சிம்புவை இயக்கும் வெங்கட் பிரபுக்கு தமிழ்படம்2 டைரக்டர் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்புவின் அடுத்த படத்தை தான் இயக்குவதாக வெங்கட் பிரபு அறிவித்தார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இப்படம் 2019-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் இந்த புதிய கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்ப்படம் 2 இயக்குநர் சி.எஸ்.அமுதனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அமுதன் தெரிவித்ததாவது,

`இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்! ஒரு பர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியா இருக்கும்’ என்று வெங்கட் பிரபுக்கு அமுதன் கோரிக்கை வைத்தார்.

அவருக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, `எப்படியும் உங்க பட ரிலீசுக்கு அப்பறம் தான் சார்! நன்றி’. என்று பதில் அளித்தார்.

பன்னி மூஞ்சி வாயன் போல குழந்தைகளை கவர வரும் *காட்டேரி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’.

இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே.

படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கேட்டபோது,‘ காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த கதைக்கு ‘காட்டேரி ’ என்றடைட்டில் பொருத்தமாக இருக்கும் என்றும் அபிப்ராயமும் சொன்னார்.

அந்த தலைப்பு எனக்கும் பிடித்திருந்தது. கதைக்கும் ஏற்றதாக இருந்தது.

இந்த படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கும் திட்டமிருந்தது. ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாததால், தமிழில் இந்த படத்தை எடுக்க தீர்மானித்தோம்.

அதனால் வைபவ் நாயகன் ஆனார். அவருக்கு ஜோடியாக சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு நாயகிகள் ஒப்பந்தமானார்கள்.

இதில் சற்று சுயநலமிக்க கேரக்டரில் சோனம் பஜ்வா நடிக்கிறார். மன நல மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் கதையில் இடம்பெறும் 1960 சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார்கள்.

என்னுடைய முதல் படமான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் பிரபலமானது போல், இந்த படத்திலும் ரகளையான கேரக்டர்கள் இருக்கிறது.

இதனால் இந்த காட்டேரியை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த காட்டேரி ரத்தம் குடிக்காத காமெடி பேய்.’ என்றார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kaatteri aka Kaateri movie will attract Children

*அக்னி தேவ்* படத்திற்காக பாபி சிம்ஹாவுடன் இணையும் மதுபாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாபி சிம்ஹா மற்றும் சதீஷ் இருவரும் இணையும் படம் அக்னி தேவ்.

இந்த படத்தினை “சென்னையில் ஒருநாள் 2 ” படத்தின் இயக்குனர் J.P.R மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் நடிகை மதுபாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதினை “அக்னிதேவ்” படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

மேலும் SD -இன் ஆட்டம் விரைவில் ஆரம்பம் என்ற ஒரு குறிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது.

Actress Madhu Bala joins with Bobby Simha for Agni Dev

நயன்தாராவின் *இமைக்கா நொடிகள்* படத்தலைப்பின் காரணம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”.

டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படத்தை துவங்கும்போது கதை என்னை திருப்திப்படுத்தும் வரை ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. கதை முடிவான பிறகு கதை தனக்கு தேவையான நடிகர்களை தானே எடுத்துக் கொண்டது.

நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே ஆர்டி ராஜசேகர் சாரின் ரசிகன். அவரின் கேரியரில் சிறந்த படமாக என் படம் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.

என் படங்களுக்கு தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டுமென்பது தான் என் விருப்பம். முதல் படத்தில் அதை செய்ய முடியவில்லை. இந்த படத்தில் உதவி இயக்குனர் சொன்ன ஒரு தலைப்பு பொருத்தமாக இருந்தது, அதையே வைத்து விட்டோம்.

குழந்தைகளை நடிக்க வைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அந்த மாதிரி படங்கள் செய்து விடக்கூடாது என நினைத்தேன், ஆனால் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு குழந்தை கதாபாத்திரம் அமைந்தது. அதில் மானசி சிறப்பாக நடித்து கொடுத்தார் என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

(இந்த மானசி காமெடி நடிகர் கொட்டச்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.)

