யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது.

‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.

இப்படத்தில் மு ராமசாமி, நாக் விஷால், யோக் ஜபி ஆகியோருடன் இணைந்து பலர் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுத, விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, கலை இயக்கத்திற்கு இம்மானுவேல் ஜாக்சன் பொறுப்பேற்க, கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.

லண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது. மேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 1௦0வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருங்கே வென்றிருக்கிறது.

யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு ராமாசாமி, நாக் விஷால், யோக் ஜபி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கே டி’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதத்தில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் தங்கியிருந்தார் சேரன்.

சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சேரன் ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டார்.

பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் சேரன். இந்த நிலையில் கடந்த வார இறுதியில் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.

அதில்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.” என தெரிவித்துள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி ஏன்.? தமிழக அரசு கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார் நடிகர் விஜய்.

யார் யாரை எங்கு வைக்கனுமோ? அங்கு தான் வைக்க வேண்டும் எனவும் சுபஸ்ரீ மரணத்தில் அதிமுக அரசின் நடவடிக்கை சரியில்லை எனவும் பேசியிருந்தார்.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. அரசியல் பிரபலங்கள் பலரும் விஜய்யின் பேச்சுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக.வில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

காப்பானை காப்பாற்ற ‘நெற்றிக்கண்’ திறந்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

தற்போது தன் காதலி நயன்தாராவை நாயகியாக்கி நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்து வருகிறார் விக்கி.

இந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக காப்பான் படத்தை காப்பாற்ற ஒரு விளக்க கடிதம் அளித்துள்ளார் இவர்.

அதில்….

ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள் ரசிகர்கள்.

சில விமர்சகர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டவே படத்தை விமர்சிக்கின்றனர். அவர்கள் படக்குழுவின் முயற்சிகளை பாராட்டுவதில்லை.

ஒரு படம் என்றால் அதில் பல தரப்பட்ட ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது.

இப்போது எல்லாரும் விமர்சனம் செய்து விடுகிறார்கள்.

தோல்விகளை மன்னிப்போம். படங்களை ரசிப்போம்.

இந்த உலகத்தில் எதுவுமே சரியானதாக இல்லை. அப்படி இருக்கும்போது ஒரு படம் மட்டும் சரியில்லாததாக இருக்கவே கூடாதா?

பல விஷயங்களுக்காக நான் காப்பான் படத்தை ரசித்துப் பார்த்தேன்.

மோகன்லால் அற்புதமாகச் செய்திருந்தார். சூர்யா ஒவ்வொரு பிரேமிலும் கச்சிதமாக இருக்கிறார்.

காப்பான் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நல்ல படம்.“ என படத்தை பாராட்டியுள்ளார் விக்னேஷ் சிவன்.

ரஜினியை பாலோ செய்.; விஜய்யை மறைமுகமாக சாடிய ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர், ரஜினி நடித்த எஜமான், கமல் நடித்த சிங்காரவேலன், கார்த்தி நடித்த பொன்னுமணி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார்.

தற்போது பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர்களின் மேடை பேச்சு மற்றும் படத்தில் பேசும் பன்ச் டயலாக் குறித்து அவர் பேசியுள்ளார்.

அப்போது… பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துகள். என்றார்.

பின்னர்… ரஜினிகாந்த் படத்தில் தான் பஞ்ச் டயலாக் பேசுவார், மேடைகளில் யதார்த்தமாக பேசுவார். மற்ற நடிகர்களும் அதனை பின்பற்ற வேண்டும், என பிகில் இசை விழாவில் விஜய் பேசியது குறித்து இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் மறைமுகமாக சாடியுள்ளார்.

ஏனென்றால் தமிழக அரசை விஜய் கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RV Udhayakumars indirect advice to Vijay to follow Rajini formula

சூப்பர் ஹிட்டான ‘ஜீவி’ பட கதாசிரியர் பாபு தமிழ் இயக்குனராகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் ‘க்’*

தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து – இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ்.

தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது.

ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில், உருவாகும் ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க இருக்கிறது.

பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

யோகேஷ் (அறிமுகம்)
அனிகா விக்ரமன்
குரு சோமசுந்தரம்
ஆடுகளம் நரேன் மற்றும் பலர்
தயாரிப்பு: தர்மராஜ் பிலிம்ஸ்’ நவீன்
கதை-திரைகதை வசனம் இயக்கம்: பாபு தமிழ்
நிர்வாக தயாரிப்பு: பினு ராம்
ஒளிப்பதிவு: ராதாகிருஷ்ணன்
படத்தொகுப்பு: ராகுல்
இசை: அவினாஷ் கவாஸ்கர்
கலை: கல்லை தேவா
சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக்
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Babu Tamizhs directorial IKK starring Yogesh and Guru Somasundaram

More Articles
Follows