தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2ல் டைட்டில் வென்ற நடிகை கனியின் கணவர் ஆவார்.
காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியன் தான் கனியின் தந்தை. அதாவது திரு வின் மாமனார் அகத்தியன்.
ஒரே குழப்பமாக இருக்கா? சரி விஷயத்துக்கு வருகிறோம்.
இந்த நிலையில், இயக்குனர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில்..
“தேடி அலைஞ்சு இனிமே கிடைக்க வாய்ப்பே இல்லனு சோர்ந்து உக்காரும் போது உங்களுக்கு ஏதாவது கிடைச்சிருக்கா.. எனக்கு கெடச்சுது.. Yes என்னோட Wallet After 2 weeks.. காதல் கோட்டை சூர்யாக்கள் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. Thank you Mr G.Mohan #Humanity #மனிதம்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இவரின் தொலைந்து போன பொருட்கள் கிடைத்திருப்பதை இப்படி பதிவிட்டுள்ளார்.
இவரது மாமனார் அகத்தியன் இயக்கிய ‘காதல் கோட்டை’ படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் சூர்யா.
அதில் ஒரு காட்சியில் தேவயாணி ரயிலில் தவறவிட்ட பொருட்களை அஜித் அவரது (நாயகி) முகவரிக்கு அனுப்பி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Director Thiru latest tweet goes viral
