மெகா ப்ராஜக்ட்க்கு ப்ளான் போடும் ‘திருட்டுப் பயலே’ சுசி கணேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பைஃவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே’ மற்றும் ’திருட்டுப் பயலே 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன்.

தற்போது ’திருட்டுப்பயலே 2’ படத்தை ஹிந்தியில் இயக்கி வருகிறார்.

வினித் குமார் சிங் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தற்போது கொரேனாவில் தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் சுசி கணேசன் விரைவில் மெகா பட்ஜெட் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க இருக்கிறாராம்.

கொரோனா பிரச்சினை மற்றும் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கொரோனா மருந்து கேட்டு இந்தியாவை மிரட்டியதா அமெரிக்கா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் மிக கொடிய நோயாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

அதிலும் உலக நாடுகளில் இதன் பாதிப்பில் அமெரிக்காவில் முதலிடத்தில் உள்ளது.

ஒரே நாளில் மட்டும் 1,255 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

எனவே கொரோனா சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.

இதனையடுத்து மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.

இதனிடையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.

இதனால் மருந்துகளை பெறுவதில் அமெரிக்காவுக்கு பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடியிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் மருந்துக்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் அமெரிக்கா ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன்.

அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று மறைமுக மிரட்டல் விடுப்பது போல தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது

உதவுவது நல்லது தான். அதே சமயம் நம் தேவைக்கு மருந்தை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு மிஞ்சியது தான் தானம் தர்மம் என்ற பாணியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன் அனுபவத்தில் இப்படி ஒரு மிரட்டும் அரசு குறித்து கேள்விப்பட்டதில்லை என அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜின்பிங் & தப்லிக் ஜமாத்துக்கு லெட்டர் போட்டிருக்கலாமே கமல் சார்…; காயத்ரி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸை தடுக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா இருளை அகற்ற இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்றார் சொன்னார் பிரதமர் மோடி.

இதனை கண்டித்து நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் காட்டமான ஒரு கடிதம் கடிதம் எழுதியிருந்தார்.

பணமதிப்பிழப்பு பாணியில் இந்த ஊரடங்கை அமல்படுத்தினீர்கள்.

நான் இரண்டு சூழல்களிலும் உங்களை நம்பினேன். நான் நினைத்தது தவறு என உணர்த்திவிட்டீர்கள்.

எண்ணெய்க்கு வழியில்லாத ஏழைகள் விளக்கேற்ற முடியுமா?. தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்ன ?

ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் பால்கனி அரசாக நீங்கள் இயங்கி வருகிறீர்கள் என கடுமையாக மோடியை விமர்சித்திருந்தார் கமல்.

இந்த நிலையில் கமலின் கடிதத்தை விமர்சித்து நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது..

“சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும் நீங்கள் ஏன் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காமலும் கீழ்படியாமலும், பொறுப்பற் குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். அப்படியானால் தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா?

தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள் எனும்போது அதில் பங்கேற்கவில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா?

என கடுமையாக கமலை சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்.

கொரோனாவுக்கே சவால் விடும் சேலை சேலன்ஞ்ச்..; தாங்க முடியலப்பா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவிலும் ஆரம்பம் ஆனாலும் தற்போது அமெரிக்காவில் இதன் தாக்குதல் அதிகளவில் உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது.

இதனால் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீட்டிலேயே இருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தை போக்க சாரி சேலன்ஞ்ச்சை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

தங்களுக்கு பிடித்தசேலைகளை அணிந்து போட்டோ மற்றும் வீடியோஸ் எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் பகிர்ந்து வருகின்றனர்.

இவர்களை மிஞ்சும் வகையில் அமெரிக்காவில் உள்ள இந்திய பெண்கள் தத்தம் வீட்டு வாசல்களில் தெரு முழுக்க நின்றபடி விதவிதமான புடவைகள் அணிந்தபடி போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

இந்த சேலை சேலன்ச் முன்பு வீட்டில் மட்டுமே இருந்தது. தற்போது சாலை வரை வந்துவிட்டது.

ஊரடங்கு உள்ளபோது சாலையில் இது தேவையா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

சீயான் விக்ரம் பிறந்த நாளில் ‘கோப்ரா’ டீசர் வெளியாகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ’கோப்ரா’,

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கோப்ரா பட பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே இப்பட ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 17 அன்று விக்ரம் தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

எனவே அன்று கோப்ரா பட டீசர் வெளியாகுமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் டீசரை தற்போது வெளியிட வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு விஜயகாந்த் உதவி; கேப்டன் மனசு கோல்டுயா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு பக்கம் தீவிர சிகிச்சைகள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் ரயில்வே பெட்டிகளை சிகிச்சை வார்டுகளாக மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பெரிய உதவியை செய்ய முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள்‌ எடுத்து வரும்‌ நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது.

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்‌ வகையில்‌, ஆண்டாள்‌ அழகர்‌ பொறியியல்‌ கல்லூரியையும்‌, சென்னையில்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும்‌ தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்‌ என கேட்டு கொள்கிறேன்‌.

கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில்‌ வசிக்கும்‌ தேமுதிக நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ அனைவரும்‌ அத்தியாவசியப்‌ பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம்‌ உள்ளிட்ட நிவாரணப்‌ பொருட்களை வழங்க வேண்டும்‌.

தூய்மை பணியாளர்களுக்கும்‌, தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்‌.

ஊரடங்கு உத்தரவால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர்‌ ஆட்டோ ஓட்டுனர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ மற்றும்‌ வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்‌ தினக்கூலி தொழிலாளர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தங்களால்‌ இயன்ற உதவியை செய்ய வேண்டும்‌.

இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Captain Vijayakanth offers his places for Corona treatment

More Articles
Follows