கபாலி காலர் ட்யூன்.. ரஞ்சித்தாசன் பெயர்..; என்ன சொல்கிறார் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குனர்.?

கபாலி காலர் ட்யூன்.. ரஞ்சித்தாசன் பெயர்..; என்ன சொல்கிறார் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பட இயக்குனர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படமும் இதே கதைகருவில் தான் உருவாகியுள்ளது.

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள “ என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படம், அக்டோபர் 29, Sonyliv தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

இந்த நிகழ்வில் பேசிய நாயகன் கார்த்திக் கூறியதாவது…

என்னுடைய முதல் படம் பீச்சாங்கை இந்தப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் நீங்கள் பெரிய ஆதரவு தந்துள்ளீர்கள் அதற்காக அனைவருக்கும் நன்றி
இயக்குநர் பிரபு ஜெயராம் கூறியதாவது….

கமர்ஷியலாக கதை சொல்ல நினைக்கும் இயக்குநரான ஒருவன், சீரியஸாக ஒரு கதை சொல்ல முயற்சிப்பதாக தான் இந்த திரைக்கதையை அமைத்தேன்.

இது 90 கிட்ஸ்களுக்கான படமாகத்தான் எடுத்திருக்கிறோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை, இடஒதுக்கீட்டில் தேவை உள்ளோர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று இதை சொல்லியிருக்கிறோம்.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாப்பாத்திரங்களின் பின்னணியை தான் சொல்லியிருக்கிறேன்.

(இந்த படத்தில் ரஞ்சித்தாசன் கேரக்டர் ஏன்..? கோட் சூட் போடுவேன்டா.. நான் முன்னுக்கு வருவேன்டா..? என்ற ரஜினி டயலாக் கபாலி காலர் ட்யூன் ஏன்? என FILMISTREET RAJESH கேள்வி கேட்கையில்…)

ரஞ்சித் தாசன் கதாப்பாத்திரம் என்பது, ஒரு அடிப்படை சமூகத்தில் இருந்து வந்து, கோபத்துடன் அவரது நியாயத்தை சொல்லும் பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, ரஞ்சித் சார் பெயர் வைக்கலாம் என தோன்றியது.

அதைத்தவிர, மத்தபடி ரஞ்சித் சாருக்கும் இந்தப்படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தப் படத்திற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் தயாரித்துள்ள “என்னங்க சார் உங்க சட்டம்” திரைப்படத்தை பிரபு ஜெயராம் இயக்குகிறார். RS கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

Director Prabhu Jeyaram talks about his movie Yennanga Sir Unga Sattam

படத்தின் தொழில்நுட்ப குழு விபரம்
குணா பாலசுப்ரமணியம்- இசை
அருண் கிருஷ்ணா – ஒளிப்பதிவு
பிரகாஷ் கருணாநிதி- படதொகுப்பு
Teejay – கலை இயக்கம்
கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா ராஜு – பாடல் வரிகள்
தேஜா- மேக்கப்
கிருஷ்ணன் சுப்ரமணியம்- ஒலிப்பதிவு
பென்னி தயால், வினீத் ஶ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன்- பாடகர்கள்
அருண் உமா- டப்பிங் இன்ஞ்னியர்
ராம் பிரசாத் – ஸ்டில்ஸ்
ஶ்ரீராம் -DI

டிசம்பரில் டும் டும் டும்.: வாழ்க்கையிலும் இணையும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் காதல்

டிசம்பரில் டும் டும் டும்.: வாழ்க்கையிலும் இணையும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்.

இவர்கள் இருவருமே கலையுலக நட்சத்திர வாரிசுகள் தான்.

நடிகர் ரிஷி கபூரின் மகன் நடிகர் ரன்பீர் கபூர்.

இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் நடிகை ஆலியா பட்.

இருவரும் தற்போது ‘பிரம்மாஸ்த்ரா’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே இருவரும் நெருக்கமாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களது திருமணம் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒப்புக் கொண்டுள்ள படங்களை கூட அதாவது திருமணத்திற்கு பிறகு நடித்துக் கொடுப்பதாக தெரிவித்துவிட்டார்களாம்.

Ranbir Kapoor, Alia Bhat wedding in December?

சச்சின் & தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.; புதுவித காதலைச் சொல்லும் ‘ஊர்வசி’

சச்சின் & தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.; புதுவித காதலைச் சொல்லும் ‘ஊர்வசி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் எத்தனையோ காதல் கதைகள் வந்துள்ளன.

காலம் , கலாச்சார மாற்ற ஏற்ப மனிதரிடையே எழும் காதலும் அதன் போக்கும் மாறியுள்ளது.

காதலனைவிட காதலிக்கு வயது அதிகமாக இருந்தால் ஒரு காலத்தில் வியப்பூட்டியது. இது இப்போது சகஜமாகி வருகிறது.

கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் தனுஷ் தொடங்கி கணவனை விட வயதில் மூத்த பெண் மனைவியாகி இணைவது அதிகரித்து வருகிறது.

