உயிரே போனாலும் பரவாயில்லை என்றவர் ரஜினிகாந்த்.; அவர் பயப்பட வேற அழுத்தம்.. – பிரவீன் காந்த்

உயிரே போனாலும் பரவாயில்லை என்றவர் ரஜினிகாந்த்.; அவர் பயப்பட வேற அழுத்தம்.. – பிரவீன் காந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Praveen Kanthநாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனால் கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி…

“உயிருக்கு பயந்தவரல்ல ரஜினிகாந்த். அரசியலுக்கு வரவில்லை அவர் கூறியிருப்பதன் பின்னணியில் வேறு சில அழுத்தங்கள் உள்ளன.

உயிரே போனாலும் பரவாயில்லை சொன்ன அவர் அரசியலுக்கு வரப் போவதில்லை என தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே” என தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பிரவீன் காந்தி தீவிர ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Praveen Kanth about Rajinikanth’s political announcement

தலைவா அரசியலுக்கு வா..; ரஜினிகாந்த் வீட்டு முன்பு ரசிகர்கள் தர்ணா..

தலைவா அரசியலுக்கு வா..; ரஜினிகாந்த் வீட்டு முன்பு ரசிகர்கள் தர்ணா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini fansநாளை மறுநாள் டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினிகாந்த் என தமிழகமே எதிர்ப்பார்த்தது.

ஆனால் தன் உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ரசிகர்களும், தமிழக மக்களும் தன்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார்..

ஆனால் அவரது ரசிகர்கள், அவரது வீடு முன் அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“தலைவர் அரசியலுக்கு வர வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Rajini fans protest infront of Rajinikanth house

திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் தாணு

திரையுலக பயணத்தில் 50வது ஆண்டில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணுதமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது.
தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது ஆண்டுதிரைப் பயணத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது திரைத்துறை சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்றால் மிகையில்லை

சினிமாவுக்குள் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பயணிப்பவர்களுக்கு மத்தியில் கடந்த கால் நூற்றாண்டுகளாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெற்றிபெற்றதன் மூலம் தமிழ் சினிமா இவரை சுற்றி சுழல்கிறது என்றே கூறலாம்

நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கதாநாயகர்கள் காத்திருக்கின்றனர் என்கிறார் தயாரிப்பாளர் காட்ரகட் பிரசாத்

தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.
எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள் அந்த வரிசையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக ஜனவரி 1/2 021 அன்று கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார்

இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக
C, கல்யாண்,C.P.விஜயகுமார்,N.M சுரேஷ், ஆனந்தா L.சுரேஷ், T.P.அகர்வால், ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்

செயலாளர்களாக
ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர்

ஜனவரி 1, 2021 முதல் ஒரு வருடத்திற்கு தலைவர் பொறுப்பில் கலைப்புலிதாணுபதவி வகிப்பார்.

KalaiPuli S Thanu selected as Head of All India Movie Association

‘மாஸ்டர்’ பட நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மறைவு..; லோகேஷ் உருக்கமான பதிவு

‘மாஸ்டர்’ பட நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மறைவு..; லோகேஷ் உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arunalexanderசினிமாவில் பல வருடங்களாக டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்தவர் அருண் அலெக்ஸாண்டர்.

பாலிவுட் நடிகர்களுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இவர், மாநகரம்’, ‘கோலமாவு கோகிலா’, ‘பிகில்’, ‘கைதி’, விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று உடற்பயிற்சி செய்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அருண் அலெக்ஸாண்டர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பதிவில்…

“நீங்கள் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுப் போவீர்கள் என நினைக்கவில்லை. என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

உங்களுக்கு மாற்றே கிடையாது. என்றுமே என் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள்”. என உருக்கமாக கூறியுள்ளார் லோகேஷ்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து படங்களிலும் (மாஸ்டர் உட்பட) அருண் அலெக்ஸாண்டர் நடித்திருக்கிறார்.

Actor Arun Alexander who was seen with Vijay in Bigil is no more

ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் ஆகிட்டோம்..; ரஜினி வெறியன் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி

ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் ஆகிட்டோம்..; ரஜினி வெறியன் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth karthik subbaraj“நான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் அறவித்துவிட்டார்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பேட்ட பட இயக்குனரும் ரஜினி வெறியருமான கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்…

அதில், “தலைவா வருத்தப்படாதீர்கள்.உங்களைப் போன்ற ஒரு நல்ல அரசியல் தலைவனுக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லாமல் இருக்கலாம். நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம்.என்றும் எங்களின் அன்பு உங்களுக்காக இருக்கும்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Maybe We didn’t deserve good political leader like you says director Karthik Subbaraj

புத்தாண்டு விருந்தாக ‘ஈஸ்வரன்’ பாடல்கள் வெளியீடு..; சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

புத்தாண்டு விருந்தாக ‘ஈஸ்வரன்’ பாடல்கள் வெளியீடு..; சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eeswaranசிலம்பரசன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன்.

இப்படத்திற்காக சிம்பு கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையை முற்றிலும் குறைத்தார்.

ஸ்லிம் சிம்புவாக மாறினார்.

பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரில் சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தார்.

அது சர்ச்சையாகியது. எனவே விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அண்மையில் ‘ஈஸ்வரன்’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக “ தமிழன் பாட்டு” (Thamizhan Pattu) வெளியானது.

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ பட மற்ற பாடல்கள் அனைத்தையும் புத்தாண்டு விருந்தாக 2021 ஜனவரி 2ஆம் தேதி் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

STR’s Eeswaran Audio From Jan 2nd

More Articles
Follows