கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.

இதன் பின்னர் அடுத்ததாக விக்ரம், துருவ், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இது விக்ரமின் 60-வது படம்.

இந்த நிலையில் தன் சொந்த பேனர் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் சார்பாக ஒரு படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

அசோக் வீரப்பன் இயக்கும் இப்படத்துக்கு ‘பபூன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

வைபவ் நாயகனாக நடிக்க கதாநாயகியாக அனகா நடிக்கிறார்.

இசை – சந்தோஷ் நாராயணன்.

கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் ஆகியோரும் தயாரிப்பில் இணைந்துள்ளனர்.

இந்த ‘பபூன்’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

Director Karthik Subbaraj next film announced

டைரக்டராகிறார் ‘அட்டகத்தி’ தினேஷ்..; தெலுங்கு பட ஸ்டைலில் அதிரடி தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படம் மூலம் நாயகன் ஆனார் தினேஷ்.

திருடன் போலீஸ், குக்கூ, விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஜினியுடன் ‘கபாலி’ படத்திலும் நடித்திருந்தார்.

தினேஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘நானும் சிங்கிள் தான்’.

இந்நிலையில் “வயிறுடா” என்கிற படத்தை இயக்குகிறார் தினேஷ்.

இப்படம் தொடர்பான போஸ்டர்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் தினேஷ்.

அந்த போஸ்டரில் ‘வயிறுடா என்கிற படத்தலைப்பும், அதற்கு கீழ் Director V.R.Dinesh என்ற பெயரும் இடம் பெற்றுள்ளது.

பொதுவாக தெலுங்கு படங்களை தமிழில் ரீமேக் செய்தால் டா என்ற வார்த்தை அதிகம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Attakathi Dinesh turns director ?

‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளருடன் இணையும் ‘காடன்’ ஒளிப்பதிவாளர் & திண்டுக்கல் லியோனி மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார்.

முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது.

விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார்.

இப்படங்களில் அசோக்குமாரின் திறமையை பார்த்த இயக்குனர் பிரபு சாலமன், காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

இப்படம் குறித்து ஏ.ஆர்.அசோக்குமார் கூறும்போது, என்னை நம்பி காடன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் வாய்ப்பை கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் அவர்களுக்கும், ஈராஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றிகள்.

முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி. நான் அறிமுக ஒளிப்பதிவாளர் என்று பார்க்காமல், நடிகர்கள் ராணா மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் என்னுடன் நட்பாக பழகியது என்னை ஆச்சரியப்படுத்தியது.

மேலும் ராணா, விஷ்ணு விஷால் இருவரும் விரைவில் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.

காடன் படத்திற்காக தாய்லாந்து, புனே, கேரளா வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது சிறந்த அனுபவமாக இருந்தது. முழு படத்தையும் பார்த்த படக்குழுவினர், பொதுமக்கள் அனைவரும் என்னை பாராட்டியது சந்தோஷமாக இருந்தது.

குறிப்பாக ராணா, விஷ்ணு விஷால், இயக்குனர் பிரபு சாலமன் ஆகியோர் பாராட்டில் மெய் சிலிர்த்து போனேன். இவர்களின் பாராட்டு இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற உற்சாகப்படுத்தி இருக்கிறது.

தற்போது, சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் சீனு ராமசாமி சகோதரர் இயக்கத்தில் திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தில் பணியாற்றி வருகிறேன்” என்றார் அசோக்.

Kaadan cinematographer joins Master producer’s next film

‘துருவங்கள் 16’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் ‘துருவங்கள் பதினாறு’.

இதில் ரகுமான், யாஷிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து நரகாசூரன், மாஃபியா படங்களை இயக்கினார் கார்த்திக் நரேன்.

தற்போது தனுஷின் ‘D43’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், ‘துருவங்கள் பதினாறு’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம்.

ரகுமான் கேரக்டரில் வருண் தவான் நடிக்க ப்ரினிதி சோப்ரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..

Actor Varun Dhawan to reprise Rahman’s role in the Hindi remake

தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது கதை திருட்டு புகார் அளித்த ‘குட்டிப்புலி’ சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குட்டிபுலி’ மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி.

இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஜே.கே.ரித்தீஷ் நடித்த ‘நாயகன்’ ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிருந்தார். அப்படத்திற்கு ‘குலசாமி’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது.

இருப்பினும், ‘குலசாமி’ என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி.

மேலும், 25.01.2021 அன்று அப்படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. இப்படத்திற்கான தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை விரைவில் வெளியிடுவதாக இப்படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு ராக் ஸ்டார் நடிக்கும் ‘எங்க குலசாமி’ என்று படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அப்படத்தின் பத்திரிக்கை செய்தியும் வெளியானது.

அந்த செய்தியை சரவண சக்தி படிக்கும் போது, தான் சிங்காரவேலனிடம் கூறிய கதையும் ‘எங்க குலசாமி’ படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சரவண சக்திக்கு பின்பு தான் புரிந்தது, சிங்காரவேலன் தன்னை நம்பிக்கை மோசடி செய்துவிட்டார் என்று.

