சமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ வேலன் எட்டுத்திக்கும்“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வேலன் எட்டு திக்கும் என்ன மாதிரியான படம்..

இன்று ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ் நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பது கதை.

இதில் ஆக்‌ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகள் ரசிகனை பரவசப் படுத்தும் .

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்

பாடல்கள் – கானாபாலா, கவிதா தண்டபாணி

எடிட்டிங் – எஸ்.என்.பாசில்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் பி.சமுத்திரக்கனி

தமிழ்நாடே எரியுது; டைரக்டர் ஷங்கர் செய்த காரியத்தை பார்த்தீர்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கலவரத்தால் தமிழ்நாடே கொந்தளிப்பில் உள்ளது.

போலீசுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் அப்பாவி மக்கள் 10 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

ரஜினி, கமல் முதல் பல்வேறு தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தன் படங்களில் மிகப்பெரிய சோஷியல் மெசேஜ் சொல்லும் டைரக்டர் ஷங்கர் அவர்கள் இன்று நடைபெற்ற ஐபிஎல் மேட்ச் & சிஎஸ்கே அணி பற்றி புகழ்ந்துள்ளார்.

இதற்கு பெரும்பாலோனோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

ஊருக்கு மட்டும் சினிமாவில் உபதேசம் பண்ற லட்சணம் இதுதானா என கேட்டு வருகின்றனர்.

பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்ததால் சில மணி நேரங்களுக்கு பிறகு ஷங்கர் அந்த பதிவை நீக்கி விட்டார்.

அதன்பின்னர் கலவரத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் தல-தளபதியின் ராசி ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் நடிப்பில் காலா மற்றும் 2.0 படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க, ரஜினியுடன் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார்? என்று பல யூகங்கள் தோன்றின. அதாவது அஞ்சலி, திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நாயகிகளின் பெயர்கள் அடிபட்டன.

ஆனால் காலா பட இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது லிங்கா படத்தில் ‘என் மகள் வயது பெண்ணுடன் நான் டூயட் ஆடியிருக்க கூடாது’ என ரஜினிகாந்த் பேசினார்.

எனவே இனி அதுபோன்ற சின்ன வயது பெண்களுடன் ரஜினி நடிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியுடன் சிம்ரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலிலி நடித்திருக்க வேண்டியவர் சிம்ரன்தான்.

அப்போது சிம்ரன் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோனது.

தற்போது சிம்ரன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிம்ரன் புகழின் உச்சத்தில் இருந்த போது, விஜய் மற்றும் அஜித் படங்களுக்கு ராசியான நாயகியாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simran likely to teams up with Rajini for Karthik Subbaraj movie

மனோஜ் பீதா இயக்கத்தில் ஜோக்கர் நாயகன் நடிக்கும் வஞ்சகர் உலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் `வஞ்சகர் உலகம்’.

காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார்.

கேங்ஸ்டர் அம்சங்களுடன் காதல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் கதையாசிரியராக பணியாற்றி இருக்கிறார்.

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

படத்தில் இருந்து `கண்ணனின் லீலை’ என்ற முதல் சிங்கிள் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் மஞ்சுளா பீதாவே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kannanin leelai single from Vanjagar Ulagam goes viral

சுவாதி கொலை வழக்கு படத்தலைப்பை மாற்றியதற்கு விஷால் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

ரமேஷ் செல்வன் இயக்கும் இந்த படத்தில் சுவாதி கதாபாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார்.

‘சுவாதி கொலை வழக்கு’ என முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் பெயரை நுங்கம்பாக்கம் என படக்குழுவினர் மாற்றினர். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஷால் பேசும் போது, இந்த படத்தின் முந்தைய டைட்டிலான சுவாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன்..

புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப்பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம் என்றார்

படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் பேசும் போது…

ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்துவிட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகிவிட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகல.. அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன்.

எனக்கு வேற வேலை தெரியாது, சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும்” என்றார்

அரசியலில் சம்பாதிக்கவே வருகிறார்கள்; சேவைக்கு வரவில்லை.. : எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம், திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

இப்படத்திற்கு நுங்கம்பாக்கம் என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு இதற்கு முன்பு ‘சுவாதி கொலை வழக்கு’ என பெயரிட்டு இருந்தனர். பல பிரச்சினைகள் வரவே தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரமேஷ் செல்வன் இயக்கும் இந்த படத்தில் சுவாதி கதாபாத்திரத்தில் ஆயிரா நடித்துள்ளார். நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் நடிக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது,

ஆரம்பகாலத்தில் என்னுடைய எல்லா படங்களுமே பல பிரச்சனைகளை தாண்டியே ரிலீசானது. எனினும் நான் தலைப்பை மாற்றவில்லை, மாற்றக்கூடாது என்று உறுதியாக இருந்தேன்.

ரிலீஸ் தேதியை வைத்துக் கொண்டு அவர்களுக்கு பயந்து போய் நாம் மாற்றுகிறோம். ஏதாவது ஒரு அமைப்பு இதை படமாக எடுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். நாட்டில் நடப்பதை தான் நாங்கள் பேசுகிறோம்.

காமராஜர் காலத்தில் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்தார்கள். அத்தனை அரசியல்வாதிகளும் சம்பாதிக்கவே இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.

இதை சினிமாவில் காட்டுவது தப்பா. படத்தில் இதை காட்டினால் என்ன செய்வார்கள். என்ன தான் போய்விடும், கடைசியில் உயிர்தான் போகும், உயிர் போனால் 4 பேரால் பேசப்படும்.

அந்த கொலை வழக்கு தான் இந்த படம் என்பதை, எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பீர்கள். எதையும் தைரியமாக செய்யுங்கள்.” என்றார்.

Nowadays Politics became business says SA Chandrasekar

More Articles
Follows