என்னை விரும்புகிற, ரசிக்கிறவர்களின் படங்களில் நான் வேலை செய்ய விரும்புவேன். அப்படி என்னை ரசித்த அஜய் படத்தில் நான் வேலை செய்தேன். ஆக்‌ஷன், காமெடி, காதல் என எல்லாமே இந்த படத்தில் இருந்தது.

ஆண்டனிக்கு பிறகு இந்த படத்தின் எடிட்டரை எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பில் எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனையிலேயே இருப்பவர் அஜய். தயாரிப்பாளர் ஜெயகுமார் செலவை பற்றி கவலைப்படாமல் இயக்குனர் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்தார் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர்.

துப்பாக்கியில் இருந்து அஜய் உடனான என் நட்பு தொடர்கிறது. இந்த படத்தை ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. ஒவ்வொரு கலைஞரையும் தன்னோடு அரவணைத்து அழைத்து செல்பவர். ஒரு விஷயம் சரியாக வரும் வரை விடமாட்டார் அஜய் என்றார் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன்.

திரில்லர் எனக்கு மிகவும் பிடித்த ஜானர். இதில் திரைக்கதையில் புகுந்து விளையாடலாம். இரண்டு மணி நேரம் இமைக்காமல் ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த தலைப்பை வைத்திருக்கிறோம்.

விமர்சகர்களையும் இந்த படம் திருப்திப்படுத்தும் என்று நான் உறுதியாக சொல்வேன் என்றார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

இந்த படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இங்கு வர முடியவில்லை. இது திடீரென திட்டமிட்ட விழா, இசையமைப்பாளருக்காக தான் இந்த விழாவையே நடத்தியிருக்கிறோம்.

தனி ஒருவன் படத்தை ஆதியின் பின்னணி இசைக்காகவே 5 முறை பார்த்தவன் நான். எல்லா நடிகர்களையும் தேர்வு செய்து முடித்த பிறகு இயக்குனர் அஜய், நிறைய செலவு பண்ணிட்டீங்க, சின்ன இசையமைப்பாளரே போதும் என்றார்.

நான் தான் பரவாயில்லை என்று சொல்லி, ஹிப் ஹாப் தமிழாவை ஒப்பந்தம் செய்தேன். தனி ஒருவன் படத்துக்கு பிறகு ஆதியின் மிகப்பெரிய கமெர்சியல் ஹிட் ஆக இது இருக்கும்.

ராஷி கண்ணா படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு எங்களுக்காக இங்கு வந்திருக்கிறார். அவரை போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்கு பிறகு அதர்வாவை வைத்து வைத்து ஆக்‌ஷன் படம் எடுக்க திட்டமிட்டிருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக படம் பெரிதாகி கொண்டே போனது. நயன்தாரா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். கதைக்காக முடியை வெட்டி, தனது தோற்றத்தை மாற்றி மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்.

வில்லன் கதாபாத்திரத்துக்கு கௌதம் மேனன் சார் தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் அனுராக் காஷ்யாப் நடித்த அகிரா படத்தை பார்க்க நேர்ந்தது. அவரை அணுகினோம், அவரும் ஒப்புக் கொண்டார்.

நானும் பெரிய ஆர்டி ராஜசேகர் ரசிகன், அவரை உள்ளே கொண்டு வந்தோம். நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க ஒரு நடிகர் தேவைப்பட்டார், அதை விஜய் சேதுபதி மட்டுமே செய்ய முடியும். அவர் கதாபாத்திரம் தான் கதையின் முக்கியமான விஷயம். 15 நிமிடம் வந்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு விடுவார்.

ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கணும்னு தான் இவ்வளவு தாமதம். திரில்லர், எமோஷன், ஆக்‌ஷன் விரும்புபவர்கள் என எல்லோருக்கும் இந்த படம் பிடிக்கும். தனது பட வேலைகளுக்கு நடுவிலும் அனுராக் காஷ்யாப் சாருக்கு டப்பிங் பேசிக் கொடுத்த மகிழ் திருமேனி சாருக்கு நன்றி என்றார் தயாரிப்பாளர் சி ஜே ஜெயகுமார்.

துப்பாக்கி படத்தில் அஜயும், நானும் முருகதாஸ் சாரிடம் ஒன்றாக வேலை செய்தோம். படத்தில் ஒரு விஷயம் சரியில்லை என்றாலும் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவர் அஜய் என்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
நான், விஜய், முருகதாஸ் மூவரும் டிமாண்டி காலனி படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். அப்போதே விஜய் இந்த இயக்குனரை வைத்து படம் பண்ணுங்கனு என்று என்னிடம் சொன்னார்.

