தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதில் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், அத்மியா ராஜன் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார்.
சில தினங்களுக்கு முன்பு ஜோசப் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.
இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார்.
தமிழில் நாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
விசித்திரன் எனப் பெயர் வைத்து இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.
Director Balas next film is titled Visithiran
