என் படங்களில் போலீசை பெருமைப்படுத்தியதற்காக வேதனைப்படுகிறேன்.. – ஹரி

 Director Hari regrets glorifying Police in his films விக்ரம் நடித்த சாமி, சாமி2… சூர்யா நடித்த சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3… உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஹரி.

மேற்க்கண்ட படங்களில் படத்தின் நாயகன் போலீசாக நடித்திருப்பார்.

எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் ரவுடிகளுக்கும் நேர்மையற்ற போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அடிபணிவதில்லை என கம்பீரமாக காட்டியிருப்பார் டைரக்டர் ஹரி.

ஆனால் இன்று அவரே இந்த படங்களை எடுத்தமைக்காக வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது…

சாத்தான்குளம் சம்பவம் ஜெயராஜ் பெனிக்ஸ் உயிரிழப்பு போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது.

அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …

காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…

இவ்வாறு திரைப்பட இயக்குனர் G.ஹரி தெரிவித்துள்ளார்.

Director Hari regrets glorifying Police in his films

Overall Rating : Not available

Latest Post