்திற்கு பெரும் பலம் சேர்க்கும் விதத்தில் உருவாகி வருகிறதாம். படத்தின் காட்சிகளையும், ஹீரோவின்
பர்பாமன்ஸையும் பார்த்து வியந்த இசையமைப்பாளர் தஷி, ‘கலக்கல் ஸ்டார்’ என்ற பட்டத்தை பரமேஸ்வரரருக்கு
வழங்கி கெளரவித்துள்ளார்.

தற்போது டாக்கி போஷன்களை முடித்துவிட்டு பாடல்களை படமாக்க தயராகியுள்ள ‘சாதனை பயணம்’
படக்குழுவினர் படத்தினை கோடை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் திரையிடப்பட்ட இயக்குனர் கௌரவ் நாரயணனின் “தூங்கா நகரம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gaurav narayananஇஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த “இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்” நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய “தூங்கா நகரம்” திரைப்படம் திரையிடப்பட்டது.

படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ”பன்னிக்குட்டி ” எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையா இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

panni kuttyஅனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ” பன்னிக்குட்டி” .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.

இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,
ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கம் N .R சுகுமாரன் , படத்தொகுப்பினை M.அனுசரண் மேற்கொள்கிறார்.

நடிகர்கள்:
கருணாகரன் ,
யோகிபாபு ,
சிங்கம் புலி ,
திண்டுக்கல் லியோனி ,
T.P கஜேந்திரன் ,
லக்ஷ்மி ப்ரியா ,
ராமர் ,
‘பழைய ஜோக்’ தங்கதுரை

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – அனுசரண் முருகையன்
கதை – ரவி முருகையன்
திரைக்கதை – M .மணிகண்டன் , அனுசரண், ரவி முருகையா
தயாரிப்பு – லைக்கா புரொடக்ஷன்ஸ்
இசை – கிருஷ்ணகுமார் ( K )
ஒளிப்பதிவு- N .சதிஷ் முருகன்
படத்தொகுப்பு- M .அனுசரண்
சண்டை பயிற்சி – ‘ FIRE ‘ கார்த்திக்
தயாரிப்பு மேலாளர் – M .சிவகுமார்
ஒப்பனை-P S.சந்திரசேகர்
கிரியேட்டிவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள் – சமீர் பரத் ராம் ( SUPER TALKIES ),M.மணிகண்டன் ( TRIBAL ARTS)
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அகமது

நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்திய தல அஜித்

நீண்ட டயலாக்கை ஒரே டேக்கில் பேசி அசத்திய தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith‘விஸ்வாசத்தைத் தொடர்ந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இது, இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்னையில் அஜித் ரசிகர்களின் அன்பு தொல்லையால் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமாஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கி வருகின்றனர்.

கோர்ட் சம்பந்தப்பட்டக் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு நீண்ண்ட டயலாக் ஒன்றை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டாராம் அஜித்.

More Articles
Follows