தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் *பாண்டிமுனி*

தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் *பாண்டிமுனி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Kasthuri Raja next movie Pandimuni (aka) Pandi Muniதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம் 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது.

இப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார்.

கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள்.முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள் பின்னர் அறிவிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு – மது அம்பட்
இசை – ஸ்ரீ காந்த்தேவா
கலை – ஸ்ரீமான் பாலாஜி
நடனம் – சிவசங்கர்
சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் : கஸ்தூரி ராஜா.

படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் அவரிடம் கேட்டோம்…

பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு சுமார் 700 வருஷமாகிறது என்று சிலர் சொல்கிறார்கள்.

சிலர் ஆயிரம் வருஷமாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம்.

அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது.. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள்.

நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம்.

மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம்.

ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம்.

நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ கண் கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம்.
அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது.

பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று.

கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது.

ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இணைய உள்ளார் என்றார் கஸ்தூரிராஜா.

Director Kasthuri Raja next movie Pandimuni (aka) Pandi Muni

நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டு அதுதான் கலைஞர்.: வைரமுத்து

நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டு அதுதான் கலைஞர்.: வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu Paid last Respect To DMK Chief Karunanidhiஇந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி அவரது நெருங்கிய நண்பர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

கலைஞர் என்பது ஒரே சொல்லில் ஒரு சரித்திரம். நான்கே எழுத்துக்களில் ஒரு நூற்றாண்டை அடக்கமுடியுமென்றால் அதன்பேர் கலைஞர்.

ஒரு புலவனே போராளியாகவும், போராளியே புலவனாகவும் திகழ்ந்த பெருஞ் சரித்திரம் இந்தியப் பெரும்பரப்பில் கலைஞருக்கே வாய்த்திருந்தது. இந்திய தேசப்படம் யோசித்து ஏற்றுக்கொள்ளும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவை ஆளும் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கும் ஆற்றலாக வளர்ந்த அதிசயம் அவர்.

மெய்யான திராவிட இயக்கக் கொள்கைகளை 80 ஆண்டுகள் ஏந்தி நடந்தவர்.

அவர் கல்லூரிக் கல்வி காணவில்லை; ஆனால் பல்கலைக்கழகங்களைப் படைத்தளித்தார். மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார்; தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பரிசளித்தார்.

இசைத்தமிழ் வளர்க்கும் குடும்பத்தில் பிறந்தார்; ஆனால் முத்தமிழுக்கும் பங்களிப்புச் செய்தார். பேராசிரியரையும் நாவலரையும் அழைத்துக் கூட்டம் போடுவதற்கு வீட்டு வெள்ளிக் கிண்ணத்தை அடமானம் வைத்தார்; ஆனால் ஆண்டாண்டு காலமாக அடமானம் கிடந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுத்தார்.

வீழ்த்தப்பட்டவர்களுக்காகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இவர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை இந்தியாவின் எல்லாத் திசைகளுக்கும் நீட்டித்தார்.

எழுத்தாளர் – கவிஞர் – நாடக ஆசிரியர் – பத்திரிகையாளர் – கட்சித் தலைவர் – ஆட்சித் தலைவர் – உறங்காத படைப்பாளி – ஓயாத போராளி என்று எத்துறை தொட்டாலும் அத்துறையில் வித்தகம் காட்டிய வித்தகர் இந்திய அளவில் இவர் மட்டும்தான்.

கட்சித் தலைவன் போய்விட்டான் என்று தொண்டர்கள் கதறுகிறார்கள். எங்கள் கவியரங்கத் தலைவன் போய்விட்டான் என்று கவிஞர்கள் கதறுகிறோம்.

பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது.

ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கியதால்தான் பெரியார், அண்ணா என்ற தத்துவங்கள் கணிப்பொறித் தலைமுறைக்குக் கடத்தப்பட்டன. இந்த ஒரு பெரும்பணிக்காகவே காலம் கலைஞரை நினைவு கூரும்.

தொல்காப்பியப் பூங்கா – குறளோவியம் – சங்கத்தமிழ் – சிலப்பதிகார நாடகம் – ரோமபுரிப் பாண்டியன் – தென்பாண்டிச் சிங்கம் – திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பார்.

மகாகவி தாகூர் மரித்த நாளில் கலைஞர் மறைந்திருக்கிறார். ஓ! கலைஞரின் மரணம் கூட கம்பீரமானது.
மரணத்தால் கலைஞர் மரிப்பதில்லை.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவர் புரிந்த ஒவ்வொரு செயலும் மரணத்தை முறியடிக்கும் ஏற்பாடுதான். என் ஒவ்வோர் எழுத்தையும் வாசித்து நேசித்து உரையாடுவார்.

