என் இனிய தமிழ் மக்களே… தனிமைப்படுத்தப்பட்டார் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் எவரும் எதிர்பாராத வகையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களை கொரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா சென்னையில் இருந்து தேனியில் உள்ள தனது சொந்த ஊரான அல்லிநகரத்துக்கு அனுமதி பெற்று சென்றுள்ளார்.

உடல் நலமில்லாமல் இருக்கும் தன் சகோதரியை பார்க்க சென்றுள்ளார்.

அந்த மாவட்ட எல்லையில் இயக்குனருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

கொரோனா தொற்று எதுவும் இல்லாததால், அவரை ஊருக்கு செல்ல அனுமதித்தனர்.

ஆனாலும் அதிகம் பாதிப்புக்குள்ளான சென்னை சிவப்பு மண்டலத்தில் இருந்து பாரதிராஜா வந்துள்ளதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்களாம்.

Director Bharathiraja quarantined him self

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 65; தமன் இசையில் 2021 தீபாவளிக்கு ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் தர்பார் படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’ படங்களைத் தொடர்ந்து இந்த கூட்டணி இணைகிறது.

சன் டிவி தயாரிக்கும் இந்த படம் ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார்.

ஏஆர். ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைக்கலாம் என எதிர்பார்த்த நிலையில் தமன் இசையமைக்கிறார் என ஒரு தகவலும் வந்துள்ளது.

தமன் இசைக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல மார்கெட் உள்ளதால் முருகதாஸ் தமனை புக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 2021 தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Thalapathy 65 movie set to release on Diwali 2021

சம்பளம் வாங்கும் ரஜினி தயாரிப்பாளருக்கே அரிசி-பருப்பு கொடுப்பதா.?; புது சர்ச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பாலும் பல நாடுகளின் ஊரடங்காலும் ஒட்டுமொத்த உலகமே முடங்கியுள்ளது எனலாம்.

இதில் திரை உலகமும் விதிவிலக்கு அல்ல.

கோடிகளில் புரளும் சினிமாத் துறை இந்த ஊரடங்கால் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நலிவடைந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்று ரஜினியினம் 750 + 250 தயாரிப்பாளர்களுக்கு 20 டன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

இந்த செய்தியை நம் தளத்தில் முதன்முதலாக வெளியிட்டு இருந்தோம்.

தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் தயாரிப்பாளர் திருமலை என்பவரும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த உதவி தற்போது தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே. சுரேஷ் கூறியுள்ளதாவது…

தயாரிப்பாளர்கள் ரஜினியின் நிவாரணம் உதவி பெறுவது தன்மான இழுக்கு. அவர்கள் இதை பெற கூடாது.
வசதியான தயாரிப்பாளர்கள் மற்ற தயாரிப்பாளர்களுக்கு ரூ. 50000 அல்லது ரூ. 1 லட்சம் கொடுத்து உதவியிருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு தயாரிப்பாளர் சுரேஷ் என்பவர்… தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்குகிறவர் நடிகர் ரஜினி. அவரிடம் அரிசி பருப்பு வாங்குவது கேவலமானது. அது சரியானது அல்ல.

லாரன்ஸ் செய்த உதவியை போல அவர் பெரும் தொகையை கொடுத்திருக்கலாம். அதை தயாரிப்பாளர்கள் பிரித்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளரும் பாபு கணேஷ் அவர்கள் கூறியுள்ளதாவது…

ரஜினிகாந்த் இது போன்ற நிவாரணங்களை கொடுப்பதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டு ஒரு படத்தில் நடித்து கொடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Rajini donation to Film Producers became controversy

சம்பளத்தை குறைத்த விஜய் ஆண்டனி..; ரஜினி-விஜய்-அஜித் செய்வார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாகவும் ஜெயித்து விட்டார்.

நான், சலீம், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை, ‘காளி’ திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு ‌கோடி ரூபாய் அளவில்).

இதன் மூலம், தான் தற்போது நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி கூறுகையில்,

கொரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தெரிவித்து விட்டார்.

