சினிமாவில் நடிக்கும் இயக்குனர் ரஞ்சித் மனைவி அனிதா

சினிமாவில் நடிக்கும் இயக்குனர் ரஞ்சித் மனைவி அனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டகத்தி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக நுழைந்தவர் ரஞ்சித்.

இதனையடுத்து கார்த்தி நடிப்பில் ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் தமிழகமெங்கும் இவரை கொண்டு சென்றது.

இதனையடுத்து எவரும் எதிர்பாராத வகையில் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இதன் பின்னர் ரஞ்சித் இயக்கிய காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பையும் வெற்றியை பெற்றது.

மற்றொரு பக்கம் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற தரமான படங்களையும் கொடுத்து வருகிறார்.

தற்போது காளிதாஸ் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ரஞ்சித்.

இந்த படத்தில் தனது மனைவி அனிதாவுக்கு நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்திருக்கிறார் ரஞ்சித்.

‛நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Director Pa Ranjith wife Anitha debut in Tamil Cinema

2022 பொங்கல் படங்கள் : விஷால் விதார்த் சசிகுமார் சதீஷ் உள்ளிட்டோர் மோதல்

2022 பொங்கல் படங்கள் : விஷால் விதார்த் சசிகுமார் சதீஷ் உள்ளிட்டோர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் 2022 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு (இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு) அமலுக்கு வந்துள்ளதால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.

இதனையடுத்து வலிமை விட்ட இடத்தை பிடிக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்துள்ளனர்.

அதன்படி தங்கள் படங்களில் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

2022 ஜனவரி 13ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஒரு பார்வை இதோ…

1. நாய் சேகர்
கிஷோர் ராஜ்குமாரின் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். சதீஷ், பவித்ரா லெட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ளார். வடிவேலு நடித்த ஒரு படத்தில் நாய்சேகர் என்பது அவரது கேரக்டர் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஜிஎஸ் குழுவினர் நாய் சேகர் பெயரை விட்டுக் கொடுக்காத காரணத்தினால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வருவது தனிக்கதை. இந்த படத்தை லைகா தயாரித்து வருகிறது.

2. வீரமே வாகை சூடும்
து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இதில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பதிப்பு குறித்து தகவல் இல்லை.

3. கொம்பு வச்ச சிங்கம்டா

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டின், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. இந்தர் குமார் தயாரித்துள்ளார்.

4. ஐஸ்வர்யா முருகன்

ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐஸ்வர்யா முருகன்’. இப்படத்தை கருப்பன் பட புகழ் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.
ஒரு காதல் ஜோடியின் குடும்பத்தை ஒரு காதல் எப்படியெல்லாம் பிரிக்கும் என்பதை இந்த படம் சொல்கிறதாம்.
ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர்களுடன் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத், குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, நாகேந்திரன்னு புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவையும், கணேஷ் ராகவேந்திரா இசை பணியையும், ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பணியையும் செய்கிறார்கள்.

5. கார்பன்
ஹிப் ஹாப் ஆதி நடித்த அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார் விதார்த். இந்த அன்பறிவு படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தாலும் விதார்த் நடிப்பை பாராட்டும்படியாக இருந்தது.

தற்போது விதார்த் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள படம் “கார்பன். ஶ்ரீனிவாசன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
கனவில் காண்பவை எல்லாம் நிஜத்தில் அப்படியே அசலாக நடப்பதால் இந்த படத்திற்கு கார்பன் என பெயர் வைத்திருக்கிறார்களாம்.
தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிகட்ட படப்புகழ்), பாவ்லின் ஜெஷிகா (வாய்தா படப்புகழ்) மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன் படப்புகழ்) டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Valimai postponed 5 movies clash in 2022 Pongal

சிம்புவின் ‘மாநாடு’ ரீமேக்..; அனைத்து மொழி உரிமைகளையும் வாங்கிய பிரபல நிறுவனம்.

சிம்புவின் ‘மாநாடு’ ரீமேக்..; அனைத்து மொழி உரிமைகளையும் வாங்கிய பிரபல நிறுவனம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த படம் ‘மாநாடு’.

இதில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், எஸ்ஏசி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

யுவன் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தின் பின்னணி இசை பெரியளவில் பேசப்பட்டது. தமிழ் & தெலுங்கில் இப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியானது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

எனவே ‘மாநாடு’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற ஹிந்தி, தெலுங்கு தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வந்தனர்.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் அனைத்து மொழிகளுக்கான ரீமேக் உரிமையை தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

மேலும் ‘மாநாடு’ படத்தில் தெலுங்கு டப்பிங் உரிமையையும் அந்நிறுவனமே கைப்பற்றியுள்ளது என தன் ட்விட்டர் பக்கத்திலும் அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

கூடுதல் தகவல்..:

1960களிலேயே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாம். இதுவரை 100-க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்துள்ளது சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

Silambarasan TR’s Maanaadu film remake details

இந்தியாவில் ஓர் ஹாலிவுட்..; மலைக்க வைத்த ‘மட்டி’ 2ஆம் பாகத்தில் அஜித்

இந்தியாவில் ஓர் ஹாலிவுட்..; மலைக்க வைத்த ‘மட்டி’ 2ஆம் பாகத்தில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியான ‘மட்டி ‘ திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஊடகங்கள் நேர்நிலை விமர்சனங்கள் வெளியிட்டு வியப்பு தெரிவித்திருந்தன. புதிய படக் குழுவாக இருந்தாலும் அவர்களது பெரிய முயற்சியைப் பாராட்டி எழுதி இருந்தன.

