நமது கல்விமுறை பற்றிய படமாக *ஜீனியஸ்* இருக்கும் – சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் “ ஜீனியஸ்“ இப்படத்தை இயக்குனர் சுசீந்தரன் இயக்கியுள்ளார்.

படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியது :- ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன் ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து அதை குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பி சென்றார். அப்படி சென்ற அவரிடம் கடைகாரர் பணம் கேட்ட போது அவரிடம் பயங்கரமாக கோபப்பட்டு நாளை தருகிறேன் என்று கத்தி கூறினார். அந்த கோபம் பயங்கரமானதாக இருந்தது.

நல்ல படித்த , பெரிய வேலையில் உள்ள நபர் போல் தோற்றமளித்த அவரின் ஸ்ட்ரெஸ்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் போது தோன்றிய கதை தான் இப்படத்தின் கதை. இக்கதையை நான் விஜய் , அல்லு அர்ஜுன் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல ஹீரோக்களிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இக்கதையில் நடிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் இக்கதையில் ஹீரோ இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஹீரோவுக்காக கதை பண்ணாமல் இக்கதைக்கான ஹீரோவை படத்தின் கதையே முடிவு செய்தது.

இப்படம் கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழில் வெளிவந்த படங்களில் கல்வி மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் ஜீனியஸ் முக்கியமான படமாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு கதையை எழுதிவிட்டு அதை படமாக திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை இருந்தது அது ரோஷன் மூலம் நிறைவேறியுள்ளது. ரோஷன் நல்ல தயாரிப்பாளர் விரைவில் நல்ல நடிகராக அனைவராலும் அறிப்படுவார். இன்று ஆங்கில வழி கல்வி முக்கியமான ஒன்றாகிவிட்டது. எனக்கு ஆங்கிலம் பெரிதாக தெரியாது நான் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி தான் கற்றேன். நமது அரசாங்கம் ஆங்கில வழி கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் அனைவராலும் ஆங்கிலம் எளிதாக பயின்று பேச முடியும். இன்று ஆங்கிலம் மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. படத்தில் படிப்போடு விளையாட்டும் தேவை என்பதை மிகவும் ஆழமாக கூறியுள்ளோம் என்றார் இயக்குனர் சுசீந்திரன்.

*திருட்டுபயலே* டைரக்டர் சுசி கணேசன் மீது அமலாபால் பாலியல் #MeToo புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2005-ம் ஆண்டு பேட்டி முடிந்ததும் தன்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞர் லீனா மணிமேகலை மீ டூ பரப்புரையில் குற்றம் சாட்ட உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்த சுசி கணேசன் அதை மறுத்தார்.

மேலும், லீனா மணிமேகலை மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் சுசி கணேசன் இயக்கத்தில் ‘திருட்டு பயலே 2’ படத்தில் நாயகியாக நடித்த அமலா பால், லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமலாபால் கூறியிருப்பதாவது:

இயக்குநர் சுசி கணேசன் மீதான லீனா மணிமேகலையின் குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன்.

பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தரத் தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக அந்தப் பெண் என்ன பாடுபட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.

நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குநர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன்.

இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன்.

அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஈஸியாக இரையாக்கி விடுகிறது.

அங்கிங்கு எனாது படி அனைத்து தொழில்களிலும், துறைகளிலும் இந்தக் கொடுமை நடந்து வருகிறது.

தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றிக் காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்திக்கொண்டே இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை, கலைச் சேவை மற்றும் ஆன்மிகத் துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.

ஆன்மிகத் துறையிலும், கலைத் துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவரத் துவங்கி உள்ளன.

இதேபோல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்கபடாத மற்ற துறைகளில் இருந்தும் #Metoo குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.

அரசாங்கமும், நீதித்துறையும் எதிர்காலத்தில் இவ்விதக் கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு முன்னிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல் படுத்த வேண்டும்.

அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும்.”

இவ்வாறு அமலாபால் தெரிவித்திருக்கிறார்

மிக மிக அவசரம் படத்தை 2௦௦ பெண் காவலர்களுக்கு திரையிட்ட சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண் காவலர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது பணி முறைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் மிக மிக அவசரம்.

அமைதிப்படை 2, கங்காரு படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீபிரியங்கா, பெண் காவலராக நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கு முன்பாக படத்தை 200 பெண் காவலர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார் டைரக்டர் சுரேஷ் காமாட்சி.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லும் கதை தான்.

அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையை பின்னணியில் வைத்துள்ளோம்.

இந்தப் படத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். முதல்வரின் பரிந்துரையின் பேரில் கமிஷனரும் அவரின் கீழ் உள்ள உயரிதிகாரிகளும் படம் பார்த்தனர்.

அதன்பின் சுமார் 2௦௦ பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்ட அனுமதித்தார்” என்கிறார் சுரேஷ் காமாட்சி.

Miga Miga Avasaram movie special screening for Women Police

நல்ல கதையுள்ள படங்கள் வரிசையில் *ஜருகண்டி* இருக்கும்.. : நிதின் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியுள்ள ஜருகண்டி திரைப்படம் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் நல்ல படங்கள் வரிசையில் இடம் பெற்றும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

இது குறித்து அவர் கூறியதாவது…

“இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

தனித்துவமான கதைகளை ரசிகர்கள் கொண்டாடும் விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை தருவதோடு, ஜருகண்டி இந்த சீசனில் ரிலீஸ் ஆவதற்கு மிகப்பொருத்தமான படம் என உறுதியாக நம்ப வைக்கிறது” என்கிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.

