நான் நாத்திகவாதி என்பதால் அப்படிதான் செயல்படுவேன்..: காலா டைரக்டர் ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு பின்னர் பரபரப்புடன் வெளிவரும் ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

படத்தில் ரஜினியின் வழக்கமான ஆக்‌ஷன் ஃபார்முலாவைத் தாண்டி கபாலியைப் போல் ரஞ்சித் என்ற இயக்குநரே அதிகம்
காணப்படுகிறார் என்ற கருத்து எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பா.இரஞ்சித் இன்று சென்னையில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது…

நாம் வடிவமைக்கும் கேரக்டரில் நடிகர் நடிக்கிறபோது அவர் மூலமாகத்தானே கருத்தை பேச முடியும். பிறகு அதை எப்படிச் செய்ய முடியும்.

பொதுவாக தென்னிந்தியாவில் ராவணன் அரக்கன் என்ற நம்பிக்கையே உள்ளது.

நான் நாத்திகவாதி, எனவே என்னுடைய மனநிலை அடிப்படையில் நான் செயல்படுவேன்.” என கூறினார்.

ரஜினியின் அடுத்த பட ஷுட்டிங்கை தொடங்கினார் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ள படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க, திரு என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.

முக்கிய ரோலில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர்.

சனந்த் ரெட்டி ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சிம்ரன் /அஞ்சலி ஆகியோரும்
நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 4-ம் தேதி டேராடூனில் தொடங்கியது. இதற்காக 200 பேர் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த ஷூட்டிங்கில், இன்று முதல் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

அது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது.

அப்போதும் கூட அவர் சென்னையில் இல்லாமல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பிளாஸ்டிக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு ஆரி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார்.

குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் மற்றும் பல கல்லூரிகலில் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்.

எனவே தனது ஆசையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி.

மேலும் இதற்கு தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Actor Aari express his thanks to TN Govt for Plastic ban

கடத்தப்பட்ட பெண்களை மீட்க *சென்னை டூ பாங்காக்* செல்லும் ஜெய் ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெய் ஆகாஷின் ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம் ‘சென்னை டூ பாங்காக்’.

இதில் கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக சோனி சரிஸ்டா, யாழினி நடிக்கிறார்கள்.

யோகிபாபு, சாம்ஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், இந்து, திலகவதி, கிருஷ்ணவேணி ஆகியோருடன் வில்லன் வேடத்தில் பொன்னம்பலம் மற்றும் தினேஷ் மேட்னே ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதைச்சுருக்கம் :

இந்தியாவில் இருந்து பாங்காங்கிற்கு கடத்தப்படும் பெண்களை இளைஞன் ஒருவன் அந்த பெண்களை மீட்டுவர தனி ஆளாக கிளம்புகிறான்.

அங்கே சென்றதும் தான் அந்த பெண்கள் அனைவருக்கும் தீவிரவாத பயிற்சி அளித்து மீண்டும் இந்தியாவுக்கே நாசகார வேலைகளை செய்ய தயார்படுத்துகிறார்கள் என்கிற அதிர்சசியான விபரம் தெரிய வருகிறது.

அந்த கூட்டத்தின் சதியை முறியடித்து அந்த பெண்களை இந்தியாவிற்கு அந்த இளைஞன் எப்படி மீட்டு வருகிறான் என்பது தான் படத்தின் கதை.

இதை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் விதமாக ஜனரஞ்சகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.விறு விறுப்பனா சண்டை காட்சிகளும் இடம்பெறுகிறது .

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள், ஸ்ரீலங்கா தாயலாந்து போன்ற இடங்களில் நடைபெறுகிறது. U.K.முரளியின் இசையில்,தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய,, இயக்குனர் சதீஷ் மற்றும் சந்தோஷ் இருவர் இயக்குகிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து – இயக்கம் ; சதீஷ் மற்றும் சந்தோஷ்
இசை ; U K முரளி
ஒளிப்பதிவு ; தேவராஜ் – பாலா

ஜெய் ஆகாஷ் அடுத்து 3 படங்களை தயாரித்து நடிக்கவுள்ளார். அதில் ஒரு படத்திற்கு லுங்கி ராஜா எனத் தலைப்பிட்டுள்ளார்.

