‘துணிவு’ வினோத் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு

‘துணிவு’ வினோத் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சதுரங்க வேட்டை’ & ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் வினோத்.

இதனையடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ & ‘வலிமை’ & ‘துணிவு’ ஆகிய மூன்று அஜித் படங்களை தொடர்ந்து இயக்கி வந்துள்ளார்.

‘துணிவு’ படம் விரைவில் வெளியாக உள்ளது

இவர் அடுத்ததாக கமல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இவரின் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் யோகி பாபு்

இந்த படம் ஒரு திருடனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் கதையாம்.

இதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் எச் வினோத்.

3வது முறையாக இணையும் விஜய்சேதுபதி – மணிகண்டன்; ஆனால் இது படமல்ல.!

3வது முறையாக இணையும் விஜய்சேதுபதி – மணிகண்டன்; ஆனால் இது படமல்ல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதையமைப்பில் உருவாக்கப்பட்ட ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருந்தார் .

இதனையடுத்து மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற படத்திலும் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்திருந்தனர்.

இந்த நிலையில் விரைவில் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது.

ஆனால் இந்த முறை இது ஒரு திரைப்படமாக உருவாகாமல் வெப் தொடராக உருவாக்க உள்ளதாம்.

எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக்குகிறாரா சுதா கொங்கரா.?

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக்குகிறாரா சுதா கொங்கரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் 5 தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது.

சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார் சூர்யா. மேலும் அவர் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் இயக்ககுகிறார் சுதா கொங்காரா.

இதன்பின்னர் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை தழுவி புதிய படத்தை சுதா இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நம் FILMISTREET தளத்தில் அப்படி ஒரு தவறான செய்தியை பதிவிடவில்லை.

இந்த தகவலை இயக்குநர் சுதா கொங்கரா மறுத்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், “நான் மிகவும் போற்றும் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

என் அடுத்த படம் குறித்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.. ” என பதிவிட்டுள்ளார் சுதா.

சினிமாவில் செஞ்சுரி அடித்தார் நடிகர் கூல் சுரேஷ்.; குஷியாகும் ரசிகர்கள்

சினிமாவில் செஞ்சுரி அடித்தார் நடிகர் கூல் சுரேஷ்.; குஷியாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கூல் சுரேஷ்.. இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை.. காரணம் யூட்யூப்பில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் தான் எப்போதும் ட்ரெண்டிங் நாயகனாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

தற்போது திரைப்பட நிகழ்ச்சிகளில் பேசும் பொருளாக மாறிவிட்டார். ஒரு புதிய படம் வெளியாகும் போது இவரது விமர்சனத்தை கேட்கவே மீடியாக்களும் ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்தை போடு.. என ட்ரெண்டிங் ஆன இவர் தற்போது எஸ் டி ஆரின் பத்து தல.. நாம தான் கெத்து தல..” என ட்ரெண்டிங் செய்து வருகிறார்.

இவை இல்லாமல் திருமண நிகழ்ச்சி.. கடை திறப்பு விழாக்கள்.. புதிய பட இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் சிறப்பு விருந்தினர்.

இந்த நிலையில் இவர் தற்போது நூறாவது படத்தை நெருங்கி விட்டார்.

மோகன் ஜீ இயக்கத்தில் செல்வராகவன் நட்டி நடித்துள்ள ‘பகாசூரன்’ என்ற படம் கூல் சுரேஷ் நடிப்பில் 100வது படமாக வளர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் நாளை டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

திரையுலகில் கூல் சுரேஷ் செஞ்சுரி அடித்து உள்ளதால் விரைவில் அவரது ரசிகர்கள் இதை பெரும் விழாவாக கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை.

அஜித் – விக்னேஷ்சிவன் இணையும் AK-62 பட அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

அஜித் – விக்னேஷ்சிவன் இணையும் AK-62 பட அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் அடுத்த வருடம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இப்பட ஷூட்டிங் முடியும் முன்பே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் AK62 (ஏகே 62) படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

இவரது சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது..

“அஜித் படத்தை ஒப்புக்கொண்ட பின்னர் விக்னேஷ் சிவனிடம் பேசினேன்.

அப்போது அப்பட கதை குறித்து என்னிடம் விவரித்தார். மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அந்த படத்திற்காக நான் காத்திருக்கிறேன்.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING சூர்யா விலகிட்டாரு.. ‘வணங்கான்’ தொடரும்.; பாலா திடீர் அறிக்கை

BREAKING சூர்யா விலகிட்டாரு.. ‘வணங்கான்’ தொடரும்.; பாலா திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தா – பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா பாலா கூட்டணி மீண்டும் இணைந்தது.

இந்தப் படத்திற்கு ‘வணங்கான்’ என்று பெயரிட்டு கன்னியாகுமரியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

மீனவர் பிரச்சினை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டு வந்தது. இதில் மாற்று திறனாளியாக சூர்யா நடிக்க நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வந்தார்.

இந்தப் பட சூட்டிங்கின் போது சூர்யா பாலா இடையே மோதல் உருவானதாகவும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனாலும் படத்தரப்பு இதற்கு விளக்கம் அளித்து படம்பிடிப்பு மீண்டும் நடைபெறுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 4 ஆம் தேதி இயக்குனர் பாலா தரப்பில் ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில்…

வணங்கான் படத்தின் கதைகளில் சில மாற்றம் செய்தேன். அதில் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என தெரியவில்லை.

எனவே அவரை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை. இதனால் அவர் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக நாங்கள் இருவரும் பேசி முடிவெடுத்துள்ளோம.

எனவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிக் கொண்டுள்ளார்.

மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவோம். மற்றபடி வணங்கான் படம் தொடரும்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ…

More Articles
Follows