நல்ல திறமையான ஒரு இயக்குனர். ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். சின்ன படத்தை பெரிய படமாக்கியது தயாரிப்பாளர் ஜெயகுமார். ஹிப் ஹாப் தமிழா ஆதி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதன், இசையமைப்பாளர் என்றார் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.

இமைக்கா நொடிகள் படத்தில் வேலை செய்த எல்லோருக்கும் மிக முக்கியமான படம். தனது சக்திக்கும் மீறி, ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் இந்த மாதிரி ஒரு பிரமாண்டமான படத்தை தயாரித்திருக்கிறார் ஜெயகுமார். படத்தில் பின்னணி இசை தான் ஹீரோ, இந்த படத்துக்கு நீ தான் இசையமைக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்.

பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். பாடல்களை தாண்டி ருத்ரா என்ற தீம் இசை ஹைலைட்டாக இருக்கும். மகிழ் திருமேனி சார் தான் அனுராக் காஷ்யாப் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசுவார் என ஆரம்பத்திலேயே தனக்குள் முடிவு செய்து விட்டார்.

படத்துக்காக தான் நினைத்ததை செய்து முடிப்பவர் அஜய் என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
விழாவில் நாயகி ராஷி கண்ணா, நடிகர்கள் ரமேஷ் திலக், உதயா, நடிகை ரெபேக்கா, தயாரிப்பாளர்கள் மதன், கதிரேசன், தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ், , இயக்குனர்கள் மகிழ் திருமேனி, மனோஜ்குமார், பிரவீன் காந்தி, ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டன்’ சிவா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Imaikka Nodigal team reveals reason for the movie title

மூன்று காமெடி நடிகர்களுடன் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் துவக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ மற்றும் வேலைக்காரன் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.டி.ராஜா 24AM ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை குறித்து ஆர்.டி.ராஜா கூறும்போது, “எங்கள் முந்தைய படங்களான ரெமோ மற்றும் வேலைக்காரன் வெற்றியின் மகிழ்ச்சியை விட, இப்போது எங்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறோம்.

ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதை கண்டு வியந்தேன்.

அதே சமயம், தயாரிப்பாளராக இந்த படத்தைப் பற்றி நான் எப்படி வடிவமைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியும் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன.

உலகளவில் புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் அவரது மாய வித்தைகளை செய்ய தவறியதில்லை. ஒரு நிறுவனமாக எங்கள் வளர்ச்சிக்கு எப்போதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இயக்குனர் முத்துராஜ், படத்தில் பணிபுரியும் மற்ற புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் சவாலுக்கு தயாராகி விட்டார்.

நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த ஃபேண்டஸி பொழுதுபோக்கு படத்தில் நகைச்சுவைக்கும் குறைவில்லை.
கருணாகரன், யோகி பாபு, விஜய் டிவி புகழ் கோதண்டம் போன்ற உடனடியாக சிரிக்க வைக்கும் நடிகர்கள் இருக்கும் போது நகைச்சுவைக்கு வேறு என்ன தேவை.

நடிகை பானுப்பிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.

Sivakarthikeyan starts his next movie with 3 comedy actors

மீண்டும் கிருஷ்ணா-பிந்துமாதவி இணைய கழுகு-2 இன்று ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்த படம் கழுகு.

யுவன் இசையமைத்திருந்த இப்படத்தில் கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

சேகர் மதுபாலா இணைந்து தயாரித்த இந்த படம் கடந்த 2012ல் ரிலீஸானது.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணி அப்படத்தின் 2ஆம் பாகத்தில் இணைந்துள்ளது.

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிக்க சத்யசிவா இயக்க, யுவன் இசையமைக்கிறார்.

இதன் 2ஆம் பாகத்தை திருப்பூர் பிஏ. கணேசன் தயாரிக்கிறார். இதன் சூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விநியோகஸ்தர் சிங்காரவேலன் இப்போதே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Krishna and Bindu Madhavi again romance for Kazhugu2 Shoot begins today

More Articles
Follows