மண் சாலை கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவான அந்த மட்டி தங்கள் சினிமா பாதையில் ஒரு ஆரம்பப் புள்ளி தான் என்கிறார் படத்தின் இயக்குநர் பிரகபல்.

அவர் மேலும் பேசும்போது,

“மட்டி திரைப்படம் எந்த நட்சத்திர பலமும் இல்லாமல் உழைப்பின் பலத்தை மட்டும் நம்பி உருவாகியிருந்தது.அதை உருவாக்கும் போது பல வரையறைகள் இருந்தன. பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருந்தன.

அதற்கு உட்பட்டுத் தான் அதைச் செய்ய வேண்டியிருந்தது.அதற்கு அஜித் சார் போன்று ரேஸி ஆர்வமும் ஈடுபாடும் உள்ள ஒரு நடிகர் கிடைத்திருந்தால் அதன் உயரம் மேலும் பலநிலைகள் கூடியிருக்கும்.

மட்டியின் இரண்டாம் பாகத்தை அஜித் சார் போன்ற பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைத்து 10 மொழிகளில் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம்.

மட்டி எங்களுக்கு ஒரு ஆரம்பம்தான். இதைவிட பிரமாண்டமாக, அழுத்தமுள்ள கதையில், ஆர்ப்பாட்டமான காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்பட முயற்சியாக ‘மட்டி ‘இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறோம்.

அதன் கதையும் காட்சியமைப்புகளும் 10 மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகும் அளவிற்கு அனைவருக்கும் வியப்பூட்டும் வகையில் இருக்கும்.

இந்தியாவில் உருவாகும் ஹாலிவுட் படம் போல் அதை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழில் அஜித் சார் போல் பல மொழிகளிலுள்ள நட்த்திரங்களைச் சந்தித்து பேசும் திட்டத்தில் இருக்கிறோம்”

என்றவர் ‘மட்டி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் இந்தியாவில் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

உலகின் 90 நாடுகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது ‘ என்கிற தகவலையும் கூறினார்.

Critically-acclaimed Pan-Indian film ‘MUDDY’ premiered on Amazon Prime Video gets phenomenal response

சிம்புவுடன் டூயட் பாடும் முன்பே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான சித்தி

சிம்புவுடன் டூயட் பாடும் முன்பே ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியான சித்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த சித்தி இத்நானி நடித்து வருகிறார் என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

தெலுங்கில் சில படங்களில் சித்தி இத்நானி நடித்திருக்கிறார்.

இவரை கௌதம் மேனன் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்கிறார் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் சிம்பு உடன் நடிப்பதற்கு முன்பே பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறாராம் சித்தி இத்நானி என தகவல் வந்துள்ளது.

Harish Kalyan and Siddhi Idnani joins for Director Sasi’s next flick

இலங்கை நாயகன்.. ஆந்திரா நாயகி.; திருக்குறள் கருத்தில் உருவான ‘அடங்காமை’ ஜனவரி 7-ல் ரிலீஸ்

இலங்கை நாயகன்.. ஆந்திரா நாயகி.; திருக்குறள் கருத்தில் உருவான ‘அடங்காமை’ ஜனவரி 7-ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’ நாளை முதல்.

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர் ஏற்கனவே மங்களாபுரம் என்ற படத்தை இயக்கியவர்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்து இருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த பிரபல மாடல் அழகி, பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் இசை அமைக்கிறார்.

ஜனவரி 7 முதல்’அடங்காமை’ உலகமெங்கும் வெளியாகிறது.

“திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக ‘அடக்கமுடைமை’ அதிகாரத்தில் முதலில் வரும் ‘அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் ‘என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .

ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து
ஒரு கதையை உருவாக்கினேன்.

அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தை 7 முதல் முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் “என்கிறார்

தயாரிப்பாளர்கள் பொன். புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன்., திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன், நடனம் சீதாபதிராம். கபில் ஷாம் ஜெனோசன் ராஜேஸ்வர்சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.

மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 7 முதல் நாளை வெளியிடுகிறார்கள்.

Thirukkural concept based film Adangaamai will release on Jan 7th

More Articles
Follows