இதற்கு முன் இவர் சிங்காரவேலன் இடம் இருவரும் இணைந்து இப்படத்தை எடுப்போம் என்று கூறியதாகவும் அதற்கு சிங்காரவேலன் ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக இரண்டு நாள் அலுவலக வேலையில் ஈடுபட்டு ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது இப்படத்தின் கதையை அவரிடம் நம்பிக்கையின் பெயரில் கூறியிருக்கிறார். பிறகு சில காரணங்களால் அவருடன் இணைந்து அப்படத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால், MIK Production (P) Ltd தயாரிப்பில் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இப்போது அதே கதையை ராக் ஸ்டார் என்பவரை வைத்து சிங்கார வேலன் எடுக்கவுள்ளார் என்பதையறிந்த சரவண சக்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கில்டு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, பிரபல பத்திரிக்கையில், ‘இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் ‘குலசாமி’ என்ற படத்தின் ஒட்டுமொத்த காப்பிரைட் உரிமை எனது கட்சிக்காரர் கே.விக்னேஷ் குமார் அவர்களிடம் உள்ளது.

எனது கட்சிக்காரரின் அனுமதி இல்லாமல் யாரேனும் இப்படத்தை விற்க முயல்வதோ வாங்க முயல்வதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வழக்கறிஞர் A.M.ரவீந்திரநாத் ஜெயபால் மூலம் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதனால் இவர் இயக்கும் ‘குலசாமி’ படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு நியாயம் கேட்பதற்காக சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சரவண சக்தி சென்றுள்ளார்.

அப்போது சிங்காரவேலன் அங்கு இல்லை, விக்னேஷ் என்பவர் இருந்துள்ளார். அவரிடம் விசாரிக்கும் போது என் பெயர் விக்னேஷ் ஆனால், அந்த அறிவிப்பில் உள்ள விக்னேஷ் நானில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், ‘எங்க குலசாமி’ படத்திற்காக ஒப்பந்த சிங்காரவேலன் ஒப்பந்தம் செய்த அறிமுக நாயகன் ராக் ஸ்டாரும் அங்கு இருந்துள்ளார்.

அவரிடம் கேட்டதற்கு என்னிடம் ஒரு கதை இருக்கிறது நீங்கள் தான் நாயகன் என்றும், இப்படம் OTTயில் வெளியாகும் என்று என்னிடம் கூறினார்கள். இது தவிர வேறு எந்த விபரமும் எனக்கு தெரியாது என்று ராக் ஸ்டார் கூறியுள்ளார்.

சிங்காரவேலன் நடிகர் விமலை வைத்து ‘மன்னர் வகையறா’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் விமல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இதை செய்திருக்கிறார்.

மேலும், இதில் அவர் பெயர் வெளி வராத வண்ணம் அவருடைய அலுவலகத்தில் இருக்கும் ஒருவரை வைத்து இந்தப் புகாரை கொடுத்திருக்கிறார்.

இவர் மீதும் இவர் நிறுவனத்தின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று (29.03.2021) விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரவண சக்தி புகார் அளித்துள்ளார்.

Case filed against producer Singara Velan

எடப்பாடி கண்ணீர்.. ஸ்டாலின் கண்டிப்பு..; முதல்வரின் பிறப்பை அசிங்கப்படுத்திய 2ஜி ராசா மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 26ல் சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், தேர்தல் பிரசாரம் செய்தபோது நீலகிரி திமுக எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா என்பவர் முதல்வர் பழனிசாமியையும் அவரது தாய் குறித்து, தரக்குறைவாக பேசினார்.

கள்ள உறவில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிச்சாமி என பேசினார்.

தமிழக பெண்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மத்தியில் அவரது கேவலமான பேச்சு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‛தாய்மார்களை கொச்சைப்படுத்தி பேசுவோருக்கு, தக்க தண்டனை வேண்டும்,’ என முதல்வர் பழனிசாமி் கண்ணீர் மல்க பிரச்சாரத்தில் பேசினார்.

திமுகவினர் கண்ணியத்தோடு பேச வேண்டும் என அக்கட்சி தலைவர் முக. ஸ்டாலினும் கேட்டுக் கொண்டார்.

முதல்வர் தாய் குறித்து, ஆபாசமாக பேசிய ராசாவின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்’ என பலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில் ஆ.ராசா தனது பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து ஊட்டியில் கூறியதாவது…

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரின் அரசியல் ஆளுமையை பிறந்த குழந்தைகளாக உருவகப்படுத்தி பேசினேன்

ஆனால் நான் பேசிய சில வரிகளை மட்டும் எடுத்து திட்டமிட்டு தவறாக சித்தரிக்கப்படுகிறது.

நானும் ஒரு தாயின் 8வது பிள்ளை என்ற உணர்வோடு மீண்டும் விளக்கமளித்தேன்.

எனது பேச்சால் முதலமைச்சர் காயப்பட்டார் என்ற செய்தி படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்.

எனவே எனது அடிமனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமால், காயப்பட்டிருப்பதாக உணர்வார் எனில், எனது மன்னிப்பை கோருவதில் தயக்கமில்லை.”

இவ்வாறு ஆ ராசா பேசினார்.

DMK’s A Raja apologises for ‘offensive’ jibe at Palaniswami

More Articles
Follows