26 வயது வாலிபனுக்கும் 36 வயது விவாகரத்தான மென்பொருள் துறைப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் உண்மையான காதலைச் சொல்வது தான் ‘ஊர்வசி’ வெப் சீரிஸ் .

வயது வித்தியாசம் இருப்பதால் வேறுகாரணங்களால் ஏற்பட்ட காதல் அல்ல இது.

நியாயமாகவும் நேர்மையாகவும் ஒருவரை ஒருவர் மதித்து ஒருவருக்கொருவர் நேசம் காட்டும் காதலாக இது சொல்லப்படுகிறது.

சென்னையில் ஒரே அறையில் தங்கி இருக்கும் நான்கு நண்பர்களில் ஒருவர் தான் கதாநாயகன்.

வாடகை டாக்சி ஓட்டும் ஒருவனுக்கும் அடிக்கடி அந்த டாக்சியில் பயணியாக வரும் ஒருத்திக்கும் இடையே பரஸ்பரம் புரிதலும் அன்பும் காதலும் ஏற்படும் சூழல் வருகிறது.

இருவருக்குள்ளும் பூசல்கள் முரண்பாடுகள், ஏன் சண்டைகள் வரை செல்கிறது. பிரிவும் நேர்கிறது. அதன்பிறகு ஒருவரை ஒருவர் எப்படிப் புரிந்து இணைகிறார்கள் என்ப
தைப்பற்றி சொல்லும் கதை இது.

இந்த இணையத் தொடரை இயக்குபவர் எஸ் .கே.எஸ். கார்த்திக் கண்ணன். இவர் ஏற்கெனவே ‘திடல் ‘ படத்தை இயக்கியவர்.

ஏராளமான குறும்படங்கள் இயக்கியிருக்கிறார்.இவரது
‘ நிறம்’ என்ற குறும்படம் கோவா திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது பெற்றது.

ஊர்வசி இணைய தொடரில் நாயகியாக டைட்டில் ரோல் ஏற்று ரேகா நாயர் நடிக்கிறார். நாயகனாக அஸ்வின் ஜெயப்ரகாஷ் நடிக்கிறார்.

அஸ்வினின் நண்பர்களாக கவுதம், வினோத், சைனா ஆகியோர் நடிக்கிறார்கள் .கதையில் முக்கியத்துவம் கொண்ட பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள் நேத்ரா, ஜெஸிகா நடிக்கிறார்கள்.

கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. கேரளாவில் பரவலாக பேசப்பட்டது .இதே போல் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளது. இந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸ் உருவாகிறது.

காலமாற்றத்தில் காதலின் போக்கைச் சொல்லும் விதத்தில் இந்தத் தொடர் உருவாகிறது. இதை ஆர்ஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்கிறது.

ஒளிப்பதிவு சேகர் ராம் ஜெரால்டு, இசை பாடல்கள் ஸ்ரீ சாய் தேவ், எடிட்டிங் -ரோஜர், சண்டைக்காட்சிகள் – ஓம் பிரகாஷ் -கலை இயக்கம் சிவா என தொழில்நுட்ப கூட்டணி அமைத்து இத்தொடரை உருவாக்குகிறார்கள்.

Ashwin Jayaprakash and Rekha Nair joins for a web series titled Oorvasi

நயன்தாராவை அடுத்து தயாரிப்பாளரானார் அமலாபால்.; பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

நயன்தாராவை அடுத்து தயாரிப்பாளரானார் அமலாபால்.; பிறந்த நாளில் பர்ஸ்ட் லுக் ரிலீஸானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகையான நயன்தாரா சமீபகாலமாக படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.

நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல், கூழாங்கல் ஆகிய படங்கள் இவரது தயாரிப்புகளாகும்.

தற்போது நடிகை அமலாபாலும் தயாரிப்பாளர் வரிசையில் இணைந்துள்ளார்.

Amala Paul Productions சார்பில், அமலா பால் வழங்கும், இயக்குநர் அனூப் S பணிக்கர் இயக்கத்தில், அமலா பால் நடிக்கும் “கடாவர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

மிகப்பிரபலமான பொன்மொழி ஒன்று உண்டு ‘ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கதைகளை ஒரு புகைப்படம் சொல்லிவிடும்’ அது சினிமாவுக்கு அப்படியே பொருந்தும்.

அதிலும் ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்பது ரசிகர்களை படத்தின்பால் ஈர்க்கும் முக்கிய கருவி ஆகும்.

அந்த வகையில் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டும் வகையில், தயாரிப்பாளர், நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள “கடாவர்” படத்தின் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளான இன்று (26.10.2021) வெளியாகியுள்ளது.

“கடாவர்” படம் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே, ரசிகர்களின் பேரார்வர்த்தை தூண்டி வருகிறது.

