டைரக்டர் பிரபு சாலமனின் மகன் நடிக்கும் ‘டேய் தகப்பா’.; டைரக்டர் யார் தெரியுமா.?

டைரக்டர் பிரபு சாலமனின் மகன் நடிக்கும் ‘டேய் தகப்பா’.; டைரக்டர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.

C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு – S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார்.

கலை இயக்கம் – சிவராஜ்
காஸ்டியும் டிசைனர் – தனா
ஒப்பனை – P.ராம்சந்திரன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

Director Prabhu Solomon son to play lead role in Dei Thagappa

இருக்குறதே போதும்.. புதுசு வேண்டாம்..; ஒன்றிய அரசுக்கு நாசர் கண்டனம்

இருக்குறதே போதும்.. புதுசு வேண்டாம்..; ஒன்றிய அரசுக்கு நாசர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுதாய முன்னேற்றத்திற்கு திரைப்படங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.. இருக்கிறது என்பதை வரலாற்று ஏடுகள் நம்மை ஞாபகப்படுத்துகின்றன.

இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டத்தின்போது அக்கால திரைப்படங்கள் அவ்வுணர்வை மக்களிடையே பரவ செய்ததற்க்கான சாட்சிகள் கருப்பு, வெள்ளை படங்களாக இன்றும் காண கிடைக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் சமுதாய சீர்வை கொண்டுவந்ததில் திரைப்படங்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.

இன்றைய சூழலில் ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பி இருக்கிறது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தணிக்கை முறையே போதுமானதாக இருந்தும், இப்புதிய சட்டம் படைப்பாளிகளின் கருத்துக்களை முடக்கும் வண்ணமாய் இருக்கிறது.

அரசுகள் மக்களின் பிரதிநிதி மக்கள் உணர்வுகளை என்றும் அவர்கள் செவி சாய்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் பிரதிநிதியாய் இருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இவ்விஷயம் குறித்து துறை சார்ந்தவர்களின் கவலையை ஆழமாக கேட்டறிந்து அதற்கான முன்னெடுப்பும் எடுத்திருக்கிறார் என்பது எங்களை நிம்மதி அடைய செய்வதாக இருக்கிறது.

அவருக்கு நடிகர் சமூகத்தின் சார்பாக நன்றி சொல்வது நம் கடமை. முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

– நடிகர் எம்.நாசர்
7.7.2021

Actor Nassar voice against cinematograph act 2021

இந்தியாவில் அதிபர் ஆட்சி.? சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி விஜய் அஜித் யாரும் இல்லையே? – அமீர் ஆதங்கம்

இந்தியாவில் அதிபர் ஆட்சி.? சூர்யாவுக்கு ஆதரவாக ரஜினி விஜய் அஜித் யாரும் இல்லையே? – அமீர் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவில் பல திருத்தங்களை கொண்டு வர முடிவெடுத்துள்ளது மத்திய அரசு.

இதற்கு நாடு முழுவதும் திரைத்துறை சார்பில் எதிர்ப்பு கிளம்பியது.

கமல், சூர்யா உள்ளிட்டோரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகர்கள் கார்த்தி ரோகிணி உள்ளிட்டோர் தமிழக முதல்வரை சந்தித்தனர்.

எனவே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இதனிடையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி சார்பில் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருவதாகவும் மோடி அரசின் மக்கள் நல திட்டம் சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

சூர்யாவுக்கு ஆதரவாக கூட சினிமாத்துறையில் யாரும் குரல் கொடுக்கவில்லை என இயக்குநர் அமீர் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக இயக்குனர்கள் இன்று ஆன்லைனில் ஒளிப்பதிவு சட்ட வரைவு குறித்த விவாதம் நடத்தினர்.

அப்போது இயக்குநர் அமீர் பேசும்போது..

“அனைத்து வாரியங்களையும் அரசே ஏற்று நடத்தினால் இது அதிபர் ஆட்சி போல ஆகிவிடும்.

சென்சார் போர்டு மாதிரியானவை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டும்

இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இந்த சட்ட திருத்தம் குறித்து கவலைப்படும் அளவில் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் கவலைப்படவில்லை.

இந்த சட்டத் திருத்தம் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.

சூர்யா கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்த போது கூட சூர்யாவுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அமீர்.

Ameer question Rajini Vijay Ajith Why no one Supports Suriya

டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய கொடி ஏந்தும் இந்தியர்கள் யார்.? பங்கேற்கும் தமிழர்கள் யார்.? முழு தகவல்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தேசிய கொடி ஏந்தும் இந்தியர்கள் யார்.? பங்கேற்கும் தமிழர்கள் யார்.? முழு தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாக உள்ளது. ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஜூலை 23-ம் தேதி இந்திய தேசிய கொடியை குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி செல்வார்கள்.

ஆகஸ்ட் 8-ம் தேதி நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர் தமிழக வீராங்கனைகள். தற்போது 4 தமிழக வீரர்கள், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பு 8, தற்போது 4 என மொத்தம் 12 தமிழக வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லவுள்ளனர்.

இவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்…

1). இளவேனில் வளரிவன் (துப்பாக்கிச் சுடுதல் – 10 மீட்டர் ஏர் ரைப்பிள், பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு)

2) சரத் கமல் (டேபிள் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு)

3) கேசி ஞானபதி (படகுப் போட்டி – ஆண்கள் பிரிவு)

4) நீத்ரா குமணன் (படகுப் போட்டி – ஆண்கள் பிரிவு)

5) ஆரோக்கிய ராஜீவ் (தடகள பிரிவு – 4*400 ரிலே)

6) தனலட்சுமி (தடகளம் – 4*400 ரிலே)

7) நாகநாதன் பாண்டி (தடகளம் – 4*400 ரிலே).

8) சி.எ. பவானி தேவி (வால் சண்டை – பெண்கள் ஒற்றையர் பிரிவு)

9) சத்யன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் பிரிவு மட்டும்)

10). வருண் அசோக் தக்கர் (படகுப் போட்டி – ஆண்கள் பிரிவு)

11). ரேவதி (தடகளம் – 4*400 ரிலே).. இவர் மதுரைச் சேர்ந்தவர். ஷூ (காலணி) கூட இல்லாமல் வெறும் காலில் பயிற்சி செய்து, ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். தற்போது மதுரையில் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Legendary six-time world champion boxer MC Mary Kom and men’s hockey team captain Manpreet Singh will be India’s flag bearers for the opening ceremony of the Tokyo Olympics on July 23.

World Championships silver medallist wrestler Bajrang Punia will be the country’s flag-bearer for the closing ceremony on August 8. – Indian Olympic Association (IOA) announced.

Who will be the country’s flag-bearer in tokyo olympic ?

90வது பிறந்தநாளை கொண்டாடிய ‘நகைச்சுவை செம்மல்’ சித்ராலயா கோபு

90வது பிறந்தநாளை கொண்டாடிய ‘நகைச்சுவை செம்மல்’ சித்ராலயா கோபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்.

கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி காதலி, தொடங்கி பாட்டி சொல்லை தட்டாதே வரையில் நிறைய நகைச்சுவை படங்களை அளித்திருக்கும் இவர், இயக்கிய முதல் படம், ஏவிஎம்மின் காசேதான் கடவுளடா.

இவர் 1992ல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் கலைமாமணி விருதை பெற்றவர்.

உலக நாயகன் கமல் ஹாசனும், கிரேசி மோகனும் சேர்ந்து இவருக்கு நகைச்சுவை செம்மல் பட்டத்தை வழங்கினர்.

யூனிட்டி கிளப்பின் மூலம், பல வெற்றி நாடகங்களை எழுதிய இவர், வாஷிங்டனில் திருமணம் தொடரை அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தி இயக்கினார்.

இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக உலக நாயகன் கமல்ஹாசன், சிவகுமார், வெண்ணிறாடை மூர்த்தி, சித்ரா லக்‌ஷ்மணன் தயாரிப்பாளர் AVM சரவணன் உள்ளிட்ட பலர் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

திரு சித்ராலயா கோபு தற்பொழுது, தனது குடும்பத்துடன் திருவான்மியூரில் வசிக்கிறார்.

Celebrities Birthday Wishes to Chitralaya Gopu

தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் அசுரன்

தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் அசுரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran dhanushநடிகர்களில் ரஜினிகாந்த் கமல்ஹாசனுக்கு பல காலமாகவே தெலுங்கில் நல்ல மார்கெட் உள்ளது.

இவர்களது தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வசூல் வேட்டையாடி வருகின்றது.

அண்மைக்காலமாக சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் உள்ளிட்டவர்களும் தெலுங்கில் (தமிழ் பட டப்பிங்) கலக்கி வருகின்றனர்.

இயக்குநர்கள் ஷங்கர் & ஏஆர் முருகதாஸ் உள்ளிட்ட தமிழ் சினிமா இயக்குனர்களும் தெலுங்கில் படங்களை இயக்க கவனம் காட்டுகின்றனர்.

விஜய்சேதுபதி நேரடி தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தனுஷும் தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ளார் என்பதை பார்த்தோம்.

அமெரிக்காவில் ‘தி கிரே மேன்’ படத்தை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் முகாமிட்டு கார்த்திக் நரேன் (D43) இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் சேகர் கம்முலா இயக்கும் படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் தனுஷ்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த படம் பான் – இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது.

இந்த படத்துக்காக தனுஷுக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில், மீண்டுமொரு தெலுங்கு படத்திலும் தனுஷ் நடிப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நாக வம்சி தயாரிக்கிறாராம்.

இந்த படத்தை தெலுங்கில் மிஸ்டர் மஜ்னு, ரங்தே போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார் என கூறப்படுகிறது.

Dhanush to act one more telugu film

More Articles
Follows