தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அதுவும் கடந்த ஒரு வாரமாக இந்த வசூல் போட்டி உச்சத்தில் உள்ளது.
அதற்கு காரணம் ரஜினி என்ற மலையுடன் அஜித் மோதியது தான்.
பேட்ட பட வசூல் ரூ. 100 கோடியை விட கூடுதலாக ரூ 25 கோடியை சேர்த்து ரூ. 125 கோடியை விஸ்வாசம் வசூலித்துள்ளதாக அப்படத்தை வெளிட்ட கேஜேஆர் நிறுவனம் செய்தியை வெளியிட்டது.
இதுகுறித்து விஸ்வாசம் பட டைரக்டர் சிவா அளித்துள்ள அண்மையில் பேட்டியில் கூறியதாவது…
நான் ஒரு டெக்னீசியன். எனவே ஒரு கதையை படமாக்க கடினமாக உழைப்பேன். படம் ரிலீஸாகிவிட்டால அடுத்த கதையில் கவனம் செலுத்துவேன்.
வியாபாரத்திற்குள் போய் விட்டால் என்னுடைய கிரியேட்டிவிட்டி போய் விடும்.
அதேபோல் ரசிகர்கள் வியாபாரத்திற்குள் சென்றால் அவர்களின் ரசனையும் போய் விடும்.
வியாபாரத்தைப்பற்றி தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும்தான் யோசிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Director Siva talks about Viswasam box office collection