இப்படம் இந்தியாவில் முதல் முறையாக, ஒரு தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் (ஃபோரன்ஸிக் சர்ஜன்) விசாரணை அதிகாரியாக அழைத்து வரப்படும் கதையினை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

வித்தியாசமான இவ்வேடத்திற்காக, நடிகை அமலா பால் ஒரு வார காலம் மருத்துவமனை சென்று, அந்த துறை சார்ந்த, தேர்ந்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்றார். தன்னை முழுதுமாக தயார் செய்துகொண்டு, இந்த பாத்திரத்தில் ஒரு அசலான ஃபோரன்ஸிக் சர்ஜனாக கலக்கியுள்ளார்.

“கடாவர்” படத்தினை அனூப் S பணிக்கர் இயக்கியுள்ளார். Amala Paul Productions சார்பில் அமலா பால் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமலா பால் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக ( ஃபோரன்ஸிக் சர்ஜனாக ) முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன், ரித்விகா, ஆதித் அருண், முனிஷ்காந்த் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராகவும், ஷான் லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், அபிலாஷ் பிள்ளை வசனகர்த்தாவாகவும், ராகுல் கலை இயக்குநராகவும், தினேஷ் கண்ணன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Actress Amala Paul’s birthday treat to her fans

நவம்பர் 25 தான்டா தீபாவளி.. இதோ சொல்லிட்டார்ல சூர்யா.; அப்போ ரஜினி படத்தோட மோதியிருந்தா.?

நவம்பர் 25 தான்டா தீபாவளி.. இதோ சொல்லிட்டார்ல சூர்யா.; அப்போ ரஜினி படத்தோட மோதியிருந்தா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛மாநாடு’.

சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ஏற்கெனவே வரவேற்பை பெற்றுள்ளன.

இப்பட டப்பிங் பேசியது குறித்து எஸ்.ஜே.சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

‛‛மாநாடு படத்தில் என் டப்பிங்கை 8 நாளில் முடிக்க வேண்டியதை 5 நாட்களில் முடித்துவிட்டேன்.

என் நாடி, நரம்பு, முதுகுத்தண்டு, தொண்டை அனைத்தும் உடைந்துவிட்டன. வலி பின்னுது, 10 நாட்களாவது ஓய்வு.

ஆனாலும் படத்தை பார்த்ததும் ஒன்று சொல்ல தோன்றுகிறது. நவம்பர் 25 தாண்டா தீபாவளி” என பதிவிட்டுள்ளார்.

I almost covered 8days dubbing work of mypart for “MAANAADU”,in 5 https://t.co/a16iyxQQZQ naadi,narambu,neck,back,spine and throat are gone& begging me to give minimum10days rest(heavy work-valli pinnudhu)BUTafter seeing the out-put , tell U all one thing DIWALI NOV25TH THANDA

ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீசாகிறது.

இதே நாளில் சிம்பு எஸ்ஜே சூர்யா நடித்த ‘மாநாடு’ படமும் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் குறைவான தியேட்டர் & லாபம் பாதிப்பு ஆகிய காரணங்களால் நவம்பர் 25க்கு மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யாவின் இந்த ட்வீட் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் ரஜினி ரசிகர்களிடையே டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

SJ Suryah talks about Maanaadu movie

கஷ்டப்பட்டுதான் கார் வாங்குறோம்.. நீதிபதி அப்படி சொல்லலாமா..? மன உளைச்சலில் தவித்த தளபதி கோர்ட்டில் புகார்

கஷ்டப்பட்டுதான் கார் வாங்குறோம்.. நீதிபதி அப்படி சொல்லலாமா..? மன உளைச்சலில் தவித்த தளபதி கோர்ட்டில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ல் இங்கிலாந்து நாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார் நடிகர் விஜய்.

அப்போது வாகன பதிவுக்காக, மண்டல போக்குவரத்து அதிகாரியை அணுகினார். நுழைவு வரி தொடர்பாக, ஆட்சேபனையில்லா சான்றிதழ் பெற உத்தரவிட்டார் போக்குவரத்து அதிகாரி.

அதன்படி இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நுழைவுவரியில் இருந்து விலக்கு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‛‛நடிகர்கள் வரி விலக்கு கோருவை ஏற்க முடியாது. நடிகர்கள் வரி விலக்கு கேட்பது ஏன்.?

வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து இருந்தார்.

நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்தார்.

அப்போது தன்னை பற்றி தீர்ப்பில் குறிப்பிட்ட விமர்சனங்களையும், அபராதத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ‛‛ சட்டவிரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை, வரிவிலக்கு கோருவது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதாலேயே வழக்கு தொடர்ந்தோம்.

வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சம் ஆகஸ்ட் மாதம் ,7ஆம் தேதியே செலுத்தப்பட்டு விட்டது.

இதுபோன்ற வழக்கு விவரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தொழிலை பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை.

சூர்யா, தனுஷ் உள்ளிட்டோரும் இதுபோன்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என் மனதை புண்படுத்தி உள்ளன.

சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கிய நிலையில் நீதியின் விமர்சனம் தேவையற்றது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Thalapathy Vijay Pays Tax For Rolls Royce, Insists On Expunging Judge’s Remarks

More Articles
Follows