Jai Akash next movies Chennai to Bangkok and Lungi Raja updates

மியா பாடல் தொகையை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் இனியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இனியா …தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள பட உலகிலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை. மற்ற நடிகைகளைப் போல் இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தை அதிக அளவில் நேசிக்கக் கூடியவர்.

அதனால் மியா என்ற நடனப் பெண் ஒருவரின் வாழ்க்கைப் பதிவை 8 நிமிட வீடியோ ஆல்பமாக “மியா” என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்.

மியா துடிப்புள்ள ஒரு பெண். பிரபல டான்ஸராகி கொடி கட்டி பறக்க வேண்டும். விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும்.

இது தான் அந்தப் பெண்ணின் வாழ்க்கை லட்சியம். அந்த லட்சியத்தை அடைய போராடுகிறாள் எவ்வளவோ தடைக்கற்கள்.

ஆனால் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால் முயற்சியை கை விடக் கூடாது என்று போரடுகிறாள் அந்த முயற்சி எப்படி வெற்றியாகிறது..இது தான் மியாவின் பதிவு..

“வானத்தில் பறக்க சிறகுகள் கிடைக்குமா ” என்று தொடங்கும்
இந்த இசை ஆல்பத்தில் வசனங்களும் இருக்கும்.

வழக்கமான இசை ஆல்பம் மாதிரி இல்லாமல் ஹைடெக் சினிமா நேர்த்தியுடன் உருவாக்கப் பட்டுள்ளது.

அமயா எண்டர்டைமெண்ட்ஸ் பட நிறுவனம் சார்பாக இனியா தயாரித்து மியா என்ற கதாபாத்திரமேற்றிருக்கிறார்.

ஒளிப்பதிவு : அபி ரெஜி. லாவல்
எடிட்டிங் : அருள் தாஸ்
இசை : அஸ்வின் ஜான்சன்
பாடல் : கோவிந்தன் பழனிசாமி
கான்சப்ட் நடனம் : அருண் நந்தகுமார்..
இயக்கம் : S.மகேஷ்

இது பற்றி இனியா கூறும் போது…

இந்த மியா வீடியோ ஆல்பம் எனது முதல் முயற்சி.

இதற்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.

இந்த வீடியோ ஆல்பத்தை பார்த்து பாராட்டிய திரு நவீன்பிரபாகர் திரு ரியாஸ், திரு கபாலிபாபு மூவரும் பியாண்ட்பிரேம்ஸ் நிறுவனம் மூலம் இந்த வீடியோ ஆல்பத்தை பிரமாதமாக வெளியிடுகிறார்கள்.

இந்த ஆல்பத்தின் மூலம் வசூலாகும் பணத்தில் கேன்சரால் பாதித்த 10 பேருக்கு மருத்துவ உதவி செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

இதை போல இன்னும் நிறைய திட்டமிட்டுள்ளோம்.

இந்த உலகத்தில் உள்ள எல்லா டான்ஸர்களுக்கும் மியா வை காணிக்கையாக்குகிறேன்” என்றார் இனியா.

Actress Iniya decided to help cancer patient from her album song Mia

பேஸ்புக்கில் காலா படத்தை லைவ்வாக ஓட்டிய நபர் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வெளியாகவுள்ளது.

இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்குத்தான் முதல் காட்சிகள் துவங்கவுள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் முதல் நாள் பிரிமீயர் காட்சிகள் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் பேஸ்புக் சமூகவலைதளங்களில் சிலர் காலா படத்தின் 45 நிமிட வீடியோவை சட்டவிரோதமாக வெளியிட்டது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இப்படியான தகாத செயலில் ஈடுப்பட்ட பிரவீன் என்ற இளைஞரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளாதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

Rajinis Kaala streamed 45 mins on FB Live That boy has been arrested by Singapore Police

More Articles
Follows