அவரது மிக நெருங்கிய நண்பரும், நாயகனுமான நடிகர் ஜெய் பற்றி நிதின் சத்யா கூறும்போது…

“இந்த படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருப்பது இந்த படத்துக்கு எந்த வகையிலும் தடையாக இல்லை.

உண்மையில், அவர் முன்பு இருந்ததைவிட அதிக பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்பட்டார். படப்பிடிப்பு முழுவதும் நல்ல முறையில் நடக்க முழு ஒத்துழைப்பை கொடுத்தார். அவர் தன்னை ஒரு சிறந்த நடிகனாக மேம்படுத்த மிகவும் முயற்சிகள் எடுத்து நடித்திருக்கிறார்.

மற்ற நடிகர்கள் பற்றி நிதின் சத்யா கூறும்போது, “படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை முழுக்க முழுக்க ரசிக்க வைக்கும்.

ரெபா மோனிகா ஜான் பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் ட்ரெண்டியாக நடித்திருக்கிறார், இது உடனடியாக பார்வையாளர்களை ஈர்க்கும். டேனியல் ஆன்னி போப், ரோபோ ஷங்கர், இளவரசு, போஸ் வெங்கட், ஜி.எம்.குமார் என எல்லோரும் அவர்களின் தனித்துவமான பாணியில் நடித்து நிரூபித்துள்ளனர்.

போபோ சசி இசையில் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது, அவரது பின்னணி இசையும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் சார்பில் ஜருகண்டி படத்தை தயாரிக்கிறார் நிதின் சத்யா.

Actor cum Producer Nithin Sathya talks about Jarugandi movie

முதன்முறையாக தனுஷுக்கு ஜோடியாகிறார் அஜித்தின் தங்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான்கு ஹீரோக்களை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

மேலும் பிரபலமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

வடசென்னை படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட உள்ள ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இவற்றை தொடர்ந்து ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இதில் நடிகை லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கிறாராம். இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இவர் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Lakshmi Menon to romance with Dhanush for First time

ரஜினி வழியில் அதர்வா; *செம போத ஆகாத* நஷ்டத்தை ஈடுகட்டும் ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குசேலன் படம் தோல்வியால் தனது குருநாதர் கே.பாலசந்தர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை, படம் வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடாக திருப்பிக்கொடுத்த வரலாறு இன்றும் பேசப்படுகிறது.

இதுபோல இன்னும் ஒரு சிலரே இந்தப்பட்டியலில் உள்ளனர். அந்த பட்டியலில் நடிகர் அதர்வாவும் தற்போது இடம்பிடித்துள்ளார்.

ஆம் சில மாதங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. தன்னை பாணா காத்தாடி படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கு கைகொடுக்கும் விதமாக, கிக்காஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இந்தப்படத்தை தானே சொந்தமாக தயாரித்தார் அதர்வா .

ஒருகட்டத்தில் இந்தப்படம் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன்.

ஆனால் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மினிமம் கியாரண்டி முறையில் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் போட்டிருந்தார் மதியழகன். ஆனால் காலை இரண்டு காட்சிகள் படம் ரிலீஸ் ஆகாததால், படத்தின் மீதான அந்த எதிர்பார்ப்பு மங்கி, விநியோகஸ்தர்களுக்கு இந்தப்படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறையில் கொடுக்க வேண்டியதாகி விட்டது.

தவிர படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதால், படத்தை வெளியிட்ட வகையில் மதியழகனுக்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. இந்த விபரங்கள் அனைத்தும் அதர்வாவுக்கும் தெரியும்.

இந்தப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே தயாரிப்பாளர் மதியழகன், ஏ.ஆர்.கே.சரவணன் என்பவர் இயக்கத்தில் அதர்வாவை வைத்து ‘மின்னல் வீரன்’ என்கிற படத்தை தயாரிக்கும் வேலைகளில் இறங்கி கிட்டத்தட்ட படப்பிடிப்பிற்கு தயார் நிலையில் இருந்தார்.

இந்தநிலையில் தன்னுடைய ‘செம போத ஆகாத’ பட வெளியீட்டால், தயாரிப்பாளர் மதியழகனுக்கு நட்டம் ஏற்பட்டதால், இதற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மின்னல் வீரன் படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்காமலேயே நடித்துக்கொடுக்க முன்வந்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் பணிகளை விரைவாக முடித்து ஆறு மாதங்களுக்குள் படத்தை வெளியிட உதவுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் அதர்வா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, சமீபகாலமாக சரிந்திருந்த அதர்வாவின் மார்க்கெட் வேல்யூவை சீராக்கி இருக்கிறது.

இந்த வருட இறுதிக்குள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2௦19ல் படத்தை வெளியிட இருக்கிறார்களாம். ஆக, மின்னல் வீரன் அதர்வாவுக்கும் தயாரிப்பாளர் மதியழகனுக்கும் நிச்சயமாக வெற்றிமுகம் காட்டுவான் என உறுதியாக நம்பலாம்.

Atharvaa compensate Semma Botha Aagatha loss in Minnal Veeran

More Articles
Follows