தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஓரிரு தினங்களுக்கு முன், படத்தின் பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியானது.
நாளை ஜூன் 23ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடலான ‘ரெமோ நீ காதலன்’ ஆகிய பாடலை வெளியிடுகின்றனர்.
இதனை அந்நியன் படத்தில் ரெமோ கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் ஷங்கர் வெளியிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் SIIMA விருது வழங்கும் விழாவில் ‘செஞ்சிட்டாளே’ சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.