இயக்குனர் ஷங்கரால் இந்தியாவுக்கு பெருமை.. – ஏஆர். ரஹ்மான்

Director Shankar is pride of Indian Cinema says AR Rahmanகோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என பிஸியாக இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொண்டபோது 2.0 படம் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில்… “2.0 போன்ற ஒரு படத்தை டைரக்டர் ‌ஷங்கரால் மட்டுமே கொடுக்க முடியும்.

தான் விரும்பும் தரத்தை கொடுக்க அவர் மெனக்கெட்டு வருகிறார்

படத்தில் ஒரு முக்கியமான பாடலைப் பார்த்தேன். அதில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை. ஆனால் அதை அற்புதமாக படமாக்கியிருந்தார்.

கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். அந்த காட்சி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. ‌

ஷங்கர் போன்ற திறமைசாலியால் நம் இந்தியாவுக்கே பெருமை” என பதிலளித்தார்.

லைகா தயாரித்து வரும் இப்படத்தல் ரஜினிகாந்த், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Director Shankar is pride of Indian Cinema says AR Rahman

Overall Rating : Not available

Latest Post