நடிகை ரோஜா MLA எப்படி இருக்கிறார்.? ஆர்.கே.செல்வமணி ஆடியோவில் தகவல்

நடிகை ரோஜா MLA எப்படி இருக்கிறார்.? ஆர்.கே.செல்வமணி ஆடியோவில் தகவல்

RK Selvamani and Roja (2)பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ பட மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரோஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து முன்னணி நடிகையானார்.

தமிழில் கமலை தவிர (ரஜினி, அஜித், விஜய், சத்யராஜ், பிரபு, கார்த்திக்) பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்தும் விட்டார்.

இயக்குனர் செல்வமணியை ரோஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள்.

சினிமாவுக்கு பிறகு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஆந்திரா மாநிலம் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார்.

இந்த நிலையில் ரோஜாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அவரது உடல் நிலை குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றில்.. “இப்போது ரோஜா நன்றாக இருக்கிறார். அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம். தற்போது குணமடைந்து வருகிறார்.”

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Director RK Selva Mani about Actress Roja health

கவின் சிவாங்கி தேஜூ அஸ்வினி இணைந்துள்ள Asku Maaro

கவின் சிவாங்கி தேஜூ அஸ்வினி இணைந்துள்ள Asku Maaro

Asku Maaro (2)விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கவின்.

இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நட்புன்னா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது லிஃப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின்.

இதனிடையில் சோனி மியூசிக் வெளியீட்டில் கவின், தேஜூ அஸ்வினி, சிவாங்கி நடித்துள்ள Asku Maaro எனும் பாடல் வெளியாக உள்ளது.

தரண் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை கு.கார்த்திக் எழுதியுள்ளார்.

சிவாங்கி, தரண்குமார் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை Dongil Jumbo இயக்கியுள்ளார்.

இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனப்பயிற்சி கொடுத்துள்ளார்.

இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் சிவாங்கி கொடுக்கும் ஒரு ஷாக் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Peppy song Asku Maaro promo has been released

அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய 2 பிரபல நிறுவனங்கள்

அஜித்தின் ‘வலிமை’ பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய 2 பிரபல நிறுவனங்கள்

Valimai (1)‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ‘வலிமை’ படத்திலும் அதே கூட்டணியே தொடர்கிறது.

அதாவது நடிகர் அஜித் + டைரக்டர் வினோத் + தயாரிப்பாளர் போனிகபூர் என இந்த கூட்டணி தொடர்கிறது.

வலிமை படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘வலிமை’ பட பர்ஸ்ட் லுக் வரும் மே 1ல் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது.

யுவன் இசையமைத்து வரும் ‘வலிமை’ படம் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.

‘வலிமை’ அப்டேட் என்ன என்ன? என எவரைப் பார்த்தாலும் கேட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இதனை தொடர்ந்து மே 1-ஆம் தேதி முதல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வலிமை பட தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமத்தை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளதாக போனி கபூரே தெரிவித்துள்ளார்.

Valimai TN theatrical rights has been sold

பிரதமர் மோடி வருகை : புதுச்சேரியில் 144 உத்தரவு.; கூட்டமே வரக்கூடாதுன்னு உட்கார்ந்து யோசீப்பாங்களோ.!

பிரதமர் மோடி வருகை : புதுச்சேரியில் 144 உத்தரவு.; கூட்டமே வரக்கூடாதுன்னு உட்கார்ந்து யோசீப்பாங்களோ.!

தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

எனவே தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை (30/03/2021) மாலை 04.30 மணியளவில் புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த கூட்டத்துக்காக புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழா இடத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி நகரில் நாளை ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை.

இந்த 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆட்சியர்.

இதனையடுத்து பிற்பகல் தாராபுரத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் அங்கும் தன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரிக்கு மோடி வரும்போது 144 தடை என்றால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்.? கூட்டம் வேண்டாம் என நினைக்கிறார்களா? என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

PM Modi address election rally in Puducherry 144 imposed

‘தளபதி 65’ பட சாங் சூட்டிங் அப்டேட் கொடுத்த மாஸ்டர்

‘தளபதி 65’ பட சாங் சூட்டிங் அப்டேட் கொடுத்த மாஸ்டர்

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கியவர் நெல்சன்.

இந்த படங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார் நெல்சன்.

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறவுள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ள நிலையில் இயக்குனர் நெல்சன், படப்பிடிப்புக்காக லொகேஷன் தேட ரஷ்யா நாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இப்பட டான்ஸ் மாஸ்டர் ஜானி என்பவர் தன் சமூக வலைதள பக்கத்தில் அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.

அதில்…

All excited to join #Thalapathy65 team

ThanQ #Thalapathy @actorvijay Sir @Nelsondilpkumar Sir for believing in me .

will surely make the opportunity totally worth it

Rehearsals for a Super crazy song begins on 24th April & shoot to commence from May 3rd-9th
@sunpictures https://t.co/tPBv9H79zI

என ஜானி பதிவிட்டுள்ளார்.

Choreographer Jani gets on board for Thalapathy 65

தல அடுத்த படத்திலும் ‘வலிமை’ கூட்டணி..; நொந்து கொள்வதா? கடந்து செல்வதா? அஜித் ரசிகர்கள் அப்செட்

தல அடுத்த படத்திலும் ‘வலிமை’ கூட்டணி..; நொந்து கொள்வதா? கடந்து செல்வதா? அஜித் ரசிகர்கள் அப்செட்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து ‘வலிமை’ படத்திலும் அதே கூட்டணியே தொடர்கிறது.

அதாவது நடிகர் அஜித் + டைரக்டர் வினோத் + தயாரிப்பாளர் போனிகபூர் என இந்த கூட்டணி தொடர்கிறது.

வலிமை படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘வலிமை’ பட First லுக் வரும் மே 1ல் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவுள்ளது.

“ச்சும்மா செய்றோம்.”. என வலிமை இசை குறித்து யுவன் கூறியிருந்தார்.

வலிமை படம் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து தல 61 படத்தையும் எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க வாய்ப்புள்ளதாம்.

இதற்கு முன் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை தொடர்ந்து சிவா இயக்கி வந்தார்.

அப்போதே வேறு இயக்குனர்களே கிடைக்கவில்லையா? தல… ஒரே இயக்குனர் என்றால் போராடிக்காதா? என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பினர்.

தற்போது தொடர்ந்து அஜித்தின் 3 படங்களையும் வினோத் இயக்க வாய்ப்பிருப்பதால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? என தெரியாமல் தவிக்கின்றனர்.

ஆனால் இந்த கூட்டணி உறுதியாகுமா? எனத் தெரியவில்லை.

Valimai team to reunite for Thala 61 ?

ajith boney kapoor (2)

More Articles
Follows