‘கன்னி மாடம்’ பட அதிரடி வெற்றியுடன் ‘உறியடி’ விஜயகுமாருடன் இணையும் போஸ் வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உறியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘உறியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதுகிறார்.

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி இயக்கும் இந்த புதிய படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

‘உறியடி’ விஜயகுமார், பசுபதி மற்றும் பலர்
தயாரிப்பு: மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார்
கதை, இயக்கம்: போஸ் வெங்கட்
திரைக்கதை, வசனம்: பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு: இனியன் ஜே.ஹாரிஸ்
படத்தொகுப்பு: ஜியான் ஸ்ரீகாந்த்
கலை: சிவசங்கர்
இசை: ஹரி சாய்
பாடல்கள்: விவேகா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Director Bose Venkat team up with Uriyadi Vijayakumar

இனிமே வழக்கிலிருந்து ரெஸ்ட் எடுக்கலாமா..? நடிகர் விஜய்க்கு ஆதரவாக குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த பிகில் & மாஸ்டர் பட சம்பளம் தொடர்பாக அந்த பட தயாரிப்பாளர்கள் & விஜய்யிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் விஜய்யின் சம்பளம் & வருமானவரி சோதனை தொடர்பாகவும் நடிகை குஷ்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில்…

“விசாரணை முடிந்தது; நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது.

#பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now ?”

எனப் பதிவிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ இசை வெளியீடு: ஐடி ரெய்டு அரசியல் பேசும் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்பட சூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து விஜய்யை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பிகில் பட சம்பளம் & வசூல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

அதன் பின்னர் மார்ச் மாத தொடக்கத்திலேயே மாஸ்டர் பட சம்பளம் குறித்து 2 முறை விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர் விஜய் சரியாக வருமான வரி செலுத்தியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே மிஸ்டர் க்ளீன் விஜய் என ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்தனர்.

ஆனாலும் விஜய்யிடம் தொடர்ந்து இதுபோல் சோதனை நடப்பதால் இது அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை (மார்ச் 15) மாலை ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

இதில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதியில்லை.

செய்தியாளர்கள் & படக்குழுவினருடன் கூடிய விழாவாக வடிவமைத்துள்ளனர்.

இதன் நேரலை சன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.

இது போன்ற விழாக்களில், விஜய் அரசியல் பேசுவார். இந்த முறை வருமான வரித்துறை சோதனை குறித்து அதில் தன் தரப்பு நியாயங்களை சொல்வார் என சொல்லப்படுகிறது.

இதனை வழக்கம்போல ஒரு குட்டிக் கதை மூலமாக சொல்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

விரும்பத்தக்க நபர்கள்: தனுஷ் & சிம்புவை முந்திய சிவகார்த்திகேயன் & அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் மிமிக்கிரி & நிகழ்ச்சி தொகுப்பாளர் என தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கியவர் சிவகார்த்திகேயன்.

2012 முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார்.

தற்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமடைந்த ஆண் நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் தான் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

இரண்டாவது இடம் இசையமைப்பாளர் அனிருத்.

கடந்த ஆண்டு அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் இதோ…

மூன்றாவது இடம் –தனுஷ்.

நான்காவது இடம்– அதர்வா

ஐந்தாவது இடம்– துருவ் விக்ரம்

ஆறாவது இடம்– கவின்

ஏழாவது இடம்– அர்ஜுன் தாஸ்

எட்டாவது இடம்– ஹரிஷ் கல்யாண்

ஒன்பதாவது இடம்–ஹிப்ஹாப் ஆதி

பத்தாவது இடம்–அர்ஜுன் தாஸ்

பதினோராவது இடம்–முகென் ராவ்

பன்னிரண்டாவது இடம்–சித் ஸ்ரீராம்

பதிமூன்றாவது இடம்–ஆதி

பதினான்காவது இடம்–ஆதித்யா பாஸ்கர்

பதினைந்தாவது இடம்–விஷ்ணு விஷால்.

பதினாறாவது இடம்– ஜீவா.

பதினேழாவது இடம்– சிம்பு.

பதினெட்டாவது இடம்– பிக் பாஸ் புகழ் தர்ஷன்.

துரோகம் செய்த விஷாலை சும்மா விட மாட்டேன்.. – மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பூர்ணா நடித்த ‘கண்ணாமூச்சி’ வெப் தொடர் அறிமுக நிகழ்ச்சியில் சென்னையில் நடைப்பெற்றது.

இதில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டு பேசியதாவது:-

“விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தை இயக்கினேன்.

அந்த படம் வெற்றி பெற்றதால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத சொன்னார். எழுதினேன்.

அந்த கதை சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டி நானே படத்தை தயாரிக்கிறேன் என்றார்.

இந்த கதை தயாராக ரூ.35 லட்சம் செலவு செய்ததாக விஷால் தெரிவித்துள்ளார். இதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க தயாரா?

32 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு நாளைக்கு ரூ.15 லட்சம் செலவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி 32 நாட்களுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம்தான் ஆகும். ஆனால் ரூ.13 கோடி செலவு என சொல்கிறார்.

விஷால் சொல்வதில் உண்மை இல்லை.

அவரை சகோதரனாக பார்த்தேன். ஆனால் துரோகம் செய்தார்.

தயாரிப்பாளர்கள் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என கூறியுள்ளார்.

சினிமா இல்லாவிட்டாலும் என்னால் பிழைக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன்.

ஆனால் விஷாலை சும்மா விடப்போவது இல்லை”

இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

அரசியல் மாற்றம் குறித்து சிந்திக்கும் மக்கள்.. ; மீடியாக்களுக்கு ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் மார்ச் 12ல் தனது அரசியல் பயணம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசினார நடிகர் ரஜினிகாந்த்.

அதில் 1996-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது.

அப்போதே முதலமைச்சர் பதவி வேண்டாம் என உறுதியாக இருந்தேன்.

மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன்.

முதல்வர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல.

கட்சி வேற.. ஆட்சி வேற என்ற ஒரு விஷயம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என பேசினார்.

இந்த நிலையில் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்…

அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

என நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows