தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘போகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனி ஒருவன் அரவிந்த் சாமியும் இணைந்துள்ளார்.
இவர்களுடன் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்க, இமான் இசையமைக்கிறார்.
பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இயக்குனர் லக்ஷ்மன் பேசியதாவது..
காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இப்படம் அமையும்.
இதில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி ஆகிய இருவருமே ஹீரோவாகவும் அவர்களே வில்லன்களாகவும் நடித்துள்ளனர்.
இருவருக்கும் ஒரே மாதிரியான வேடம் என்றாலும், இரு மாறுபட்ட குணாதிசயங்களை அவர்களின் கேரக்டர்கள் கொண்டு இருக்கும்” என்றார்.