இந்த சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார் என அவர் கூறியுள்ளார்.

இவரைப் போல அதிக சம்பளம் வாங்கும் ரஜினி, விஜய் அஜித் சூர்யா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் செய்வார்களா? என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ம்…ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Vijay Antony slashes his salary to support Film Producers

அரசே குடியை கெடுக்கலாமா.?; கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் வேண்டுகோள்.

மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. அன்று 150 பெண்களும் கண்ணீரோடு டாஸ்மாக் கடைகளை இனி திறக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தோம்.

மீண்டும் லட்சக்கணக்கான பெண்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்….

1. 45 நாட்களுக்கு பிறகு திறப்பதால் பெரும் கும்பலாக குடிக்க வருவார்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது. இதனால் நோய் தொற்று ஏற்படும்.

2. டாஸ்மாக்கில் குடிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள். வேலை இல்லாமல் பண கஷ்டத்தில் இருக்கும் இப்போது கடன் வாங்கி குடித்து கடனாளி ஆகி விடுவார்கள்.

குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து தற்கொலைகள் நிகழ வாய்ப்புள்ளது. விபத்து, திருட்டு,வழிப்பறி, கற்பழிப்பு,கொலை போன்றவற்றிற்கும் வழிவகுக்கும்.

3. குடிப்பவர்கள் போதையுடன் இருக்கும் போது கண்ட இடத்தில் எச்சில் துப்புவார்கள், மற்றும் சிகரெட்,பீடி புகைத்து புகையை வெளியிடுவார்கள். இதனால் கிருமி தொற்று ஏற்படும்.

4. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் உடலில் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது. ஆனால் குடிப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து கொரோனோவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

5.ஊரடங்கால் 45 நாட்கள் குடிக்காமலும் வாழ முடியும் என நிரூபித்துள்ளார்கள்.

உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும் அவர்களை மீண்டும் குடிப்பதற்கு அரசே வழி வகை செய்யலாமா.

குடி குடியை கெடுக்கும் என்ற வாசகம் ஒவ்வொரு பாட்டில்களிலும் அரசே எழுதி வைத்துள்ளது. அரசே குடியை கெடுக்க துணை போகலாமா

6.டாஸ்மாக் அரசு பணியாளர்களும் பூரண மதுவிலக்கே மக்களுக்கும் ,அரசுக்கும் நல்ல தீர்வு என்று தங்களுக்கு கடிதம் தந்துள்ளார்கள்.

7 மாண்புமிகு அம்மா அவர்கள் படிப்படியாக குறைத்து முழு மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று பதவி ஏற்றதும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற, அவர்களின் கனவை நனவாக்க தங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அம்மாவின் அரசு பெண்களின் அரசு! கோடானு கோடி பெண்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்!

இவ்வாறு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.

PT Selvakumar request TN Govt to reconsider Tasmac opening order

14 வயதுக்குட்பட்டோருக்கு நடனப் போட்டி.: வீட்டிலேயே ஆடுங்க 50000-ஐ அள்ளுங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நமது மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப்படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக உருவாக்கிய கொரோனா கானா பாடலுக்கு சிறப்பாக நடனமாடி வீடியோ அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

உலககெங்கிலும் வாழும் அனைவரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

நடனமாடிய வீடியோவை +91 9150566759 என்ற whatsapp நம்பருக்கு மே 25 (2020) ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் அனுப்பி வைக்கலாம். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

முதல் பரிசு : 25,000
இரண்டாம் பரிசு : 15,000
மூன்றாம் பரிசு : 10,000

கட்டில் திரைப்படப்பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படும்.

உலகமே முடங்கி கிடக்கும் இந்த தருணத்தில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு இம்மாதிரியான போட்டிகளையும் அறிவித்து குழந்தைகளை மகிழ்விப்பதில் “கட்டில்” திரைப்படக்குழு பெருமை கொள்கிறது என்று அப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்.

Kattil movie Corona Dance competition for Childrens

More Articles
Follows