தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரித்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர்.
1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.
ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன.
எனவே, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பாராட்டி வருகின்றனர்.
25 வருடங்கள் ஆனாலும் இந்த பயணத்தில் 12 படங்களை மட்டுமே ஷங்கர் இதுவரை இயக்கியுள்ளார்.
ஷங்கரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த மாதேஷ், பாலாஜி சக்திவேல், ஹோசிமின், வசந்தபாலன், அறிவழகன், அட்லி உள்ளிட்ட பலரும் ஷங்கரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ஷங்கருக்கு நினைவுப் பரிசையும் கொடுத்து கௌரவித்தனர்.
அந்த சந்திப்பு குறித்து ஷங்கர் ,“என்னுடைய உதவியாளர்களின் அளவுக்கதிகமான அன்பினால் நனைந்தேன். நீங்கள் இல்லாமல் என்னுடைய இந்தப் பயணம் நடந்திருக்காது,” என்று கூறினார்.
ஷங்கர் இயக்கியுள்ள ரஜினியின் 2.0 அடுத்து வெளியாக உள்ளது. விரைவில் கமல்ஹசான் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை தொடங்கவுள்ளார்.
Director Shankar completed 25 years in his Cinema carrier