முதல் படம் ரிலீசாவதற்குள் உயிரிழந்த 32 வயதான மனு.; அதிர்ச்சியில் திரையுலகம்.!

முதல் படம் ரிலீசாவதற்குள் உயிரிழந்த 32 வயதான மனு.; அதிர்ச்சியில் திரையுலகம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனு ஜேம்ஸ்.

இவர் தற்போது தனது கனவு திரைப்படமான ‘நான்சி ராணி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இதில் அஹானா கிருஷ்ணா நாயகியாக நடிக்க சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வந்தார் இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ்.

தன் முதல் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு இருந்த நிலையில் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மனு ஜேம்ஸ் உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மனு ஜேம்ஸ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வயது 32 ஆகிறது.

கூடுதல் தகவல்…

கடந்த 2004ல் குழந்தை நட்சத்திரமாக ஐ எம் க்யூரியஸ்’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் மனு ஜேம்ஸ்.

Director Manu James dies days before release of his first film

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் 7 வில்லன்கள் இவர்களா ?

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கும் 7 வில்லன்கள் இவர்களா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கமல் ஏழு வில்லன்களை எதிர்கொள்ளும் உயர் அதிரடி காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

The 7 villains of Kamal Haasan in ‘Indian 2’ revealed

எல்லா கொலைக்கும் காரணமிருக்கு.. என் கொலைக்கு.!? மிரட்டும் உதயநிதி டிரைலர்

எல்லா கொலைக்கும் காரணமிருக்கு.. என் கொலைக்கு.!? மிரட்டும் உதயநிதி டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கலகத் தலைவன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கண்ணை நம்பாதே’.

இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் என்பவர் இயக்கி இருக்கிறார்.

இதில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, வசுந்தரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சித்துக்குமார் இசையமைக்க ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லராக உருவான ‘கண்ணை நம்பாதே’ படம் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலலர் இன்று மாலை வெளியானது.

இந்த ட்ரைலரில்…

#KannaiNambathe most awaited trailer is here …

@RedGiantMovies_
@Udhaystalin
@mumaran1
@im_aathmika
@Prasanna_actor
@bhumikachawlat
@Act_Srikanth
@actorsathish
@SubikshaOffl
@ivasuuu
@JalandharVasan
@Music_Siddhu
@Sanlokesh
@stuntsaravanan
@DoneChannel1

Udhayanidhi’s kannai Nambathe trailer goes viral

‘பிச்சைக்காரன்’ அம்மா நிஜ தொழில் அதிபராக மாறியது எப்படி ?

‘பிச்சைக்காரன்’ அம்மா நிஜ தொழில் அதிபராக மாறியது எப்படி ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானவர் நடிகை தீபா ராமானுஜம். பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியின் பெரும் பணக்கார அம்மாவாக நடித்துள்ளார்.

2019-க்குப் பிறகு எந்தப் படத்திலும் தோன்றாத தீபா, 2020-ல் பெண்களுக்கான ஜீன்ஸ் பிராண்டைத் தொடங்கி தொழிலதிபராக மாறியுள்ளார். அந்த வணிகம் லாபகரமாக மாறியதால், அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்று கிளை ஒன்றைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் தீபாவைப் பின்தொடரும் ரசிகர்கள், மாடர்ன் உடையில் அவரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

‘Pichaikkaran’ actress Dheepa Ramanujam turns a successful business woman in real life

‘ஜெயிலர்’ செட்டில் ஜாலியாக நெல்சன்.; பதட்டத்தில் சூப்பர் ஸ்டார்(ஸ்) ரசிகர்கள்

‘ஜெயிலர்’ செட்டில் ஜாலியாக நெல்சன்.; பதட்டத்தில் சூப்பர் ஸ்டார்(ஸ்) ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப் குமார்.

இதற்கு முன்பு ரஜினி நடித்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.. அதுபோல நெல்சன் இயக்கிய விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் மோசமான விமர்சனங்களை பெற்றது.

தற்போது ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணி அமைந்துள்ளதால் இந்த படத்தை சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருவரும் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர். தற்போது வரை ஜெயிலர் படத்தின் 80% ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ‘ஜெய்லர்’ பட செட்டில் இருந்து ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நெல்சன் ஜாலியாக பேசிக்கொண்டு திரிவதாக உள்ளது.

இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள்..” நாம தான்யா டென்ஷன்ல இருக்கோம்.. இந்த ஆளு ஜாலியா சுத்திட்டு இருக்காரு.. தலைவருக்கு ஹிட்டு கொடுத்துடுவாரா.? என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரீஃப், தமன்னா ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல இந்திய பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பான் படமாக உருவாக்கி வருகிறது என்பது கூடுதல் தகவல்.

Netizens comment on Nelson at Jailer sets video

அரியவனுக்கு வந்த சோதனை.; பதிலடி கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்

அரியவனுக்கு வந்த சோதனை.; பதிலடி கொடுத்த இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 3ல் வெளியாகவுள்ள ‘அரியவன்’ படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து மித்ரன் ஜவஹர் இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கே எஸ் விஷ்ணு ஸ்ரீ இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய,ஜேம்ஸ் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்த படம் உலகம் முழுவதும் மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவில்லை என இணையத்தில் சிலர் தகவலை பரப்பி வருகின்றனர். அந்த தகவலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மித்ரன் ஆர் ஜவஹர் அவர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாகவும் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பதில் பாராட்டையும் பெரும் வகையில் ‘அரியவன்’ திரைப்படம் இருக்கும் என தெரிவித்துள்ளது.

அதற்கேற்றார் போல் தற்போது இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mithran R Jawahar responds on ariyavan rumours

More Articles
Follows