இதோ இந்த இரங்கல் செய்தி படிக்க அவரில்லையே என்று அழுகிறேன். அவர் புகழுடம்பு வாழும் திசை நோக்கித் தொழுகிறேன்.” என உருக்கமாக தெரிவித்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Vairamuthu Paid last Respect To DMK Chief Karunanidhi

vairamuthu family with kalaignar

தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர் கலைஞர். : சிவகுமார்

தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர் கலைஞர். : சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumar and Suriya paid last respect to Late Kalaignar Karunanidhiதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது…

1. பெரியார், ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

2. பெரியார் – எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

3.அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் .

4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக – கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர் .

5.1950 களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .

6. குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா – போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது.

7. பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் – அவர் வசனம் பேசி நடித்தேன்.

8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார்.

9. சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் – கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர்.

10.தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் .
அன்னாரது ஆத்மா சாந்தியடையவும் / பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். “ எனத் தெரிவித்துள்ளார் சிவகுமார்.

கருணாநிதியின் உடலுக்கு சிவகுமார், சூர்யா இருவரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். கார்த்தி வெளியூரில் இருப்பதால் கலந்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

Sivakumar and Suriya paid last respect to Late Kalaignar Karunanidhi

கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்

கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vikram condolence statement for Kalaignar Karunanidhiதிமுக தலைவர் மு.கருணாநிதியின் உறவினரும் நடிகருமான விக்ரம், தற்போது வெளியூரில் இருப்பதால், கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

இதையடுத்து அவர் கடிதம் மூலம் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

“தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர்.கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடி கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Actor Vikram condolence statement for Kalaignar Karunanidhi

கலைஞரின் மறைவு முற்றுப்புள்ளி அல்ல; தலை வணங்கி கமல் இரங்கல்

கலைஞரின் மறைவு முற்றுப்புள்ளி அல்ல; தலை வணங்கி கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassans condolence message for Late Kalaignar Karunanidhiதமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைவையொட்டி பல்வேறு பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது..

“கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான். உணர்வும், இந்த சூழலும் குரலை உயர்த்த முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கியுள்ளது.

எனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.

நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது.

அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்றார் கமல்ஹாசன்.

Kamalhassans condolence message for Late Kalaignar Karunanidhi

கலைஞர் மரணம்: ரஜினி மகள்கள் இரங்கல்; கண்டுக்கொள்ளாத கமல் மகள்

கலைஞர் மரணம்: ரஜினி மகள்கள் இரங்கல்; கண்டுக்கொள்ளாத கமல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Kamal daughters reaction to Kalaignar Karunanidhis deathதமிழகம் மற்றும் இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று ஆகஸ்ட் 7 மாலை காலமானார்.

அவருக்கு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகம், புதுவை, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவரை இழந்துவிட்ட சோகத்தில் தமிழகமே மூழ்கியுள்ளது.

இந்நிலையில் கருணாநிதிக்கு நெருக்கமான ரஜினி மற்றும் கமல் மகள்கள் தங்கள் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அவர்கள் தாத்தா கலைஞருக்கு இரங்கல் என தெரிவித்துள்ளார்.

கமலின் மகள் ஸ்ருதிஹாசன் யாருடனோ எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து உங்களுடன் இருந்த நேரம் ஜாலியாக இருந்துள்ளது என இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் என்ன நடக்குது? உனக்கு தெரியாதா? நீ இரங்கல் தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இந்த சமயத்தில் நீ இப்படி பதிவிட்டு இருக்கிறாயே என திட்டி வருகின்றனர்.

ஆனால் இதை எதையும் ஸ்ருதிஹாசன் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. அந்த பதிவு இன்னும் டெலிட் ஆகவில்லை.

ஒரு சில ரசிகர்கள் இது அவரவர் விருப்பம் என தெரிவிக்கின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நேரிடையாக சென்று கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

soundarya rajnikanth‏Verified account @soundaryaarajni
#RIP Kalaignar Thatha #EndOfAnEra

shruti haasan‏Verified account @shrutihaasan
So much fun working with these two !!!! @danlancaster @mikeduce https://www.instagram.com/p/BmL-WMwHUWI/?utm_source=ig_twitter_share&igshid=vcgacjqs9qt3 …

Rajini and Kamal daughters reaction to Kalaignar Karunanidhis death

shruthihassan tweet at time of kalaignar death

More Articles
Follows