விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் காரணம்..: எஸ்ஏசி ஓபன் டாக்

Director SAC talks about Vijayakanths huge contribution to Vijays successவிஜயகாந்த் திரையுலகத்திற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

எனவே அவருக்கு தேமுதிக சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ் உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்துக கொண்டு வாழ்த்தினர்.

அப்போது விழாவில் பேசிய எஸ்ஏ. சந்திரசேகர் பழைய நினைவுகளைப் பற்றி மீண்டும் பேசினார்.

“என் மகன் விஜய் நடிகனாக ஆசைப்பட்டதும், நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை.

விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் அவரால் நல்ல நடிகராக முடியும் என்று நினைத்தேன்.

விஜய்யைப் பற்றி விஜயகாந்திடம் சொன்னதும், எப்போது ஆரம்பிக்கிறோம் என்று உடனே சம்மதம் சொன்னார். அவருடைய சம்பளம் பற்றி கேட்டதும், முதலில் ஷுட்டிங்கை ஆரம்பியுங்கள், விஜய் நல்ல நடிகராக வரட்டும் பின்னர் பேசுவோம் என்றார்.

செந்தூரபாண்டி படம் எடுத்து முடித்தோம், பெரிய வெற்றியைப் பெற்றது. விஜய்யின் வெற்றிக்கு விஜயகாந்த் அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகள் மிகப் பெரிய இடத்தில் உள்ளன,” என்று பேசினார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ 1981 படம்தான் விஜயகாந்தை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Director SAC talks about Vijayakanths huge contribution to Vijays success

Overall Rating : Not available

Related News

Latest Post