தியேட்டரிலேயே எடுக்கப்பட்ட மனுசனா நீ திருட்டு விசிடி; கடுப்பான கஸாலி

தியேட்டரிலேயே எடுக்கப்பட்ட மனுசனா நீ திருட்டு விசிடி; கடுப்பான கஸாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director cum Producer Ghazali about Manusanaa nee piracyகடந்த வாரம் கஸாலி இயக்கத்தில் வெளியான படம் மனுசனா நீ.

இப்படம் குறித்து இயக்குனர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுபற்றிய விவரம் இதோ…

உடக நண்பர்களுக்கு வணக்கம்!

எனது படம் ‘மனுசனா நீ’ கடந்த வாரம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன்.

ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர்.

ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும்.

கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர் மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.

இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டிற்கு 500 முதல் 600 கோடி வரை தமிழ் சினிமாவிற்கு இழப்பு ஏற்படுகிறது.

இந்த எங்கள் நடவடிக்கைக்கு ஊடக நண்பர்கள் ஒத்துழைத்து செய்தியை அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு சென்று நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

கஸாலி
தயாரிப்பாளர், இயக்குநர்.

Director cum Producer Ghazali about Manusanaa nee piracy

manusanaa nee movie stills

காலா டீசர் தேதியுடன் ரஜினியின் பன்ச் டயலாக்கை வெளியிட்டார் தனுஷ்

காலா டீசர் தேதியுடன் ரஜினியின் பன்ச் டயலாக்கை வெளியிட்டார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala teaser will be released on 1st March 2018ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியது. (நம் தளத்தில் பதிவிடப்படவில்லை)

இந்நிலையில் ரஜினி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் காலா படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இன்று காலை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில் மார்ச் 1 ம் தேதி இப்படத்தில் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை காண அனைவரும் தயாராகுங்கள் எனவும் “இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற ரஜினியின் பன்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

Kaala teaser will be released on 1st March

இளையராஜா இசையில் மராத்தி பாடலை பாடிய தனுஷ்

இளையராஜா இசையில் மராத்தி பாடலை பாடிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and ilayarajaதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தனுஷ்.

நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராக, இயக்குநராக, பாடகராகவும் வரவேற்பைப் பெற்றவர்

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி 2′ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

2015ம் ஆண்டு வெளியான `மாரி’ படத்தின் சீக்வலாக இப்படம் உருவாகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார் என சமீபத்தில் படக்குழுவினர் அறிவித்தனர்.

தான் ஒரு இளையராஜா ரசிகர் என்பதை பல நிகழ்வுகளில் பதிவு செய்திருக்கிறார் தனுஷ்.

`அது ஒரு கனா காலம்’, `ஷமிதாப்’ என இளையராஜா இசையமைப்பில் இரண்டு படங்களில் நடித்திருந்தார் தனுஷ்.

மேலும் நிறைய ஹிட் பாடல்கள் பாடி பாடக்கராகவும் வரவேற்பு பெறும் இளையராஜா இசையில் அவர் இதுவரை பாட வாய்ப்பு அமையவில்லை.

சமீபத்தில் ஒரு ரசிகர் “நீங்க எப்போ இளையராஜா இசையில் பாடுவீங்க?” என தனுஷிடம் கேட்க, “அந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமா” என ரிப்ளே செய்திருந்தார் தனுஷ்.

இப்போது அந்த பாக்கியம் தனுஷுக்கு கிடைத்திருக்கிறது. இளையராஜா இசையமைப்பில் உருவாகும் `ஃப்லிக்கர்’ என்கிற மராத்தி படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் தனுஷ்.

முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி கோவையில் மே மாதம் மாநாடு

முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி கோவையில் மே மாதம் மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth stillsதமிழக முதல்வராக ரஜினியை முன்னிறுத்தி பிரமாண்ட மாநாடு…

கோவையில் மே மாதம் நடத்துகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்!

‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனும் பெயரில் பிரமாண்ட மாநாட்டை தலைவர் தமிழருவி மணியன் கோவையில் நடத்துகிறார்.

கோவையில் உள்ள கொடீசியா வளாக மைதானத்தில் இந்த மாநாடு வரும் மே 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.

இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் பெரும் திரளான ரசிகர்கள், பொதுமக்கள், காந்திய மக்கள் இயக்கத்தினர் பங்கேற்றனர்.

மிகப் பெரிய வெற்றி மாநாடாக அது அமைந்தது. தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனை மாநாடு என அந்த மாநாட்டை அரசியல் நோக்கர்கள் குறிப்பிடும் அளவுக்கு பெரும் வெற்றி மாநாடாக மாறியது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார்.

இந்த நிலையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மீண்டும் ஒரு பிரமாண்ட மாநாட்டை ரஜினிக்காக நடத்த காந்திய இயக்கத்தின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் தலைவர் தமிழருவி மணியன்.

இந்த மாநாட்டுக்கு ‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிடுகிறார் தமிழருவி மணியன்.

இந்த மாநாட்டில் காந்திய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாநாடு குறித்த மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இப்படிக்கு

காந்திய மக்கள் இயக்கம்

கமல் படத்தில் அறிமுகமான பாடகருக்கு ரஜினி படத்தில் வாய்ப்பு

கமல் படத்தில் அறிமுகமான பாடகருக்கு ரஜினி படத்தில் வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala movie posterரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டில், சுகன்யா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனம்

இப்படத்தை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறது.

இந்நிலையில் விஜய் பிரகாஷ் என்ற பாடகர் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

இவர் கமல் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூ வாசம் புறப்படும் கண்ணே’ என்ற பாடலின் மூலம் தமிழில் பின்னணிப் பாடகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘ஓம் சிவோஹம்’ (நான் கடவுள்), ‘காதல் அணுக்கள்’ (எந்திரன்), ‘இன்னும் கொஞ்ச நேரம்’ (மரியான்), ‘ஓடே ஓடே’ (ராஜா ராணி) உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

காலா படப்பெயரில் வேற நடிகரின் பட போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

காலா படப்பெயரில் வேற நடிகரின் பட போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaalaரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படம் போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு பின் இந்த படம் வரவிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் இதே காலா என்ற பெயரில் மற்றொரு நடிகரின் பட போஸ்டரும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜேஎஸ். மணிமாறன் என்பவர் இயக்கி தயாரித்துள்ள இப்படமும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

More Articles
Follows