சசிகுமார் – ஹரிப்ரியா ஜோடிக்கு சாத்தானாக மாறிய விக்ராந்த்

சசிகுமார் – ஹரிப்ரியா ஜோடிக்கு சாத்தானாக மாறிய விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் அடுத்ததாக சசிகுமார் மற்றும் ஹரிப்ரியா நடிக்கும் படம் “காமன் மேன்”.

ஒவ்வொரு கதைக்கும் ஒரு வில்லன் உண்டு. ஆனால் இந்தபடித்தில் ஒரு சாத்தன் போன்ற குணம் படைத்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த்.

இன்று படத்திலிருந்து விக்ராந்தின் சிறு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது .அவரது தோற்றம் ஒரு சாதாரணமாக இருந்தாலும், அவரது அனைத்து முயற்சிகளும் சாத்தானை (நரகத்தின் ராஜா) நினைவூட்டும்.

இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

Director Sathyasiva’s next is “Common Man” Starring SASIKUMAR and Haripriya in the lead.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் ‘V1’ ஹீரோ ராம் அருண்

சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தில் ‘V1’ ஹீரோ ராம் அருண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ம் ஆண்டு வெளியாகி பல எண்ணற்ற ரசிகர்களின் பாராட்டுக்களை வென்ற படம் “வி1”. இப்படத்தின் நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருந்தார்.

புதுமுகமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார் ராம் அருண் காஸ்ட்ரோ.

தற்போது இவர் கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

ஐடா பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தங்க மீனா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜேஷ் பாலசந்திரன் இயக்குகிறார்.

இவர் இந்தியன் 2, பூமிகா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனிடம் பணியாற்றிய நித்யானந்தம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

பரியேறும் பெருமாள், ராக்கி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராமு தங்கராஜ் இப்படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

கஸ்ட்யும் டிசைனர் – ஒஷின் அனில், மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

மற்ற நடிகர்கள் – தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

V1 hero Ram Arun’s next film is psycological thriller based

கொடி-பட்டாஸ் படங்களுக்கு பிறகு மீண்டும் டபுள் ரோலில் தனுஷ்

கொடி-பட்டாஸ் படங்களுக்கு பிறகு மீண்டும் டபுள் ரோலில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’.

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக இந்துஜா நடிக்க ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்ய புவனா சுந்தர் எடிட்டிங் பணிகளை செய்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில் இன்று நானே வருவேன் பட போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் தனுஷின் டபுள் ரோல் கேரக்டர்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கு முன்பு கொடி மற்றும் பட்டாஸ் படங்களில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush dual role in selva raghavan’s Naane Varuven

‘மகான்’ மகா ஹிட்டு..; தமிழகமெங்கும் மாஸ் காட்டும் விக்ரம் ரசிகர்கள்

‘மகான்’ மகா ஹிட்டு..; தமிழகமெங்கும் மாஸ் காட்டும் விக்ரம் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியானது.

துருவ் சிம்ரன் பாபி சிம்ஹா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சீயான் விக்ரமின் 60 வது படமான “மகான்” படத்தை கொண்டாடும் வகையிலும், சீயான் விக்ரம் கடும் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரின் ரசிகர்கள் 60 பேர் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் பல குழுக்களாகப் புறப்பட்டு, தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று, தாங்கள் மிகவும் நேசிக்கும் நடிகரின் 60வது திரைப்படத்தின் புகழை பரப்பி வருகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மற்றும் மதுரை முழுவதுமான பகுதிகளில் பைக் ஓட்டி, சியான் விக்ரமின் அன்பையும் பாசிட்டிவ் எண்ணத்தையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள்.

இந்திய திரையுலகில் எவருடனும் ஒப்பிடமுடியாத, கதாப்பாத்திரத்திற்குள் புகுந்துகொள்ளும் சீயான் விக்ரமின் திறமையான நடிப்பாற்றலை பாராட்டுவதற்காக ரசிகர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

“மகான்” திரைப்படம் தற்போது பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளிலும், கன்னடத்தில் மகா புருஷா என்ற பெயரிலும் பிரத்தியேகமாக உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

On the occasion of Chiyaan Vikram’s 60th Blockbuster release, fans of the ‘Mahaan’ actor, set out on a motorcycle-journey to spread joy

சத்யா-டைட்டானிக் படங்களை காப்பியடித்த விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா

சத்யா-டைட்டானிக் படங்களை காப்பியடித்த விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் தோல்விக்கு பிறகு விக்னேஷ் சிவன் படங்களை இயக்காமல் காத்திருந்தார்.

அதன்பின்னர் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பிஸியாக மாறினார்.

தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி அவரது காதலி நயன்தாராவுடன் இணைந்து படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா சமந்தா இருவரும் நடித்துள்ளனர். முக்கோண காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் கா வா ரெ கா படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது போஸ்டர்கள் மற்றும் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த போஸ்டரில்… ‘சத்யா’ படத்தில் கமல் அமலா இருவரும் பேருந்தில் தொங்கியபடி வலையோசை பாடலில் நடித்திருப்பார்கள். அதுபோல டிசைன் செய்துள்ளனர். கமல் அமலா பயன்படுத்திய உடை கலர்களையே விக்னேஷ்சிவன் பயன்படுத்தியுள்ளார்.

மேலும் உலக புகழ்பெற்ற டைட்டானிக் பட காட்சியையும் காப்பியடித்துள்ளனர். கடலில் நிற்கும் பெரிய கப்பல் முனையில் ஜாக் – ரோஸ் இடத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா சமந்தா ஆகியோர் உள்ளனர்.

போஸ்டர் மட்டும்தான் காப்பியா.? இல்லை படமும் காப்பியா? என்பதை அறிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ரிலீஸ் வரை காத்திருப்போம்.

Vijay Sethupathi new film story is copy cat ?

‘ஜேம்ஸ்’ டீசர் வைரல்..; மறைந்த புனித் படத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் திரையுலகம்

‘ஜேம்ஸ்’ டீசர் வைரல்..; மறைந்த புனித் படத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் பவர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார்.

45 வயதான இவர் கடந்த 2021 அக்டோபரில் மாரடைப்பால் காலமானார்.

இவரது மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சியாக்கியது.

இவர் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ பட டீசரை இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் புனீத் உடன் பிரியா ஆனந்த், சரத்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சேதன் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சரண்ராஜ் இசையமைத்துள்ளார்

இப்படம் மார்ச் 17ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

புனீத் ராஜ்குமாருக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அந்த படம் ரிலீசாகும் நாளில் மற்ற கன்னட படங்களை வெளியிடப்போவதில்லை என கன்னட திரையுலகத்தினர் முடிவெடுத்துள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

Puneeth Rajkumar’s James film teaser goes viral

More Articles
Follows