தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கினர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் பேரரசு அவர்களும் தன் கண்டனத்தை கவிதையாக தெரிவித்துள்ளார்.
மனித வைரஸ்
————-
இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!
மனசாட்சியை
புதைத்துவிட்டு
மருத்துவரை
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!
இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!
நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!
கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!
இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!
இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கொரோனா வந்து
சாவதுமேல்!
*பேரரசு
Director Perarasu talks about Dr Simon burial and Corona
